Friday, June 28, 2013

Share

என்னை மறந்தேனடா...!

உன்னை கண்ட
அந்த நொடி
என்னை
மறந்தேனடா...!
ஆகாயத்தை
அண்மித்ததாய் 
ஆனந்தம் 
கொண்டேனடா...!

-தோழி பிரஷா-

Thursday, June 13, 2013

Share

வாழ்வில் ஆயிரம் பாடம்

சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!

உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!

தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!

காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!

கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும் 
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????

உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!

ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!

--தோழி பிரஷா--
14.06.2013
Share

உண்மையான் பாசம்...!

சந்தோஷங்களை சேமித்து
துன்பங்களை களைந்து
இன்பங்களில் கூடி
நல்லவைகளை சேமித்து
பிழைகளை மன்னித்து.
விவாதங்களை தவிர்த்து
உறவுகளை அணைப்பதே 
உண்மையான் பாசம்...!

தோழி பிரஷா
-12.06.2013
Share

என் செல்ல மகளே..!

ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!

தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!

தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!

என் தேவதை நீயடி-உன் 
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால் 
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!

-தோழி பிரஷா-
07.06.2013
Share

மனித வாழ்வில்..!

வாழ்க்கை
அது பட்டம்
போன்றது!
நுாலைப் பிடித்திருப்பவரின்
திறமையின் நிமித்தம்
அது உயரப் பறக்கும்.
அதுபோல்
வாழ்க்கையும்
பாசம் எனும்
பிணைப்பில் சரியாக 
அமைந்து விட்டால்
வேதனைகளும் 
சோதனைகளும்
வேண்டாத 
விருத்தாளிகளாவர்
மனித வாழ்வில்..!

-தோழி பிரஷா-
26.05.2013
Share

உள்ளம்...!


பாசம் கொண்ட 
உள்ளங்கள்
ஏனோ..!
பாசாங்காய் பேசி 
மறையும் போது
வேர் அறுந்த மரமாய்
உள்ளம் வாடி தான் 
போகின்றது...!

-Tholi Pirasha-
24.05.2013
Share

வாழ்வில்...!

காதல்..!
சிரித்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

நட்பு...!
வலியால்
துடிக்கும் போது
எழுந்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

-தோழி பிரஷா-
23.05.2013
Share

தேடி தேடி தோற்றேன்..!

எங்கே 
பாசமான உள்ளம்..!
உண்மையான பாசம்..!
விசுவாசமான நேஷம்...!
எதற்காகவும் என்னை 
இழக்காத உறவு...!
எனக்காகவே வாழும் 
ஜீவன்...!
தேடி தேடி தோற்றேன்..!
தோல்வியே வாழ்வானது
யாவுமே போலியானது..!

-தோழி பிரஷா-
22.05.2013
Share

ஒரே ஒரு சொர்க்கம்

காலத்தின் 
ஆளுகைக்குள்
எங்கும் கிடைக்காத
ஒரே ஒரு
சொர்க்கம்
அம்மா.

-தோழி பிரஷா-
12.05.2013
Share

மனதின் போராட்டம்...!

நேற்றய பொழுதில்
நிச்சயம் உன் 
மனதை ஆழமாய் 
தெரிந்து கொண்டேன்
உன்னுள் நானில்லையென..!

துடுப்பில்லா படகாய்
தள்ளாடும் என் மனம்
புரிந்திடா உன் முன்
போலியாய் பேசிடத்தான்
முடியவில்லை...!

என் மேல் 
பலமுறை வலியெனும் 
நெருப்பை வீசி சென்றாய்...!
மிண்டும் அணைத்திடும்
நீராய் என் முன் நீ!!!!

ஆனால்
அணையாத வலி தீயை
அள்ளி வீசி 
மறைந்தாய் நேற்றய 
பொழுதினில்...!
அணைத்திட என்னாதே..!
உன்னையும் 
வலியெனும்
தீ பற்றி கொள்ளும்..!

உன் எண்ணங்கள் மாறலாம்
உடை நடை மாறலாம்
பாசங்கள் மாறலாம்
என் மேல் வீசிய வலியனை
உன்னை நம்பும் 
இன்னொருவர் மேல்
வீசிவிடாதே...!

