Thursday, December 6, 2012

Share

மாறாத என் மனதோடு..!



நம்பிக்கையை தொலைத்து
நாளாகி லிட்டது....!
நீ சொல்லும் வார்த்தைகளை 
நம்பிடத்தான் சொல்கின்றாய்...!
நிஜம் எதென தெரிந்திடும்
திறன் இருந்திருந்தால்
நிம்மதியாய் உறங்கிட முடிந்திருக்கும்..!
நடைமுறைக்கு ஏற்ப 
மாறத்தான் முடியவில்லை
தெரிந்திருந்தால் நானும்
சந்தோஷமாக இருந்திருப்பேனோ?
மாறும் மனிதர்கள் நடுவில்
மாறாத என் மனதோடு
தினம் போராடுகின்றேன்....!

Tuesday, November 20, 2012

Share

மனம்



உன்னை எதிர்பார்த்து
காத்திருந்து-உன்
வரவின்றி தளர்ந்திட்ட நாட்கள்
இன்று நினைக்கையிலும்
மனதுள் ஏதோ ஒரு வித சோர்வு
இருந்தும் நீ என்னை தேடி
வருவாய் என் என் மனம்
திரும்ப திரும்ப எதிர்பார்க்கின்றது
பல முறை ஏமாற்றங்களை சந்தித்தும்...!
Share

இன்று போல் என்றும்...


துயரங்களை மறந்து
துன்பத்தில் சிரித்து...
இன்பங்களை மட்டே
இசையாய் மீட்டி...
உனக்கென நானும் 
எனக்கென நீயம்
வறுமையிலும் வாடிவிடாது
வாழ்ந்திடுவோம்...
இன்று போல் என்றும்-நாம்
துன்பங்களை மறந்து
இன்பங்களை மட்டுமே
ரசித்திடுவோம்...!

Tuesday, October 30, 2012

Share

எதனாலே உன் சீற்றம் ???



அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

Wednesday, October 17, 2012

Share

நாளும் தெலைகின்றோம்.....




குட்டிப் பெண்னே
என்னை சிறையேடுக்கும்
உன் சிரிப்பொலி 
சில்லறையாய் சிதறுதடி...
அள்ளி எடுத்து ரசிக்கிறேன்... 
உன் விழிமொழி
பிரம்மிக்க வைக்குதடி கண்னே...
குதூகலிக்கும் உன் மனம்
வெளிப்படுத்த நீ சிரிக்கும் சிரிப்பு...
சிரிப்போடு உன் கண்சிமிட்டல்
சிந்தித்து துடிக்கும் உன் உடல் மொழி
சீராக புரியுதடி அன்னை எனக்கு...

பசித்திட்டால் தெரிவிக்கும் 
உன் இருமலுடன் சினுங்கள்
பார்க்காமல் இருப்பது போல்
நான் நடித்தால் 
குழந்தைமொழியில் உன் ஏச்சு
அப்பப்பா இத்தனை அதிசயங்கள்
குட்டிப்பெண்ணே உன்னிடத்தில்
கண்டு நான் வியக்கின்றேன்...
கருவில் சுமந்த நாளை எண்ணி 
பெருமையுடன் உன்னை இன்று
கையில் சுமக்கின்றென்...

தந்தை குரல் கேட்கும் திசை
தானாக உன் தலை சாயுதடி....
தந்தையிடம் தாவிட வேண்டி
சிரிப்புடன் உன் தாவல்
சிறுபிள்ளை மொழி பார்த்து
தந்தை முகம் ஆனந்தத்தில்....

அக்கா குரல் கேட்டிட்டால்
ஆனந்தத்தில் உன் துள்ளல்
குட்டிப்பெண்ணாய் தானிருந்தும்
உன்னை தூக்கி அள்ளிட
கொள்ளை ஆசையில் 
துள்ளி குதிக்கின்றாள் அக்கா.....


அள்ளி எடுத்து துள்ளி விளையாட்டு
ஆனந்தத்தில் நம் இல்லம்...
குழந்தையே உன் குறும்பில்
நாளும் தெலைகின்றோம்

Wednesday, October 10, 2012

Share

தந்தை உள்ளம்....


அழுத்திக் கொடுக்கும்
அன்பு மகளின்
ஆசை முத்தம்
ஆனந்நத்தில்
ஆர்பரிக்கும் தந்தை உள்ளம்....
என் அன்னையை கண்டேன்
மகளே உன் வடிவில்.

