Monday, February 27, 2012

Share

பாசத்தின் விலை..அம்மா என்ன சொல்லில்
நடமாடும் தெய்வமே!
சுமையின் வலி பொறுத்து
உன்னை எனதாக்கி
மண்ணுலகில் எனை விட்டு
விண்ணுலம் சென்றாயோ?

படிநிலைகள் மாறி
பருவ நிலைகள் பல கடந்தும்
பாசம் என்னும் ஒன்றுக்கு
ஏக்கும் குழந்தையாய்
இன்றும் என் வாழ்வு..

வாழ்வில் சுழற்சியில்
சந்தித்திட்ட 
பல்முகம் கொண்ட
பல சொந்தங்கள் 
ஒன்றையொன்று போட்டி போட்டு
போடுது நல்ல வேசங்கள்
தினம் தினம்.

சுயநலம் கொண்ட உலகில்
பாசம் ஒன்றை தேடி
நெடுந்தூரம் 
சென்ற விட்டேன்
எங்கும் காணல் நீராய்
எதிலும் வெறுமையாய்...
பணம் இருந்தால்
இதயம் திறக்குமாம்
பாசம் சுரக்குமாம் 
மனிதர்களுக்கு...

வாழ்க்கை பயணத்தில்
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து போக
பேருந்து நிலையமாய்
என் இதயம்..

வலிக்குதம்மா மனசு
சோகத்தை சொல்லியழ
அரவணைப்பு தர
யாருமற்ற அநாதையாய்
அவதியுறும் உன் பிள்னளயின்
நிலையினை கண்டாயா?

ஆசைகளை எனதாக்கி
ஏக்கங்களில் தவித்து
சித்திரைவதைகளை 
அனுபவிக்கும் எனக்கு
தாய்மடியில் தலை 
சோகங்களை சொல்லிழ 
அருகில் வந்து எனை
அணைத்துக் கொள்வாயா?
இல்லை உன் அருகில் 
இணைத்துக் கொள்வாய்யா?

Wednesday, February 22, 2012

Share

வெண்ணிலவே!


வெண்ணிலவே!
உன்னை பார்க்க
என் விழிகள் காத்திருக்கின்றன.
அதனை அறிந்திருந்தும்
மறைந்து மறைந்து
செல்லும் மர்ம
குணத்தை என்னால்
தாக்க முடியவில்லை.

உன்னை பார்த்த பின்பு
தான் என்னுள்
எத்தனை மாற்றம்.
சுவாசமே
உன்னால் நடைபெறுவதாக
உணர்கிறேன்..

காதல்
கணை தொடுக்கும் - உன்
காந்த விழிகளை கண்டவுடன்
கவிதைகளில் வளர்கிறாய்
பகல் நேரத்திலும்..

நீ சிந்தும்
முத்து சிரிப்புக்களால்
சிறை பிடிக்க
நினைக்கிறேன் உன்னை..
உன் கடைக் கண் பார்வையின்றி
என் அணுவும் 
அசைய மறுக்கிறது.

அழகிய முகம்
அதிலொரு மச்சம்
சீரான பல் வரிசை
சிவந்த உன் உதடுகள்
இயற்கையின் அதிசயம் நீ!
உண்மையில்
நான் கண்ட
பேரழகியும் நீயே.
அதனால் தான்
என் இதயராணி ஆனாயோ?

வெண்ணிலவே! 
பல லட்ச நட்சத்திர 
தோழிகள் இருந்தும்
நீ மட்டும் 
தனித்திருக்கும் நிலை
எனக்கு பிடிக்கவில்லை.
எல்லைகள் அற்ற
வான வெளியில்
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
ஆசையாய் கேட்கிறேன்
அமாவாசையான என்னுடன்
கைகோர்த்து வலம் வரும்
வரம் தருவாயா?

Saturday, February 18, 2012

Share

கூண்டு கிளி..கூண்டு கிளியாய் - நீ
சிறை இருப்பதால்
காற்றும் குளிர்ச்சியற்று
அனலைய் கொதிக்கிறது.
உன் தரிசனம் இன்றி
தனிமையில் தவிக்கிறது - இப்
பேதையின் மனசு.

சூரிய உதயமின்றி
தாமரைக்கு ஏது பிறப்பு?
உன் அன்பு இன்றி
இந்த ஏழைக்கு ஏது வாழ்வு?

பிறவிகள் பல தோன்றிடினும்
உன்னுடன் கொண்ட 
உறவு மாறிடாது
தடைகள் பல
வந்திடும் போதிலும்
உண்மை பாசம் 
என்றும் தோற்பதில்லை.

நீயே! 
நினைவானதால் இன்று
உலைக்களமாக உள்ளம்,
பனிக்கட்டியாக விழிகள்
மரித்தும் உயிர் வாழும்
அற்புதம் என்னில்.....

என்னை மறந்து
உன்னை மட்டும் 
நினைத்திருந்தேன்
இன்று குரல் கேட்டதினால்
மீண்டும் உயிர் பெற்றேன்!

ஏக்கங்களுக்கு விடை கொடுக்க
வரமாய் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்
இயல்பு வாழ்க்கையில்....

Monday, February 13, 2012

Share

காதல்..
காதலே!
இளசுகளின் மனங்களின்
அதிபதியாயம்
உன் வரவால் 
முழுமை அடைகிறேன்.
சிட்டாய் பறந்த உன்னை
சிறைப்பிடித்து
இதயத்தில் ஆதரிக்கின்றேன்.
மென்மையான உன்னை
நித்தமும் பூசிக்கிறேன்.
பசுமையான கனவுகளில்
உன்னுடன் கலக்கிறேன்.
என்னுள் நீ இருப்பதால்
உலகையே மறக்கிறேன்.
மனம் என்னும் மாளிகையில்
ஓய்யாராமாய் நீ புரியும்
குறும்புகளில் குதுகலிக்கிறேன்.
ஓயிராயிரம் ரோஜாக்களில்
நீ மட்டும் தனித்துவமாய்
தங்கமாய் ஜொலிப்பாதாய்
என்றும் உணர்கிறேன்.
இவை யாவும் கனவானதினால்
கண்ணீரும் வடிக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்