மனதை குத்தி செல்லும்
மனித மனங்களை
மாற்றிட தினம் வேண்டி
தோற்றுத்தான் போகின்றேன்...!!!
இரக்கமற்ற இதயங்கள் நடுவே
இரையாகித்தான் போனேன்
இறைவா..!!!
இரங்கிட மாட்டாயா???
இவள் துன்பம் துடைத்திட மாட்டாயா?
வாழ்வின்
வழியெங்கும் போராட்டம்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளுடன்
தினம் நகரும் மணித்துளிகள்...!
இதயக்கூட்டில்
இரக்கமற்றவர்களின்
கிறுக்கல்கள் வடுக்கலாய்...!
அழித்திட பல வகை புச்சுக்கள்
அழித்திட முடியுமா?
அழியாத வடுக்களை...!
♥-தோழி பிரஷா-♥
20.03.2013
2 comments:
தனி மனித ஒழுக்கம் வளரும் வரை... இவை மாறுவது கடினம் தான்...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்...
Post a Comment