Monday, October 8, 2012

Share

என் அழுகையில்



பல இரவுகள் 
வலியின் பிடியில்
சிக்கி அழுதது 
ஓர் இதயம்.
துடிதுடித்திருந்தேன்
உறக்கமின்றி.
காலத்தின் உந்தலின்
வெளியேற்றப்பட்டேன் நான்
அன்றும் துடித்தாள் அவள்
பொறுக்க முடியாமல்
வாய் விட்டு அழுதேன் நானும்
என் அழுகையில் 
அவளின் சிரிபொலி
பூரிப்பாய் வளர்கிறேன்
அவளின் பிள்ளையாய்
'அம்மா' என்று அழைத்தபடி....

Wednesday, October 3, 2012

Share

நினைவுகளின் சிம்மாசனத்தில்...


வார்த்தைகளை ஆயுதமாக்கி
கோபங்களை செயலாக்கி
இயலாமையை வடிவமாக்கி
வலியினை பனியாக்கி
திட்டித் தீர்க்கிறாய் - என்னை
இருந்தும் 
வலிக்கவில்லை 
நினைவுகளின் சிம்மாசனத்தில்
நீயே ஆட்சி புரிவதால்
சலசலகவில்லை 
என் மனம்
உன் அறியாமையை எண்ணி...
Share

ஒற்றை வரியில்


வார்த்தை வர்ணங்களால் 
அலங்கரித்து
போலி அன்பு பூசி
பாசம் காட்டும்
பல இதயங்களும் உண்டு..
ஒற்றை வரியில்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
சில இதயங்களும் உண்டு

Wednesday, September 26, 2012

Share

துடிக்குதம்மா என் உள்ளம்



ஆயிரம் துன்பங்கள்
அயராது தாக்குது
ஆடித்தான் போகின்றேன்
அன்னையே உன்னை எண்ணி...
பிள்ளையாய இருக்கையில்
அம்மா உங்கள் 
கஸ்ரம் புரியவில்லை..
அன்னையாய் நானின்று ஆனபின்பு
பிள்ளையாய் உன்னை தாங்க 
ஆசையின்று...
அழைக்கும் தூரத்தில்
நீங்கள் இல்லை...
துடிக்குதம்மா என் உள்ளம்
விம்மி அழும் உன் குரல் கேட்டு....!!!
Share

அனைத்தும் அழகுதான்.



முள்ளில் பூக்கும்
ரோஜாவும் அழகு தான்
தொடும் வரை..
உயர்ந்த நிக்கும்
மலைத் தொடர்களும்
அழகு தான் 
வெடிக்கும் வரை...
சிரிக்கும் மனிதர்களின்
மனங்களும் அதிசயம் தான்
அதன் வலிகளை 
அறியும் வரை... 

Tuesday, September 25, 2012

Share

உள்ளம்


கொட்டிக் கிடக்கின்றன
சந்தோஷங்கள்
என்னைச் சுற்றி
இருந்தும்
தொலைவாகிப் போன
உன்னை 
தொட்டிட துடிக்குது
என் உள்ளம்.
Share

எப்போ என்னை விட்டு செல்வாய்??


வேதனைகளை 
வேரோடு கிள்ளி 
வீசிட நினைக்கிறேன் 
இருந்தும்,
வீசும் காற்றாய் என்னை 
தொட்டுச் சென்றிடும்
ஆசைகளுக்கு தூபமிட்டு
அமைதியை சீர்குலைக்கும்
துன்பமே!
எப்போ என்னை 
விட்டு செல்வாய்??

Tuesday, September 18, 2012

Share

வாழ்க்கைச் சக்கரத்தில்


மனிதனே!
வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்து போகும்
வரைமுறைகள் பலவிதம்


வாழும்வரை 
விரோதங்களை ஒதுக்கிவிடு-வீண்
விவாதங்களை தவிர்த்திடு...
வேற்றுமைகளை விலக்கிடு-பல
வேஷங்களை களைந்திடு...
பலருக்கு உதவிடு-உன்
பாவங்களை கழிவிடு..

வஞ்சத்தை மறந்திடு-சூழ்ந்த
வஞ்சகர்களை களைந்திடு...
சுயநலத்தை தவிர்த்திடு-உன்
சுற்றத்தை மதித்திடு...
நம்பிக்கையை வளர்த்திடு-உண்மை
நட்புக்களை மதித்திடு...
துரோகத்தை மறந்திடு - உன் 
துரோகிகளை மன்னித்திடு...

