Wednesday, June 30, 2010

Share

தவிப்பு

 
எத்தனையோ கனவுகள் எனக்குள்..
அத்தனையும் சுக்கு நூராகி
பித்தாக என்னை அலைய வைத்து
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு...???

துக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில்...
ஆறுதல் சொல்ல ஆளின்றி ...
நானிங்கே தவிக்கிறேன் ...
ஆழமான என் காதலையும்
உன்னடிமையாகி போன என்னையும்
உன்னால் எப்படித்தான் மறக்க முடிந்தது ...???

அடிக்கடி காதல் மொழி பேசிய நம்
கையடக்கத் தொலை பேசிகள் -இன்று
நம்மைப் போலவே மௌனமாகிப் போயின ...!!!

உன் நினைவுகளால் நிறைந்திருந்த
என் நெஞ்சம் மட்டும் இன்று
பிரிவின் வேதனையில்
பரிதாபமாய் தவிக்கிறேன் ...!!!

உன்னருகாமையின்றி இனிமேல்
எப்படித்தான் வாழப் போகிறேனோ ???
இதயம் முன்னிலும் இருளாகிப் போனது
என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்
எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனது ...!!!

இருந்த போதும் ....
உன் நினைவுகள் தரும்
வேதனைகளில் வெந்தபடியே..

Monday, June 28, 2010

Share

இரத்தோட்டமாய்.....

நீ வந்த வேளை என் வாழ்வில்
சந்தோசங்கள் கூத்தாடின
நீ போன வேளை பிரிவின் வேதனைகள்
இதயத்தில் கனக்கின்றது..!
உன்னை வழியனுப்பி விட்டு நடக்கின்றேன்
கால்கள் நடக்க மறுக்கின்றது..!
கண்களால் நாற் திசையும் பார்க்கிறேன்
எல்லாமே வெறுமையாக இருப்பதை
போல் உணர்கின்றேன்..!

நீ என் அருகில் இருக்கும் போது அழகாக
தோன்றிய பொருடகள் எல்லாம்
நீ இல்லாத வேளையில் அழகற்றதாய்
தோன்றுகின்றது ..!

அடி மனதில் இருந்து பிரிவின் வேதனை
கண்ணீராக கண்களின் வழியே வழிகின்றது ..!
ஆனாலும் உந்தன் நினைவுகள்
மயிலறகாக வருடுவதால்
சற்றேனும் என் இதயத்துக்கு
ஆறுதலாக இருக்கின்றது..!

நீ என்னை விட்டுத்தான் பிரிந்து சென்றாய்
உள்ளத்தால் அல்ல ஆனாலும்
இந்த பிரிவு கூட சுகம்தானடா ..!
உன்னை பற்றிய எண்ண அலைகள்
இன்னும் கூடுதலாக பெருக்ககெடுப்பதால்..!

Sunday, June 27, 2010

Share

அவள்

மனந்தனிலே காதலாய் மலர்ந்தாள்
மலர்களிலே முல்லையாய் மணந்தாள்
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள்
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள்
கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள்
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள்
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள்
அவனியிலே மறுபிறவி இருந்தால்
அவளுடனே வாழும் வரம் அளித்தாள்
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த
சுகத்தால்
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும்
கழித்தாள்
வாழ்வினிலே நானென்றும் மணந்தால்
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்.

Friday, June 25, 2010

Share

என் தோழி....

குறையில் நிறை கண்டு
என்னில் உன்னைக் கண்டு
உன்னில் என்னைக் கண்டு
என் இன்பத்தில் இன்பம் கண்டு
துன்பதில் துன்பம் கொண்டு
எனக்கு மூன்றாம் கையாய்
விளங்கும் தோழியே..

இசையாய் நான் இருந்தால்
வரியாய் நீ வருகின்றாய்...

மழையாய் நான் வந்தால்
குளமாய் மாறி என்னைத்
தாங்குகின்றாய்...

என் மனதின் காயத்திற்கு
மருந்தாய் உன் அன்பெனும்
தென்றலாய் வந்து வருடிச்
செல்கின்றாய்....