உன் எண்ணம் போல்
யாவும் அமையாது..!
நீ நினைப்பது போல்
எல்லோர் உள்ளங்களும்
இருக்காது..!
மீண்டும் தப்பு செய்யாதே
மீண்டிட முடியாது 
துடிக்காதே...!

உன்னை நம்பும் ஜீவனை
உயிருள்ளவரை 
உயிரை கொடுத்து 
காத்து நில்..!

உன் வாழ்வில் 
யாவும் என்னுடன்
முடிவுற வேண்டும்
உன்னிடம் பாசத்துக்காய்
யாரையும் ஏங்க வைத்த 
ஏழ்மை படுத்தி விடாதே..!

பணத்தில் வறுமை-மனதில்
பாதிப்பு ஏனோ குறைவு..!
பாசத்தில் வறுமை
புற்று நோயாய்
நாளும் இறக்க 
வைத்து விடும்...!

-தோழி பிரஷா-
03.05.2013
Share

என்னுள் நீ...!

பெளர்ணமிகள் பல
கடந்து விட்டன
எனினும்
அவள் நினைவுகள்
மட்டும்
பட்டை தீட்டிய
வைரமாய் 
என்னுள்.....

-தோழி பிரஷா-
27.04.2013
Share

ஒற்றை ரோஜாவாய்...!

முட்கள் 
நடுவே சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்..!
தனித்தே 
சிரித்திருப்பேன்
உன்னையும்
உன்னோடான
நினைவுகளையும்
என்னுள் சுமந்தபடி..!

-தோழி பிரஷா-
23.04.2013

Tuesday, April 30, 2013

Share

ஆயுள்


சேர்ந்து வாழும்
காதலை விட
பிரிந்து வாழும்
காதலுக்கே
ஆயுள் நீளமானது..!

-தோழி பிரஷா-
22.04.2013

Friday, April 19, 2013

Share

பாசம்


பாசம் 
காலம் கடந்து
பாதை மாறிப் 
போனாலும்..!
அது தந்த
சுமைகள்
சுகங்களும்
என்றும் அழியாதவை..!

-தோழி பிராஷா-
18.04.2013
Share

அன்னை


அள்ளிக் கொடுக்கும்
அன்னை 
அன்பை வெல்ல
அகிலமதில்
 ஏதும் இல்லை...
அன்னையை 
நாளும் தொழுதிடு...
அன்பால் 
அகிலமதை வென்றிடு”

-தோழி பிரஷா-
17.04.2013
Share

நினைவுகள்


மனதுள் போராட்டம்
மகிழ்வில்லா வாழ்க்கை..!
மாசுபட்ட உள்ளங்கள் நடுவே
மாறிடா என் உள்ளம்..!

மின்மினியாய் வந்து செல்லும்
சில சந்தோஷங்கள்
மீண்டும் கிடைக்குமா?
மீண்டிட தான் முடிந்திடுமா?!

முன்னோக்கி சிந்தித்தால்
முள்ளாக பல நினைவு
மூச்சுக் குடிக்கும்
மூலதனமாய் சோகங்கள்..!

மெல்லிய தென்றலாய் 
பல நினைவுகள்
மெல்லிய வலியாய் 
சில நினைவுகள்
மேடை போட்டு காட்டுதிங்கு
மேலோர் கீழோர் உள்ளங்களை..!

மையம் கொண்ட 
மன உளச்சல்
மொத்தமாய் 
கொன்றது உள்ளமதை..!
மோதலில் தோற்ற 
படைவீரனாய்
மௌனம் கொண்டது 
என் விம்மல்...!

-தோழி பிரஷா-
17.04.2013

Thursday, April 18, 2013

Share

நிஜமான ஒரே ஜீவன் நீ


மொத்தமாய்
கொள்யைடித்தாய்
என்னை..!

குழந்தையாய் 
தவழ துடித்தது
மனம் 
உன் மடியில்....!

வந்தாய் என்னுள்
தந்தாய் பலதை
விதைத்தாய் நம்பிக்கையை
என்னுள்
வளர்கிறேன் 
ஆல விருட்சமாய்
இன்னும்...!

சிரிக்கிறது
பல முகம்
போலியாய்..
வெறுக்கிறாய்
இன்று.
சிரிக்கிறேன் நான்.
நிஜமான ஒரே
ஜீவன் நீ என...!

