Tuesday, August 31, 2010

Share

காதல்


நீ
சிந்திச் சென்ற
பார்வை மழையில் விதையேயின்றி
முளைத்தது என் மெல்லிய காதல்
நான் உறங்கும் போது உறங்க
மறுக்கும் என் இமைகள் - நொடிக்கு
ஒருமுறை உன் பெயரை
உச்சரிக்கும் என் உதடுகள் - இவை
யாவும் நீ தந்த காதலின் விளைவே..
 

Monday, August 30, 2010

Share

காத்திருக்கிறேன்.....

பெண்ணே
நான் புன்னகைத்த
போதெல்லாம்
மௌன விரதம் இருந்த
நீ - நான் கண்ணீர்
சிந்தும் போது
புன்னகை செய்வது
ஏனடி?

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டும் மல்ல
வாழ்விலும்
வசந்தம் வரட்டும்
என்பதற்காக.......
 

Sunday, August 29, 2010

Share

என்னில் நீ..

என் உதிரத்தில் கலந்தவளே

உன் விழிகளுக்குள்
என்ன ஒரு மாயம்
உன்னை காணும் போதெல்லாம்
ஊமையாகின்றேன்

இன்னும் நீ
என்னில்
வாழ்கிறாய்
என்பதற்கு - என்
உணர்வுகளும் - என்
உள்ளமும் - என்
உதறல்களும் - என்
கனவுகளும்
சாட்சி.....

எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்
என்றும் என்னில் நீ...

Saturday, August 28, 2010

Share

உன் உறவு

 குளிர்ந்த காற்று
வருடியது என்னை
உடல் சிலிர்த்தது...
உள்ளம் உன் பெயரை
உச்சரித்தது...
கடும் குளிர்காற்றும்
இதமாய் மாறின...
இயற்கை மாறா
உன் உறவு
இயற்கையை மாற்றியது
என்னுள்...

Thursday, August 26, 2010

Share

உன் நினைவுகளில்........

 உறக்கம் வராததால்
நானும் அதை தேடி
அதுவோ
உன் நினைவுகளை
அழைத்துக் கொண்டு
நகர்வலம்
போய் கொண்டு இருக்கின்றது

கனவில் நீ வந்தாலும்
கலையாமல் என்றும்
நான் சுவாசித்திடும்
உன் நினைவுகளால்
படும் அவஸ்தைகள் ஆயிரம்.

உன்னை  பிரிந்து விட்ட
என்னுணர்வுகளின்
நிஐத்துக்காய் துடிதுடித்து
அழுகிறது என் மனம்.........

Wednesday, August 25, 2010

Share

நீயே போதும்..

 
சகியே!
உன் விழி கலங்கினாலே
என் விழி கங்கையாகும்
உன்னிதயம் நொந்தாலே
என்னிதயம் நொருங்கிப்போகும்
நீ நலம் வாழ்ந்திடவே
நான் தினம் தவமிருப்பேன்
உன்னன்புக்காக என்றென்றும்
என்னகம் ஏங்கிடுமே
மண்ணகம் போகும் மட்டும்
மாசில்லா நட்பு வாழும்
இப்பூமி தன்னில் நான்
வாழும் வரையில்
கண்ணே நீயே போதும்..

Monday, August 23, 2010

Share

என் விதியின் பாதையில்

 அன்பே உன்னை சந்தித்தேன்
என்னை சிந்தித்தேன்...
உன் பார்வை சீண்டிட
என் மனம் தடுமாறிட...

கனவுகள் எனக்குள்
கருக்கொண்டது...
கருவுற்ற கனவுளும்
வளர்ந்திட தோன்றிய
கனவு நிஜமாகியது...