தவறுகளை உணர்ந்திடு
தனிமையை தவிர்திடு
பிழைகளை உணர்ந்திடு -பிறர் 
பிழைகளை மன்னித்திடு...
பெருமையை துரத்திடு-பிறர்
பெருமைகொள்ளும்படி வாழ்ந்திடு...
தலைக்கணத்தை தவிர்திடு-பிறருடன்
தன்மையாய் நடந்திடு..

அன்னையை மதித்திடு-அன்பால்
அனைத்தையும் வென்றிடு..
உறவுகளை மதித்திடு-உன்
உரிமைகளை பெற்றிடு...
இன்றிருப்போர் நாளையில்லை
வந்த வழி எப்போ செல்வோம்
யாருக்கும் தெரியாது..
ஒற்றுமையை வளர்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

Tuesday, September 4, 2012

Share

அலைகின்றேன்



தேடி
அலைகின்றேன்
தொலைந்து போன
வாழ்வின் தடங்களை...
எங்கும் 
வெறுமையாய்
சிதறிக் கிடக்கின்றன
தவற விட்ட
சந்தர்ப்பங்களும்
காலம் எமக்கிட்ட 
சாபங்களும்...
Share

குழந்தை முகம்


புன்முறுவல் 
அள்ளி தெளிக்கும்
குழந்தை முகம்
காணுகையில்
தெய்வமே 
நேரில் வந்து 
தரிசனம் தருவதுவாய் 
சந்தோஷம்
 ஊற்றெடுக்கும்....
அன்னையவள்
 உள்ளமதில்...
Share

என் அன்னை...



குழந்தையின் நான் 
அழுகையில்
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
இனிய கதைபேசி
தாலாட்டும் தான் பாடி
உறங்கிட செய்திடுவாள் 
என் அன்னை...
Share

அழையா விருந்தாளி



இன்பங்கள் என்று
ஆடைகட்டி
அலங்கரித்து
ஆடித் திரிந்த எல்லாம்
ஒவ்வொன்றாய்
விலகிச் செல்கின்றாலும்
துன்பங்கள் என்னும்
அழையா விருந்தாளி
அரவணைத்துக் கொள்கி்ன்றது
வாழ்வின் முடிவு வரை....
Share

அப்பாவின் பிரிவு.




நிச்சயமற்ற
இந்த உலகில்

தினம் தினம்
வந்து போகும் 
ஆயிரம் உறவுகள்


கருவறையில் 

களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.

ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில் 
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு

பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்

அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும் 
கண்ணீர் துளிகளின் 
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.

Share

தாயாய் நானும் ...



கருவறை சுமந்து
உன் துயர் தீர்த்து
புவிதனில் தவழ விட்டு
பரலோகம் நீ போனாய்...
தலைபிள்ளையா நானும்
தரணியில் உதத்தால்
உன் பொறுமையின் வடிவில்
குடும்பம் எனும்
சுமை சுமக்கிறேன்
தாயாய் நானும் 
Share

உன் முக நிழலில்...



அம்மாவாக
 நீ இருப்பதால்
ஒளி தரும் 
உன் முக நிழலில்
கரையோதுங்கும் 
நேரங்களில்
இன்பத்தில் 
தள்ளாடும் 
குழந்தையாய் நான்.
Share

அத்மாத்தமான உறவில்



நிலவிலும்
பிரகாசமான நீ
என் கையில்
தவழும் போது
குழந்தையாய் நீயும்
தாயாய் நானும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
காதல்.
Share

என் உள்ளம்...!!!



கடும் வரட்சிக்குப் பின் 
பெய்த மழை போல
உன் பார்வை பட்டதினால்
செழிப்படைந்தது 
புதிதாய் பிறப்பதாய் 
ஆர்ப்பரிக்கின்றது 
என் உள்ளம்...!!!
Share

என் வாழ்வு...



பலருக்கு தெரிந்திட 
என் வாழ்வு
பௌர்ணமியாய்
மிளிர்கின்றது...
எனக்கு மட்டுமே
தெரிந்திடும் 
என் வாழ்வு 
தேய்பிறையென...
Share

என்னுள்ளே .....



