Friday, July 27, 2012

Share

பணம்..



காகிதத்தில் வடித்தி்ட்ட
மூன்றெழுத்து
சொர்க்கத்தில் மூழ்க்கி
குதூகலிக்கிறது 
மனித குலம்.

உறவுகளில் உதடுகளில் 
புன்னகை மழை பொழிய 
கொட்ட வேண்டும் 
பண மழை

மரணத்தையும்
பிரசவமாக்கும்
மூன்றொழுத்து
மந்திர வார்த்தை
பணம்..

பணத்திற்காக 
உருவங்கள் 
பல கொண்டு
வேசம் போடும்
மனித கூட்டம்

பாசம் எனும்
போர்வையில்
போலியாய் சிரித்து
நடிப்புலக நாயகர்களாய்
ஒரு கூட்டம்

காதல் எனும் 
போர்வையில்
மனசை விற்கும் 
ஒரு கூட்டம் 

காமம் எனும்
போர்வையில்
உடம்பை விற்கும்
ஒரு கூட்டம்

வேசங்கள் பல 
போடும் மனிதனே!
பணத்திற்கு பேசும்
சக்தி இருந்திருந்தால்
கறி துப்பும் உன்னை

பணத்தினை 
படைத்த
பிரமனான உன்னை
கேட்கும் பல கேள்வி

பணத்தின்
மீதான உன்
காதலை எண்ணி....

Saturday, July 21, 2012

Share

நான் தான் தோல்வி....



நீ
இலட்சிய பாதையில்
பயணிக்கும் போது
என்னை சந்திக்காமல்
செல்ல முடியாது.

நீ
ஒவ்வொரு முறையும்
விழும் போதெல்லாம்
நான் தான் 
உன்னுடன் துணையிருந்தேன்.

நீ
சறுக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
வெற்றி உனதாக்க
உன்னை தயார்
படுத்திக் கொண்டிருந்தேன்.

உன் 
கழுத்தில்
வெற்றி மாலை 
விழும் போது
நான் பிணவறையில் இருப்பேன்.


நான் தான் தோல்வி....


Friday, July 20, 2012

Share

காதல்.


நினைவெல்லாம் 
நீயாக இருக்கிறாய்
அதனால் 
தான் என்னமோ 
தட்டில் நிறைய 
உணவிருந்தும்
பட்டினியாய் 
நான் இருக்கிறேன்...

Tuesday, July 10, 2012

Share

நிலவு!



என் ஓட்டை வீட்டு
கூரையின் நடுவில்
எட்டி எட்டிப் பார்த்தது
வெள்ளை நிலவு!

விசயம் என்னவென்று
வினா எழுப்ப,
ஓவென்று அழுதது
கண்ணீர் பெருக
நிலவு.

வலி தாங்கும்
சூட்சுமத்தை
கற்றறிந்த மனிதனே!
தனக்கும் கற்றுத் தர
கோரிக்கை விடுத்தது
நிலவு.

விரிந்து கிடக்கும்
பிரபஞ்சத்தில்
முடிவில்லா பதையில்
தொடரும் நினைவுச்
சங்கிலியில்
சிக்குண்டு தவிக்கும்
தனிமையின் கொடுமையில்
நிலவின் கண்ணீர்..

பாவம் நிலவு!
உறவுகளால்
வஞ்சிக்கபட்டிருக்குமோ?
காதல் எனும்
விஷயத்தை ருசித்திருக்குமோ? 
பிரியத்தின் மெளனத்தினால்
தண்டிக்கப்பட்டிருக்குமோ?
எதிர்பார்ப்புகளில் சிக்கி
ஏமாந்திருக்குமோ?
அதுதான் என்னமோ
தொட முடியா தூரத்தில்
துறவரம் பூண்டுள்ளது
நிலவு.

அப்பழுக்கில்லா
வெள்ளை நிலவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நானும் அப்படி தான் என்று.....

Wednesday, July 4, 2012

Share

நினைவுகள்



இரவிலும் வருகிறாய்
பகலிலும் வருகிறாய்
அமாவாசையிலும் வருகிறாய்
பெளர்ணமியிலும் வருகிறாய்
குளிரிலும் வருகிறாய்
உடல் எரிக்கும் 
வெப்பத்திலும் வருகியாய்
சில நேரங்களில்
இன்பம் தருகிறாய்
பல நேரங்களில் 
கண்ணீரை தருகிறாய்
நீ யார் என கேட்டால்,
மெளனமாய் சிரிக்கிறாய்,
இம்சைகள் பல கொடுத்து
வஞ்சிக்கும் உன்னை 
கொலை செய்ய எண்ணுகிறேன்
ஆணவமாய் சிரிக்கிறாய்,
மரணமில்லாதவன்
நான் தான் உன் 
நினைவுகள் என்று.....