-தோழி பிரஷா-
15.04.2013

Share

அனுபங்கள்


அனுபங்கள் 
கற்று தந்தது
வாழ வழி 
மட்டும் அல்ல
வாழ்வில் 
வந்து போகும்
மாற்றங்களையும்
மாறி செல்லும் 
மனித
 குணங்களையும்...

”வாழ்வில் வந்து போகும் துன்பங்கள்
வாழ்வின் வழிகாட்டிகள்”

-தோழி பிரஷா
12.04.2013
Share

நிழலாய் ..!


கலங்கரை விளக்காய்
காத்திருந்து...!
உருகியது உள்ளம்
பெரிகியது கண்ணீர்...!
விழிகளும் தோற்றது
கசிந்திட கண்ணீர் இன்றி...!
நினைவுகள் மட்டும்
நிழலாய் என்னுடன்
நீயோ நிம்மதியாய்
என்னை மறந்து...!

-தோழி பிரஷா-
11.04.2013

Share

ஒற்றை நிலவுஒற்றை நிலவு
ஓராயிரம் 
விண்மீன்கள்
பற்றியெரியும் 
பல்லாயிரம்
 நினைவுகள்-என்
உறக்கத்தை 
தொலைத்த
உறங்காத விழிகள்..!

-தோழி பிரஷா-
09.04.2013

Sunday, April 14, 2013

Share

தேடலும், ஊடலும்


காதலும்
காதலர்களும்
இனிமையானதே
ஆனால்
அவர்களின்
தேடலும், ஊடலும்
இன்பத்தையும்
துன்பத்தையும்
பிரசவிக்கும்
வாய்ப்பை 
அளிக்கிறது!

-தோழி பிரஷா-
08.04.2013
Share

இழப்புக்கள்


நேற்றைய 
இழப்புக்கள்
இன்றைய - என்
வெற்றியின்
மூலதனங்கள்..

-தோழி பிரஷா-
08.04.2013
Share

நிஜங்களை சுமந்து"நீ 
என்னை மறந்
து பல நாட்கள்
தெரிந்தும் 
ஏனோ மனம்
அதை ஏற்க தான் 
மறுக்கின்றது..
நிஜங்களை சுமந்து
உன் நினைவுகளோடு
நித்தம் நான்..”

-தோழி பிரஷா-
06.04.2013

Wednesday, April 3, 2013

Share

யன்னல் ஓரத்து ஒற்றை ரோஜா...


சில்லென்று காற்றில்
சிணுக்கிக் கொண்டே
எழுந்திருந்தேன்.
அதிகாலை நேரத்தில்
அறிவுரை சொன்னது - என்
யன்னல் ஓரத்து
ஒற்றை ரோஜா.
காலையில்
உயிரத்து
மாலையில் மடியும் 
மலர்கள் எல்லாம்
எவ்வளவு சந்தோஷமாய்
வாழ்கிறேன
மனிதனே!
வாழும் சொற்ப
காலத்தில்
சந்தோசமாக வாழு என...”

”நாளை வருவதை எண்ணி இன்றே வாடிவிடாதே..!” இன்றய நாளில் வருவதை சந்தோஷமாக ஏற்று வாழ பழகிக்கொண்டால் மனதில் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்...”

<3<3தோழி பிரஷா<3<3
<304.04.2013<3

Tuesday, April 2, 2013

Share

இதயவீட்டில்


இதயவீட்டில்
இரக்கமற்றவர்கள்
குடியேற்றம்
கலகத்துடன்
சலணத்தையும்
நாளும் தந்து தான்
செல்கின்றது..!
இறைவா..!
இரக்கமற்றவர் மனதினிலே
ஈரத்தை கொடுத்திடு
ஒரு துளி 
அன்பென்றாலும் கசியட்டும்
அவர் தம் மனதிலிருந்து...!

தோழி பிரஷா
02.04.2013

Monday, April 1, 2013

Share

நானும் ஒரு குழந்தையாய்....!


வேதனையால்
துடிக்கிறேன்.
நான் இருக்கிறேன்
உன் சுமை தாங்க..
அணைத்துக் கொள்கிறது,
அன்பினால் ஒரு கரம்...!
முழுவதுமாய் 
எனை மறந்து
அவன் நெஞ்சில் 
சாயும் போது
தவழ்கிறேன்
நானும் ஒரு குழந்தையாய்....!

--தோழி பிரஷா--
02.04.2013

Wednesday, March 27, 2013

Share

இன்று முதல்....

