Tuesday, April 27, 2010

Share

காதல்.....

என்னை நோக்கிய உன் விழிகள்
பூக்கின்றன என அறிவேன்
பூமியில் உன் பார்வை மட்டுமே
பூவாய்  உள்ளதடி

!
Share

நீ சொல்..........


நான் பலமுறை
சொல்லி விட்டேன் இதயத்திடம்
உன்னை மறக்கச் சொல்லி ஆனாலும்
நான் சொல்லி...
எங்கே அது கேட்கப் போகின்றது,
நீ ஒரு முறை  சொல்லிப்பார்
இறுதியாக உன் சொல் கேட்டால் அடங்கும்...

ஜெனா

Share

நினைவுகளுடன்

மணக்கோலம் பூண்டு
மணவறை செல்ல காத்திருக்கிறாள்
மனது முழுதும் உன் நினைவுகளுடன்
மங்கை இவள் மனவேதனை
மற்றவர்களுக்கு புரிந்திடுமோ
மணவறை செல்ல காத்திருக்கும் - புதிய
மணாளனுக்கும் புரிந்திடுமோ?
எதிர்காலத்தை எண்ணி
கலக்கத்தில் புது வாழ்க்கையில் 
இணைகிறாள் 
வருவதை ஏற்கும் தைரியத்துடன்
 

Share

காதல் வலி

துவண்டு போன மனசுக்குள்ளும்
துரத்துகின்றது உன் நினைவுகள்...
தூக்கமில்லாத இரவுகளாலும்
துன்பத்தில் மூழ்கின்ற பகல்களாலும்
துடிப்படங்கி போகிறது வாழ்க்கை...!

எனக்குள்ளே நோயாய் உன் பிரிவு
என்னுயிரை தினம் வதைக்கிறது...
எரிமலையாய் வெடித்து சிதறும் இதயத்துக்கு
ஏன் மருந்தாய் உன்னைத்தர மறுக்கிறாய்?
எழுதிய விதியா?எழுதா விதியா இந்த வலி?

அன்பே உலகத்துக்கு நீ ஒருவன்
ஆனால் எனக்கு நீதான் உலகம்
அன்றில் பறவையாய் நீயும் நானும்
அகிலத்தில் பிரிவின்றி வாழவேண்டும்
ஆருயிரே தடைகளை தாண்டி வந்து விடு...! 


அருணா

(படித்ததில் பிடித்தது)
Share

இதயத்தில் ஒரு வலி!


பெளர்ணமி இரவொன்று
பாலைவனச் சகாராவாகியதால்
என் மெளனத்தின் அலறல்கள்
இப்போதும்
எனக்குள்ளே
உதிராத ஞாபகங்களாய்...

என்னை நானே
ஆசுவாசப்படுதினாலும்
மனம் அங்கலாய்த்து
அவதிப்பட்டுக் கொள்ள
அன்றைய நிகழ்வின்
நினைவு மணி
இழுக்கப் பட்டதும்
என் மனசு
இப்போதும் இடறி விழுகிறது.

Sunday, April 25, 2010

Share

உன் நினைவு

என் மனம் வாடுதம்மா 
கண்களின் ஈரம் அது 
என்னை நனைக்குதம்மா 
உன் இமைகள் மூடுகையில்
என் கண்கள் ஏங்குதம்மா 
பாசக் கயிற்றினாலே 
என் இதயம் நோகுதம்மா 
உன் குரல் கேட்கையிலே 
என் உள்ளம் ஆறுதம்மா 
வாழ்க்கையின் வழியில் 
முள்கள் குற்றுதம்மா 
வலியின் நோவுகள் 
உன் நினைவு ஆற்றுதம்மா....
Share

அம்மா......

அம்மா என்ற பாசையின்
அழியாத செல்வம்
அதரத்தில் உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை
அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று
அன்னை மடியில்
அலைவீசும் நேசம்
அகத்தின் மென்மையில்
அரவணை அச்சகம்
அல்லல் தீண்டினும்
அனுசரிக்கும் ஆத்மா
அகிலம் போற்றும்
அதிசய அவதாரம். 



உடுவையூர் த.தர்ஷன்
பிரான்ஸ்.

Sunday, April 18, 2010

Share

எனக்கு நீ



எந்தனை உறவுகள் வந்தாலும்
அதில் பிரகாசமாக தெரிவது உன் உருவம்;
இதை புரிந்து கொண்டாலும்
என் வாழ்விலும் பிறக்கும் சொர்க்கம்





Saturday, April 10, 2010

Share

யாரறிவார் இவள் மனதை?

இவள் மனம் தனிமையில்
இறைவனிடம் வரம் கேட்டாள்
இரு கண்ணீர் மல்க-கல்
இதயம் கொண்ட அவனுக்காய்....
தந்தை பாசத்தை தவறாக புரிந்திடுவான்
தாயின் வார்த்தைகள்  தள்ளி வைத்திடுவான்
நண்பர்கள் கருத்துக்களை
நளினத்துடன் நகைத்திடுவான்
 இவளால் அவன் மனதில் மாற்றம்
ஆனால் அவனின் மாற்றம்
பாசத்தில் அல்ல அவள் மேல் உள்ள
காமமோகத்தில்... ...