காற்றுக்கு வேலி போடுவது போல்
உன் நட்புக்கு வேலி போட முனைந்தேன்
உயிருக்குள் கலந்து விட்டாய்....

பூவின் வாசமாய் எனக்குள்
வாசம் வீசுபவளே ஏழெழு
ஜென்மங்கள் வேண்டும் எனக்கு
உன் தோழியாய் உன் தோள்
சாய்ந்திட...

பரந்து விரிந்திருக்கும் பூமியில்
தனித்திருக்கும் என்னோடு
சேர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சியே
என்றும் உன்னோடு இணைந்திருப்பேன்
என் ஆயுள் வரை....

Wednesday, June 23, 2010

Share

என்னவனே ...

அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!..

Tuesday, June 22, 2010

Share

இனிய நட்பு.......


என் இனிய தோழியே ...
நினைவிருக்கிறதா உனக்கு...
நமது அறிமுக நாட்கள் ...
ஆனந்தமாய் ..ஆர்பாடமாய்...

நானும் ஆமை வேகத்தில்
நீயோ அதிவேக புகைவண்டியாய்..
நல்ல நண்பர்களாய் நாமும்
நெகிழாத நாளும் உண்டோ

தொலைவில் இருக்கும் உனை
தொடர்ந்து வந்திடவே
தொலைபேசி உதவி அது
தொடர்கதையாய் தொடர்கிறதே

இன்பங்களை மட்டுமே
என்னவளுக்கு சொந்தமாக்கி
துன்பமது வரும்போது நெஞ்சம்
துணையாக உனை தேடும்

கனமான கவலைகளில் நானும்
கால் இடறி வீழ்வதில்லை
தோள் கொடுக்க நீயும் வந்து
தோழியாக நிற்பதனால் ...

இறந்த கால ஏமாற்றங்கள்
எத்தனையோ எந்தன் உள்ளில் ...
துவண்டு போன மனதோடே
இருளாக இருந்த எனை ..

விளக்குடனே நீயும் வந்து
வெளிச்சமாக பாதை தந்தாய்..
தோழி நீயும் கிடைததிலே ..
தலைகனமே எனக்கும் கொஞ்சம் ...

இதயத்தின் தோட்டத்தில்
நட்புதனை பயிர் செய்வோம் ...
காவல் காப்போம் காத்திருந்து
காலமெலாம் அது பூக்கட்டுமே ...

Monday, June 21, 2010

Share

என்னவளே...!!!

வஞ்சிக்கொடியே
வாஞ்சையுடன் என்னோடு
கொஞ்சிப் பேசிப் பேசி
கொள்ளை கொண்டவளே

எனக்கே தெரியாமல்
என்னுள் புகுந்து
என்னையே கேட்காமல்
எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்
என்னை செல்லமாக அழவைத்தாய்
என்னுள் உனைத் தேடிக்கொண்டே
உன்னில் எனை தேட வைத்தாய்

கண்டேன் எனை உன்கண்ணில்
கொண்டேன் அளவில்லா இன்பம்
மீண்டும் எனை நீங்கி
சென்றாய் உன் இருப்பிடம்

சற்றேனும் எதிர்பாராபோது
சினுங்கிய தொலைபேசியில்
உன் அன்பான குரல் கேட்டு
ஆனந்தம் கொள்ளுதடி
என் இதயம்...


Friday, June 18, 2010

Share

உன் நினைவு...

என் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று

இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் எதிர் காலமும்
நீயே

உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....

நீ என்னை விட்டு
சென்று விட்டாய்
உன் நினைவுகள்
என்னை விட்டு செல்ல
மறுக்கின்றன

நினைவு என்னும்
சுழலும் சக்கரத்திலே
இன்பமும் துன்பமும்
மாறி மாறி சுற்றுகின்றது

எனக்கு வேண்டாம்
இன்னொரு பிறவி
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்துWednesday, June 16, 2010

Share

உறவாடிடும்....


உன் பிரிவில் உணர்ந்தேன்
வலியின் வலிமை....
உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...

உன் நிழல்களைக் கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது என்னிரு விழிகள்.....
பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....

உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....