அம்மா
ஏன் என்னை
பெற்றாய்
பாசத்தின்
ஏழ்மையான என்னிடம்
வஞ்சனையால்
வதைக்கின்றனர் 
யாவரும்!

சிதறிக் கிடக்கும்
சுயநலம் 
இல்லாத உறவுகளை
தேடி அலைகிறேன்
எங்கும்
ஏமாற்றமாய்
என் தேடல்..!!

பணம்
பாசம் விற்கும்
பாவப் பொருளாய்
இதயத்தை 
கீறு போடும்
ஆயுதமாய்
இன்று 
என் வாழ்வில்.
தொலைந்தது
பாசம்
இடிந்தது இதயம்...!

ஆயிரத்தில்
ஒன்றில்
அலைந்து திரியும்
நடை பிணமாய்
நானும்
இன்று முதல்....

-தோழி பிரஷா-
25.03.2013

Thursday, March 21, 2013

Share

உன் வரவுக்காய்..


உன் நினைவுகளில்
நனைந்தபடி...
இழக்கும்
ஒவ்வொரு
மணித்துளிகளும்
உன் வரவுக்காய்
காத்திருந்து
கரைந்து போகின்றது
கண்ணீர் துளிகளாய்..!

♥-தோழி பிரஷா-♥
11.03.2013
Share

இதயக்கூட்டில்


மனதை குத்தி செல்லும் 
மனித மனங்களை 
மாற்றிட தினம் வேண்டி
தோற்றுத்தான் போகின்றேன்...!!!

இரக்கமற்ற இதயங்கள் நடுவே
இரையாகித்தான் போனேன்
இறைவா..!!!
இரங்கிட மாட்டாயா???
இவள் துன்பம் துடைத்திட மாட்டாயா?

வாழ்வின்
வழியெங்கும் போராட்டம்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளுடன் 
தினம் நகரும் மணித்துளிகள்...!

இதயக்கூட்டில்
இரக்கமற்றவர்களின் 
கிறுக்கல்கள் வடுக்கலாய்...!
அழித்திட பல வகை புச்சுக்கள்
அழித்திட முடியுமா? 
அழியாத வடுக்களை...!

♥-தோழி பிரஷா-♥
20.03.2013
Share

அற்புத கலையாய்...


மனம்
கடலை விட
ஆழமானதென
அறிஞர்களின் 
ஆய்வுகளின் வெளியிடை.
அந்த 
ஆழத்தின்
தூரம் அறியும்
இரு உள்ளங்களின்
தேடலாய்...
ஆசைகள் 
கனவுகள்
கட்டி வளர்க்கும்
அற்புத கலையாய்...
"காதல்"

♥-தோழி பிரஷா-♥
11.03.2013
Share

உறவுகள் எனும் மேடையில்


கடிகாரம்
இழக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
என் சுவாசத்
தொகுதியினை
கூறு போட்டுச்
செல்கின்றன
உறவுகள் எனும்
மேடையில்
நானும் ஒரு
நடி(க)கை(னா)யாக
மாறும்போது...

♥-தோழி பிரஷா-♥
06.03.2013
Share

திறந்து விடு உன் கண்ணை..!


இரக்கமற்ற இறைவா
இதயத்தோடு
எனை ஏன்
படைத்தாய்?
உன் திருவிளையாடலை
தொடர
மனம் என்ன
விளையாட்டு மைதானமா?
நித்தமும்
கண்ணீரால் 
அபிஷேகம் செய்கிறேன்
குளிரவில்லையா
உன் மனம்?

சூரியனும், சந்திரனும்
இயற்கையின்
நியதியாகும் போது
எனக்கு மட்டும்
ஏன் 
இருளை வரமாய் 
அழித்தாய்?

கல்லான கடவுளே
மனிதனாக பிறந்தது
பாவமா?
இதற்கான பதிலை
எப்போது 
சொல்லப் போகிறாய்?

கண்களின் ஓரம்
திரட்டும் கிடக்கும்
தண்ணீர் திட்டுக்கள்
இன்று காயும்
நாளை காயும்
என காலம்
நீண்டே செல்கிறதே
எப்போது இதற்கான
முற்றுப்புள்ளி?

மௌனம் காக்கும்
பரம்பொருளே
திறந்து விடு
உன் கண்ணை
நிம்மதியாய் 
உறக்கம் கொள்ள
நீண்ட நாளாய் 
காத்திருக்கிறேன்.........

