Thursday, October 27, 2011

Share

மெளனம்உன் சுட்டுவிரல் 
காட்டும் திசை நோக்கி
பாய்ந்தோடும் என் மனசு - இன்று
கற்களிலும் முட்களில்
சிக்கி தவிக்கும் நிலையினை
நீ அறியாயோ...

நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும் 
என் நிலை அறியாயோ...

என் வாழ்வின் வெற்றிகள்
உன் உத்தரவின்றி
என்னை முத்தமிட்டதில்லையே..
 இன்று
சாபங்களே வரமாய்
தோல்விகளே நிரந்தமாய்
வலியே வாழ்வாய்
துடி துடிக்கும்
அபலையின் அழு குரல்
உன்னை தீண்டவில்லையா?

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...

Tuesday, October 25, 2011

Share

தீபாவளி வாழ்த்துக்கள்வலையுலகில் 
தடம் பதிந்தது 
சிகரத்தினை நோக்கி
வீறு நடை போடும் எனக்கு
ஆக்கமும் ஊக்கமும் 
அளித்து ஆதாரிக்கும்
வலையுலக நண்பர்களுக்கு
என் இதயம் கனிந்த
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்....

Friday, October 21, 2011

Share

வாழ்க்கை பயணம்...மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.

கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள் 
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...

தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...

சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து 
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும் 
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.....

Sunday, October 16, 2011

Share

அரவணைப்பு..உன்னோடிருந்த
ஒரு சில 
ஒன்றரை நிமிடங்கள்
மட்டும்...
இன்னும் இதயத்தில்
பக்குவமாய்....
உன்னை
கண்டியணைத்ததை விட
 உன் கண்ணீர்துளிகள்
துடைத்ததே அதிகம்.....

Tuesday, October 11, 2011

Share

உன் பிரிவால்...என் வாழ்வின் அர்த்தங்களை 
உணர வைக்க 
உதயமான உறவொன்று 
திசைமாறும் வேளை
தடுமாறுகின்றேன் 
தனிமை எனும் கொடுமையில்..

இதயங்களின் சங்கமிப்பில்
அன்பினை பரிமாற்றி
பாசத்தில் பிண்ணி பிணைந்து
வாழ்க்கை எனும் கடலில் - என்
கண்கள் வளர்ந்திட்ட 
கனவுகள் இங்கே
காணல் நீராய் போனதடி 

உயிரே நீ என
உணர்வோடு வாழும் எனை
விதியே நீ என
தெருவோரம் வீசியதில்
துடி துடிக்குது என் இதயம்.
உணர்வினை ஊமையாக்கி
உறவுகளுக்காய் சிரித்து - என்
உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்
தினம் தினம் 
மரணித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பிரிவால்...

Monday, October 3, 2011

Share

தவிப்பு..


என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று
என் வாழ்வில் நிரந்தரமாய் ஆனது

நான்கு சுவர்களுக்கு
நாட்களும் அதுவாய் கழிக்கின்றது..
பூத்துக் குலுங்கிய பூங்கா வனம்
இன்று புழுதி பல படிந்து
குருதியில் தோய்ந்த
போர் நிலமாய் என் வாழ்க்கை....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்
காதல் எனும் வடம் பிடித்து
காணாமல் போனவர்கள் பல பேர்
இதில் கடைசியில் நானும்
இணைந்து கொள்ளும் கொடுமை இதுவோ

ஆடிப் பாடி திரிந்த இடமெல்லாம
ஆள் அரவமற்று
அமைதியாய் இருப்பதாய் ஓர் பிரமை.
கை கோர்ந்து நடந்து திரிந்த
கடற்கரையோர கடலலைகள்
எள்ளி நகையாடுகின்தே
என் நிலை கண்டு...


நிலவினை ரசிக்கையில்
உயிரான அவன் நினைவுகள்
எரிமலையாகி என்னுள்
அணு அணுவாய் உயிர் பறிக்கும்
கொடுந் துயர் இதுவோ...

நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..