காலங்கள் கரைந்தது
விதி தேவன் விளையாட
நம் வாழ்வு திசை மாறிட
வாழ்வெனும் பாதையே
வெறுமையாய் ஆனது

நீ அங்கே தனிமையிலே
நான் இங்கே தனிமையிலே
சந்திப்பே இல்லாத
சந்தர்ப்பம் சூழ்ந்திட

காலங்கள் காற்றுபோல்
வேகமாய் சுழன்றது
உன் வாழ்வு
திசை மாறிடவும் ஆனதடி

உன் உறவுகளின் அதட்டலால்
மனதை நீ கல்லாக்கினாய்
என நானறிவேனடி
உறவுகளுக்காய்
உன்னை நீ மறந்தாய்
புதியவளாய் புது உறவில்
இணைந்திட்டாயடி...

கனவுகள் கரையேறுமென
காத்திருந்தேன்
கனவினை களைந்து
என் ஆசைகளை
கானல் நீராக்கியது விதி

உன் நினைவுகளை
எனக்குள் சிறைவைத்து
என் சுவாசமே நீயென
வாழ்கிறேன் நானடி...!

உன் பிழை ஏதடி
இறைவன் அவன்
திருவிளையாடலடி...

Sunday, August 22, 2010

Share

அன்னையே....

 அன்பை ஊட்டிய அன்னையே - என்
ஆசைகளையும் தீரத்தயம்மா...
இனிய வாழ்வை தந்தாயே- இறைவன்
ஈசன் அவன் அருளாளே.....

உண்மை பேச கற்றுதந்தாய் - என்னை
ஊரறிய வாழ வைத்தாய்
என் உயிர் தாயே - எனக்கு
ஏழ்மையிலும் கல்வி அறிவை ஊட்டினாய்

ஜயமில்லாத வாழ்வு என்னவென்று- அரவணைத்து
அன்புடனே கற்று தந்தாய்
ஒவ்வொரு இரவும் நான் தூங்க
தாலாட்டு நீ படித்தாய்
ஓங்கி அழும் என் குரல் கேட்டு
ஓடி வந்து தூக்கி அணைப்பாய்
ஒளவை பாட்டி கதை சொல்லி
ஆகாரம் ஊட்டி வளர்த்தாய்
அன்னையே உன் அன்புக்கு
ஏங்குகிறேன் இன்று ...

Saturday, August 21, 2010

Share

காதல் வந்தது..

 நான்
உன்னைப் பார்த்து
புன்னகைத்த போதெல்லாம்
நீ
என்னைப் பார்த்ததேயில்லை
யாரோ ஒருத்தி
என்னைப் பார்த்து
புன்னகைக்க
நீ அவளைப் பார்த்து
முறைத்த போதே
புரிந்தேன்
என் மீது உனக்கு
காதல் வந்ததை...!!!

Friday, August 20, 2010

Share

உன் வருகையால்...

 அன்பே
இருமனங்கள் இணைந்திட்ட
எம் உறவுப் பயணத்தின்
தடைகல்லாய் தலைகாட்டும்
முள்வேலிகள் விரைவில்
விலகும்.. 
அப்போது
தென்றலாய் உனைத்
தழுவி மகிழ்ந்திடுவேன்
அதுவரை உன் மௌன
வாசிப்புகளில் - என்
உயிர் துடிப்பின் ராகங்களை
செவிமடுத்துக் கொள்
அடிக்கடி நீ என் கனவில்
வந்து போக மறந்துவிடாதே
நீ வருவதால் தான்
முள்வேலி கூட ஒரு
ரோஜாக் கூட்டமாய்த்
தெரிகின்றது.

Thursday, August 19, 2010

Share

மௌனக்காதல்

 அன்பே என் மௌனம்
ஏன் என்று உனக்கு புரியவில்லை
என்னை நீ புரிந்தால்
என் மௌனம் ஏன் என்று
உனக்கு புரியும்....

மனதளவில் பிரியாத நம்முள் 
பிரிவு என்ற சொல் எதற்கு??
உன்னை விட்டு நான் விலகினாலும்
நான் கொண்ட காதல் விலகாது.

உன் மீது நான் கொண்ட காதல்
மௌனக்காதலாய் ஆனது

Wednesday, August 18, 2010

Share

என்றும் காதலோடு.......