Tuesday, June 15, 2010

Share

உன் நினைவு.....

 புற்று நோய் போல் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுது
உன் நினைவுகள் ...
அன்பே......
தனி தனி வழியில்
நீயும் நானும் சென்றாலும் ...... 
எம்மை ஒரே
வழியில் இணைத்து செல்கின்றது 
உன் நினைவு.....

Thursday, June 10, 2010

Share

ஜொலிக்கிறேன்

என் வானத்தில் ஓரு நொடி தோன்றி
மறைந்திடும் வானவில்லல்ல நீ
என் இன்பத்தில் மிளிர்ந்து
என் சோகத்தில் பொலிவிழந்திடும்
வெண்ணிலவு நீ.....

எனது தூக்கத்தில் வளர்ந்திட்ட
அழகிய கனவு நீ....
என் நடைபாதையில் துணைவரும்
தென்றல் காற்றும் நீ...

என் இதயத்தின் வழியே நுழைந்த
உன் காதல் என் கண்களின் வழியே
கண்ணீரென பாய்கின்றதே
உன் மெளனம் தாங்காது....

உன் மேல் துளிர்த்திட்ட பாசம்
வானமென வளர்ந்திட
உன் கோபத்தில் தேய்ந்து போகின்றேன்
பெளர்ணமி நிலவென...

மழை நீரென என்னில் பொழிந்து
என் வாழ்வை பசுமையாக்கியவளே
பார்வையற்றுப் போகின்றேன்
உன்னைக் காணாத நாட்களில்....

காலைநேர பனித்துளி சூரியனின் ஓளிபட்டு
வைரமென ஜொலிப்பது போல்
உனதன்பு பட்டு நான் பிரகாசிக்கின்றேன்
இருளிலும் ஓளியென....

(இனியவள்)
(படித்ததில்  பிடித்தது)

Saturday, June 5, 2010

Share

இன்னொரு ஜென்மம்

உன் பார்வையில்
எத்தனை ஆழமடி
உன் இரு விழி உரசலில்
ஊசலாடி போனதே
என் உயிர்...

என் உயிரோடு
உன் உயிர்
சில்மிஷம் செய்கையில்
வலிக்கின்றதடி என் இதயம்...

கனவென நினைத்து
உதறித் தள்ளிய காலங்கள்
நிஜமென வந்து செல்கையில்
காணாமல் போகின்றது
என் மென்மை...

என் கோபங்களை இடியென தாங்கி
என்னை சிற்பமென செதுக்குகின்றதே
உன் பொறுமை......

இசையில் கரைந்திடும் கானக் குயிலே
கண்கள் மூடி நடக்கின்றேன்
முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில்
உனதன்பை பூவென
என் வழியெங்கும் தூவி....

உன் உயிரினில் - என்
வலிகளை தாங்கிடும் என்னுயிரே
என்ன செய்வேன் உனக்கு
நான் என் உயிரைத் தருவதைத்
தவிர...

இன்னொரு ஜென்மத்தில்
நம்பிக்கையில்லை எனக்கு
இன்னொரு பிறவி இருந்து விட்டால்
உனக்கே குழந்தையாகும் வரம்
கிடைத்திட வேண்டிடுவேன் இறைவனை...


 இனியவள்
(படித்ததில் பிடித்தது)

 

Tuesday, June 1, 2010

Share

தெரியவில்லை

அமைதியே உருப்பெற்ற உன்னிடம்
எப்படி வந்தது இந்த அகங்காரம்...

பூமாதேவியே நீயென பார்த்து
பொறாமைப்பட வைத்த
உன் பொறுமை எங்கே
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டதா...

அமைதியே வடிவான உன் திருமுகம்
இன்று அமைதியற்ற கடல் போல்
ஆர்ப்பாரித்துக் கொண்டு இருக்கின்றதே....

எதை மறைக்க போடுகின்றாய்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும் வலிகளையா
காரணம் சொல் பெண்ணே..
Share

எட்டாக் கனி

 எட்டாய்க் கனியாய்
போய்விட்ட பாசத்தை
எட்டி நின்று ரசிக்கின்றேன்
ருசிக்க முடியாமல்...