-தோழி பிரஷா-
23.02.2013
Share

எதுமில்லை...!


என்னில் எதுமில்லை
கண்ணில் ஈரமில்லை
சிந்தனையில் சலசலப்பில்லை
எண்ணங்களில் மாற்றமில்லை
முகத்தில கவலையில்லை
உதட்டில் சிரிப்பில்லை
எனினும்
இதயம் மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகளை 
சுமந்தபடி.....!

-தோழி பிரஷா-
15.02.2013
Share

♥♥♥காதல்♥♥♥


எட்டி உதைந்தாலும்
கட்டி அணைப்பேன்
என்பது 
♥ தாயின் காதல்... ♥

தூக்கி எறிந்தாலும்
தாங்கிப் பிடிப்பேன்
என்பது 
♥தகப்பனி்ன் காதல்♥

முட்டி மோதி
சண்டையிட்டாலும்
விட்டுப் பிரிய
மறுப்பது
♥சகோதர காதல்♥

இடியே
விழுந்தாலும்
என்றும் பிரியாது
சேர்ந்தே இருப்பது
♥நட்பு காதல்♥

பிரிவுகள்
தொடரினும்
உறவினை 
வளர்க்கும்
உன்த உறவாய்
♥தாம்பத்திய காதல்♥

-தோழி பிரஷா-
14.02.2013
Share

அகிலமதில் வார்த்தையில்லை..


“அன்னையின் 
அணைப்பினில்-பல 
ஆயிரம் ஜென்மங்கள்
வாழந்திடலாம்”

“எவ்வித மெத்தையில்
தூங்கினாலும்
அன்பான அணைப்புடன்
அன்னை மடியில் 
தூங்குவதற்கு ஈடாகுமா?”

“அள்ளி அணைத்து
உச்சி முதல் பாதம் வரை
முத்தத்தாலே நித்தம்
பாசமழை பொழியும்
அன்னையவள் அன்பை சொல்ல
அகிலமதில் வார்த்தையில்லை..”

-தோழி பிராஷா-
12.02.2013
Share

முதல் முத்தம்...!


என் 
உணர்வுகளின்
ஆழம் அறிய
செய்தது
அன்று நீ
தந்த 
முதல் முத்தம்...!

-தோழி பிராஷா-
12.02.2013
Share

இன்றைய உன் பிரிவு....!


இழப்புகள்
புதிதல்ல எனக்கு
இருந்தும்
தாங்கிக் கொள்ள
பழகிக் கொண்டேன்.
ஆனால்,
சுழலும் தீப்பிளப்பாய்
சுட்டெரிக்கிறது
இன்றைய 
உன் பிரிவு....!

-தோழி பிராஷா-
10.02.1013

Share

தினம் தேடுகின்றேன்


நாம் நடந்து சென்ற
பாதை வழி
நான் கடந்து போகையிலே
உன்னை தினம் 
தேடுகின்றேன்
எங்கும் நீ இல்லை..!
ஆனால்
காலங்கள் கடந்தாலும்
நான் நீ 
என்னும் நினைவுகளை
தினம் கடந்தே
செல்கின்றேன்..!

-தோழி பிராஷா-
09.02.1013
Share

உன்னை தேடுகிறேன்.


அதிகமாய் 
வலிக்கிறது
மடி சாய
உன்னை தேடுகிறேன்.
ஏனோ
கண்ணாமூச்சி
காட்டுகிறாய்
இப்போதெல்லாம்...!!!

-தோழி பிரஷா(tholi Pirasha)-
05.02.2013

Share

அம்மா


அம்மா
நான் தேடி
அலையும்
சொர்க்கம்

-தோழி பிரஷா (Tholi Pirasha)-
04.02.2013
Share

தேடுகிறேன் எங்கும்

தேடுகிறேன்
எங்கும்
காட்சி தர 
மறுக்கிறாய்
தென்றலைப் போல...!


-தோழி பிராஷா-(Tholi Pirasha)-
ரோஜாக்கள் FAcebook Page
Share

நினைவு பூக்கள்தினம் தினம்
மலரும்
உன் நினைவு
பூக்கள்
என் கண்ணீர்
மழையில்
நனைந்து
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது

-தோழி பிரஷா-
29.01.2013