 மௌன மொழி பேசி
என்னைக் கொல்லும் சகியே!

காதல் என்பது
ஒருமுறை பூக்கும் பூ
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
பிறகு எப்படி
நம்முள் பிரிவு...

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன்மீது நான் கொண்ட காதல்
என்னை எரித்தாலும் போகாது
உன் அரவணைப்பு இன்றி
என் சுவாசம் வாழாது...

மறந்திடுவேன் என்று எண்ணாதே
மறவாமல் வாழ்ந்திடுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்....

Tuesday, August 17, 2010

Share

காதலின் ரணம்

 உன்
வார்தைகளோடு
போராடிய போது கூட
வலிக்கவில்லை
இன்று நீ காட்டிய
மௌனம்....

தனிமையில் நீ
உன் நினைவில் நான்
யாருக்கும் புரியாது
நம் தவிப்பின் ரணமதை...

நீ இல்லாத என் தேசத்தில்
நிலவு கூட சுடுகின்றதே
வந்து விடு என் வாழ்வில்
வசந்தம் வீச......

Monday, August 16, 2010

Share

கனவுகளோடு...

 உன்னை காணாமல்..
என் கண்களில்
தொடர்கிறது கலக்கம்
ஒருமுறை வந்துவிட்டு போ..
என் வாழ்வை
வசந்தமாகிவிட்டு போ...

விழி திறக்க மறுக்கிறேன்
கனவிலாவது - நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்..

வந்துவிடு
என் ஆசைகளுக்கு கொஞ்சம்
தஞ்சம் தந்துவிடு....
காத்திருக்கிறேன்
உன் விழி பார்வைக்காக....

Sunday, August 15, 2010

Share

காத்திருப்பு.....

இன்று தெரியாது
என் மௌனத்தின்
வலி உனக்கு
காலங்கள் உணர்த்தும் வரை
காத்திருப்பேன்
உனக்காக அல்ல
என் காதலுக்காக....

Saturday, August 14, 2010

Share

எனதான்மா...!

 தனிமையில்
கிடந்தே
தவித்தழும்
என் இதயத்துக் குமுறல்களை
எழுதிடவும் முடியவில்லை....

சோகம் சுமந்த
வாழ்வுக்கு
வசந்த காலம்
உண்டென்ற வார்த்தைகளும்
என் வாழ்வில்
பொய்யாகிப் போகிறது!

இதயத்து
ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்தைக்காகத்
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றது
சாபங்கள்.....

வலி சுமந்தே
வாழப் பழகியதால்
அதுவே வழமையாகிப் போய்
வாழ்வே வேம்பாகிப் போனது!

வராத
வசந்தங்களும்
தொலைவான நேசங்களும்
எண்ணிலையறியாததால்
நான் வாழ்வதிலும்
அர்த்தமில்லையென
அடிக்கடி
அங்கலாய்த்துக்
கொள்கின்றது
எனதான்மா...!

Friday, August 13, 2010

Share

கலங்காதே கண்மனியே...

 கண்மனியே
கலங்கிடாதே
காலமெல்லாம்
துனை நிற்பேன்

அன்பால் உனை தழுவி
அழகாக காத்திடுவேன்

கண்ணீரே காணாத
காதல் வாழ்க்கை
நான் தருவேன்

காலமெல்லாம்
நீ சிரிக்க
கண் மூடி
தவமிருப்பேன்..

Thursday, August 12, 2010

Share

வெறுமையாய் என் வாழ்வு ......

 
நீ மட்டும் என் கண்களை
சந்தித்திராவிட்டால்
இன்று என் வாழ்க்கை
இனிமையாய் எவனோடோ
ஆனால் இன்று
தனிமை ஒருபுறம்
உன் தவிப்பு மறுபுறம்
வெறுமையாய் என் வாழ்வு
சிதைந்து போகின்றது

ஒருமுறை வந்து
என்னிதயத்தை
துடித்திட வை
இல்லை
உன்மடியிலோரிடம் தந்துவிடு
என்னுயிரை காற்றோடு கலந்துவிட....
Share

நீ வேண்டும்....

