இரக்கமற்ற இறைவா
இதயத்தோடு
எனை ஏன்
படைத்தாய்?
உன் திருவிளையாடலை
தொடர
மனம் என்ன
விளையாட்டு மைதானமா?
நித்தமும்
கண்ணீரால்
அபிஷேகம் செய்கிறேன்
குளிரவில்லையா
உன் மனம்?
சூரியனும், சந்திரனும்
இயற்கையின்
நியதியாகும் போது
எனக்கு மட்டும்
ஏன்
இருளை வரமாய்
அழித்தாய்?
கல்லான கடவுளே
மனிதனாக பிறந்தது
பாவமா?
இதற்கான பதிலை
எப்போது
சொல்லப் போகிறாய்?
கண்களின் ஓரம்
திரட்டும் கிடக்கும்
தண்ணீர் திட்டுக்கள்
இன்று காயும்
நாளை காயும்
என காலம்
நீண்டே செல்கிறதே
எப்போது இதற்கான
முற்றுப்புள்ளி?
மௌனம் காக்கும்
பரம்பொருளே
திறந்து விடு
உன் கண்ணை
நிம்மதியாய்
உறக்கம் கொள்ள
நீண்ட நாளாய்
காத்திருக்கிறேன்.........
-தோழி பிரஷா-
23.02.2013
0 comments:
Post a Comment