Thursday, June 13, 2013

Share

வாழ்வில் ஆயிரம் பாடம்

சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!

உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!

தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!

காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!

கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும் 
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????

உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!

ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!

--தோழி பிரஷா--
14.06.2013

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் அனுபவ வரிகள்...

தொடர வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தெரியபடுத்தியமைக்கு நன்றி தனபாலன் சென்றேன் பார்வையிட்டேன்.. நன்றிகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி சகோ