நீ
உள்ளுக்குள்
இருப்பதால் தான்  இன்னும்
உயிரோடு
இருக்கிறது என்
இதயம்
நீ வேண்டும்
இல்லையேல் - உன்
கால்பட்ட
இடத்திலாவது
என் கல்லறை வேண்டும்......

Wednesday, August 11, 2010

Share

கல்லறையில்....

நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
அன்பே உன்னால்...

சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே....

கண்களை கண்ணீர் வசிகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக் கொள்ள...

காலத்தின் கோலத்தால்
கல்லறையில் வாழ்கிறது
என் காதல்...

Tuesday, August 10, 2010

Share

சொல்லிவிட்டுப் போ அன்பே...

 காதலாக வந்த கவிதை
காற்றாய் கலந்தது..

என் உயிரோடு இருக்கும்
ஓசை உன் பெயரை
இசையமைக்கின்றது....

அன்பே நீ என் காதலனாக வரும்
ஆசையதுவே என் சுவாசமாய்
மாறியது...

என் இதயத்திற்கு சொல்
என்னுயிர் உன்னோடு தான்
இருக்கிறதென்று...

காத்திருந்த காதல் கனவாகி விடுமா?
நினைத்துப் பார்க்கின்ற நினைவுகள்
சுகமாகி விடுமா?

இதுவரை எனக்கும் உனக்கும்
சொல்லாத அந்த மெளன உணர்வுகளை
இப்பொழுதாவது சொல்லிவிட்டுப் போ....!

Sunday, August 8, 2010

Share

இதயச் சுமை

என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...
சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்

சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை

என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...

ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!

Saturday, August 7, 2010

Share

வலிகளின் கரங்களில்

கண் மூடி கனவுலகத்தில்
வாழ்ந்தேன் உன்னோடு....

கண் திறக்க மறுத்தேன்
கனவு கானலாய் போய்
விடுமென்ற அச்சத்தில்....

கண் மூடி இருட்டில்
வாழ்ந்ததால் காணாமலே
போய் விட்டேன் வாழ்வின்
வசந்தங்களை....

வலிகளின் கரங்களில்
சிறை பிடிக்கப் பட்ட
பறவையாய்.....
மெழுகாய் கரைகிறது
என் உயிரும் - அணைந்திடும்
நாளை எதிர் பார்த்து....

Thursday, August 5, 2010

Share

காதலின் மாயம்

 காதல்..காதல்..காதல்
மந்திரவார்த்தைகள் கொண்டு
மயக்குகின்றதா இந்த மூன்றெழுத்து
வார்த்தை....

காதல் கொண்டேன்
பயித்தியம் ஆனேன்...

உன்னைக் கண்டேன்
இதயத்தை இழந்தேன்...

கண்டுபழகியவை எல்லாம்
புதிதாய் தோன்ற புதியவை எல்லாம்
பழையதாய் தோன்றுகிறது...

வானத்தில் போட்டி போட்டுப்
பறக்கின்றேன் உன்னை பிடிப்பதற்காய்
கையில் சிக்காத காற்றாய்
பறந்து செல்கின்றாய்...

உளரும் வார்த்தைகள் அனைத்தும்
கவிதையாக மாற
கவிதைகள் அனைத்தும்
உளரல்களாக மாறுகின்றது

நீயின்றி நாட்கள்
முற்றுப் பெற மறுக்கின்றன..

அம்மாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்....

இருட்டைக் கண்டு மிரண்டவள்
இருட்டை ரசிக்கின்றேன்...

பகலில் உன் நிஜத்தோடு வாழ்கின்றேன்
இரவில் உன் நிழலோடு வாழ்கின்றேன்...

உன்னோடு இருக்கும் நேரங்களில்
சந்தோஷம் கை நீட்டி என்னை அரவணைக்க
நீயற்ற தனிமை என்னை பயமுறுத்துகின்றது...