பாசம் எனும் நூலெடுத்த
வானுயர பறந்தவளை
நூலை அறுத்து
பாதாளத்தில் தள்ளிவிட்டாய்
தனிமையிலே
பரிதவிக்கும் என் உள்ளம்
யாருக்கு புரிந்திடும்???
என்னுள்ளே யாவும்
 புதைந்து போகட்டும்
Share

வலிகளாய் நீ.


என் 
கடந்த கால
நாட்குறிப்புகளை 
புரட்டிப் பார்க்கிறேன்
இன்பமான நாட்கள்
அனைத்தும்
உன் பெயரையே
பதிவு செய்துள்ளன.
ஆனால்..
இன்றைய தினங்களை
பதிவு செய்ய முனைகிறேன்
யாவும் வலிகளாய்
நீ.

Monday, August 27, 2012

Share

அப்பாவின் பிரிவு.



நிச்சயமற்ற
இந்த உலகில்
தினம் தினம்
வந்து போகும் 
ஆயிரம் உறவுகள்


கருவறையில் 
களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.


ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில் 
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு


பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்


அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும் 
கண்ணீர் துளிகளின் 
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.


Sunday, August 19, 2012

Share

கன்னி பறவைகளாக...



பெட்டி நிறைய 
பணம் இருந்தும்
பெருமூச்சு விட்டு
காத்திருக்கிறாள் அக்கா..
அழகும் அறிவும்
இருந்தும்
கண்ணீரோடு
காத்திருக்கிறாள்
பக்கத்து வீட்டு தோழி..
'தோசம்' எனும்
மூடநம்பிக்கையும்
'சீதனம்' எனும்
சம்பிரதாயமும்
அழியும் வரை
வீட்டுச் சிறையில்
காத்திருக்கும்
கன்னி பறவைகளாக
பெண்கள்...

Tuesday, August 14, 2012

Share

அம்மா..



வலி நிறைந்த வாழ்வில்
போராட்டமே முடிவாச்சு
கண் துடைக்க கைகள் இல்லை
ஆறுதல் சொல்ல நாதியில்லை,
உடலும் சோர்கிறது
உணர்வுகள் மரிக்கின்றன
முழுவதுமாய் முடிவதற்குள்
தலை சாய்க்க 
அம்மா உன்
மடி தேடுகிறேன்.
விரைந்து வருவாயா? 

Tuesday, August 7, 2012

Share

இன்னொர் உலகம் பிறந்தால்

இறைவனே!
இதயத்தை படைத்து
ஆசையை ஏன் படைத்தாய்?
பெண்னை படைத்து
ஆணை ஏன் படைத்தாய்?
இன்பத்தை ஊற்றி
வலியை ஏன் பெருக்கினாய்?
உறவுகளை பரப்பி
பாசத்தை ஏன் விதைத்தாய்?
பாசத்தை விதைத்து
பகையை ஏன் பெருக்கினாய்?
என்றும் ஊமையாய் நீ
வேதனையில் நாமெல்லவா?
இன்னொர் உலகம் பிறந்தால்,
கடவுளாய் நாமும்
மனிதனாய் நீயும் 
பிறக்கக் கடவாய்....

Saturday, August 4, 2012

Share

என்றும் மரணிப்பதில்லை..



மெளனயாய் இருந்த
 என் அழைபேசி
நீண்ட காலத்தின் பின் 
சலசலக்க தொடங்கியது இன்று
தொலை தூரத்தில்
இருந்து ஓர் அழைப்பு,
அன்பாய் நலன் விசாரிப்பு
உரிமையாய் ஒரு அதட்டல்
கபடமில்லா நகைச்சுவைகள்
பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம்
செல்லமாய் சிறு சண்டைகள்
வாழ்வின் எதிர்காலம்
கடந்த பசுமையான நினைவுகள்
கரைந்து போன கவலைகள்
தொடரும் இன்பங்கள் என
இன்றும் தொடர்ந்தது
நம் நட்பின்
இரு முனைகளிலும்.....

தேசங்கள் பல தாண்டி
உருவங்கள் மாறிச் சென்றாலும்
உயிர் பெற்ற
உண்மை நட்புக்கள்
என்றும் மரணிப்பதில்லை..

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
Share

அம்மா உன் அன்பு



ஆயிரம் நிலவுகள்
வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய்
என்று பிரசாகம் வீசம்
அம்மா உன் அன்பு ..........

