அம்மா
ஏன் என்னை
பெற்றாய்
பாசத்தின்
ஏழ்மையான என்னிடம்
வஞ்சனையால்
வதைக்கின்றனர்
யாவரும்!
சிதறிக் கிடக்கும்
சுயநலம்
இல்லாத உறவுகளை
தேடி அலைகிறேன்
எங்கும்
ஏமாற்றமாய்
என் தேடல்..!!
பணம்
பாசம் விற்கும்
பாவப் பொருளாய்
இதயத்தை
கீறு போடும்
ஆயுதமாய்
இன்று
என் வாழ்வில்.
தொலைந்தது
பாசம்
இடிந்தது இதயம்...!
ஆயிரத்தில்
ஒன்றில்
அலைந்து திரியும்
நடை பிணமாய்
நானும்
இன்று முதல்....
-தோழி பிரஷா-
25.03.2013
2 comments:
பணம் செய்யும் பல மாயை...
// சிதறிக் கிடக்கும்
சுயநலம்
இல்லாத உறவுகளை
தேடி அலைகிறேன்
எங்கும்
ஏமாற்றமாய்
என் தேடல்..!!//
அதுதான் அவலமே!நன்று!
Post a Comment