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..??

கேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை
முடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து...

Wednesday, August 4, 2010

Share

காதலனே

 அதெப்படி? இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும்
செய்கின்றன...

உலகில் மற்றவர்கள்
எல்லாம் எனக்கு உறவு
நீ மட்டுமே உயிர்...

உலகத்தில் ஒரு முறை
மட்டுமே நிகழ்ந்து விட்ட
அதிசயம் உன் பிறப்பு...

பூமிக்கு நிலாவிடமிருந்து தான்
ஒளி கிடைக்கிறது....!

எனக்கு மட்டும்
உன்னிடமிருந்து தான்
கிடைக்கிறது...?

உன்னை கை பிடிக்க
வேண்டும் என்ற ஆசை
எல்லாம் எனக்கு
அறவே இல்லை...
நீ சுவாசித்த
காற்றை பிடிக்க வேண்டும்
என்றஆசை மட்டுமே!

Tuesday, August 3, 2010

Share

நான்

 விழியில் நனைந்து
இதயம் கரைந்து
இன்னலுக்கு மத்தியில்
இவ் வாழ்க்கையை கடக்கிறேன் .....

இரண்டு கண்களில்
காட்சி தோன்ற
இதயமோ வேதனைகளைச்
சுமந்த வண்ணம்
துக்கமின்றி துவண்டு
கனவுலகில் மிதக்கிறேன் ....

நெஞ்சத்தின் நெருடல்களை
நீண்ட நாட்களுக்குப் பின்பு
மீட்டிப் பாக்கின்றேன்
காயப்பட்ட நெஞ்சம்
கருகிப் போய் ஜடமாய்
உறங்குகின்றது ...!!!

கவலை மறந்து
தூக்கத்தை கொடுக்க
இதயத்தை அழைக்கிறேன்
அதுவும் உணர்வுகள்
இன்றி நடைப்பினமாய்
வேதனைகளை சுமக்கிறது ....

இப்படி ஒரு சோதனை
தேவை தானா எனக்கு ???
சொல்..........நெஞ்சமே .....சொல்
நீயும் என்னுடன் இணைந்து
மௌனத்தால் கொல்லாமல்
என் மேல் தயவு காட்டி
சொல் .............

ஞாபகங்கள் கவிதையாய்
உட்தெடுக்க
கண் கலங்குகிறேன்
உன் வார்த்தைக்காக ...

Monday, August 2, 2010

Share

இது என்ன வாழ்க்கை.....

  இது என்ன
வாழ்க்கை
என்ன தவம்
செய்து பிறந்து
விட்டேன் ...

நின்மதி இழந்து
நிதமும் நான்
தவிக்கிறேன் ..
உள்ளதை உள்ளபடி
உண்மைகளையும்
சொல்ல முடியவில்லை

பேச மொழி
தெரிந்தும் உண்மைகள்
என் பக்கம் இருந்தும்
சொல்ல மொழி
தெரியவில்லை
எனக்கு..

என் வாழ்வில்
ஏக்கம்... வெறுப்பு ...
கவலை ....விரக்கதி ....
வேதனை நிறைந்து
வழிகின்றன ...

சொல்ல ஒரு
உறவும் இல்லை
சொல்லி அழ
வழியும் இல்லை ..
என்ன தவம்
செய்து பிறந்து
விட்டேன் ...

ஒ தெய்வமே ...
எல்லாம்
கொடுத்தாயே
அழகான வாழ்வை
கொடுக்க மறந்தது ஏன்..

இவை அனைத்தும்
ஏன் என்
உயிரையும்
சேர்த்து நீயே
எடுத்துகொள்...

Sunday, August 1, 2010

Share

தோழியே எனக்குள் நீ

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர்
கொண்டு பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க
மலரும் மலரல்ல - உன்
மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை
காதல்...

ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..

நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள்
என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக
மாற வேண்டும் என்றால்
நட்பை நேசி - நான்
உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....