Thursday, August 2, 2012

Share

மழலை சிரிப்பில்



நீ சிரிக்கிறாய்
நான் வியக்கிறேன்
சூழ்ந்திருந்த துன்பங்கள்
சுக்கு நூறாகும்
சூட்சுமத்தை எண்ணி,
விஞ்ஞானத்திலும் இல்லாத
விந்தை உன்
மழலை சிரிப்பில்

Friday, July 27, 2012

Share

பணம்..



காகிதத்தில் வடித்தி்ட்ட
மூன்றெழுத்து
சொர்க்கத்தில் மூழ்க்கி
குதூகலிக்கிறது 
மனித குலம்.

உறவுகளில் உதடுகளில் 
புன்னகை மழை பொழிய 
கொட்ட வேண்டும் 
பண மழை

மரணத்தையும்
பிரசவமாக்கும்
மூன்றொழுத்து
மந்திர வார்த்தை
பணம்..

பணத்திற்காக 
உருவங்கள் 
பல கொண்டு
வேசம் போடும்
மனித கூட்டம்

பாசம் எனும்
போர்வையில்
போலியாய் சிரித்து
நடிப்புலக நாயகர்களாய்
ஒரு கூட்டம்

காதல் எனும் 
போர்வையில்
மனசை விற்கும் 
ஒரு கூட்டம் 

காமம் எனும்
போர்வையில்
உடம்பை விற்கும்
ஒரு கூட்டம்

வேசங்கள் பல 
போடும் மனிதனே!
பணத்திற்கு பேசும்
சக்தி இருந்திருந்தால்
கறி துப்பும் உன்னை

பணத்தினை 
படைத்த
பிரமனான உன்னை
கேட்கும் பல கேள்வி

பணத்தின்
மீதான உன்
காதலை எண்ணி....

Saturday, July 21, 2012

Share

நான் தான் தோல்வி....



நீ
இலட்சிய பாதையில்
பயணிக்கும் போது
என்னை சந்திக்காமல்
செல்ல முடியாது.

நீ
ஒவ்வொரு முறையும்
விழும் போதெல்லாம்
நான் தான் 
உன்னுடன் துணையிருந்தேன்.

நீ
சறுக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
வெற்றி உனதாக்க
உன்னை தயார்
படுத்திக் கொண்டிருந்தேன்.

உன் 
கழுத்தில்
வெற்றி மாலை 
விழும் போது
நான் பிணவறையில் இருப்பேன்.


நான் தான் தோல்வி....


Friday, July 20, 2012

Share

காதல்.


நினைவெல்லாம் 
நீயாக இருக்கிறாய்
அதனால் 
தான் என்னமோ 
தட்டில் நிறைய 
உணவிருந்தும்
பட்டினியாய் 
நான் இருக்கிறேன்...

Tuesday, July 10, 2012

Share

நிலவு!



என் ஓட்டை வீட்டு
கூரையின் நடுவில்
எட்டி எட்டிப் பார்த்தது
வெள்ளை நிலவு!

விசயம் என்னவென்று
வினா எழுப்ப,
ஓவென்று அழுதது
கண்ணீர் பெருக
நிலவு.

வலி தாங்கும்
சூட்சுமத்தை
கற்றறிந்த மனிதனே!
தனக்கும் கற்றுத் தர
கோரிக்கை விடுத்தது
நிலவு.

விரிந்து கிடக்கும்
பிரபஞ்சத்தில்
முடிவில்லா பதையில்
தொடரும் நினைவுச்
சங்கிலியில்
சிக்குண்டு தவிக்கும்
தனிமையின் கொடுமையில்
நிலவின் கண்ணீர்..

பாவம் நிலவு!
உறவுகளால்
வஞ்சிக்கபட்டிருக்குமோ?
காதல் எனும்
விஷயத்தை ருசித்திருக்குமோ? 
பிரியத்தின் மெளனத்தினால்
தண்டிக்கப்பட்டிருக்குமோ?
எதிர்பார்ப்புகளில் சிக்கி
ஏமாந்திருக்குமோ?
அதுதான் என்னமோ
தொட முடியா தூரத்தில்
துறவரம் பூண்டுள்ளது
நிலவு.

அப்பழுக்கில்லா
வெள்ளை நிலவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நானும் அப்படி தான் என்று.....