Thursday, September 30, 2010

Share

பிரபஞ்ச அழகி இவள்

 நிலவு கூட நாணம் 
கொள்கின்றது
வஞ்சி இவள் 
அழகை கண்டு....
பூக்கள் கூட 
மொட்டவிழ்கின்றது
பாவையிவள் 
கூர்விழி கண்டு...
இயற்கையை 
அஞ்ச வைக்கும்
பிரபஞ்ச அழகி இவள் ....

Wednesday, September 29, 2010

Share

உன் நினைவுகள்

 நீ இறந்தும்
உன் நினைவுகள்
இறக்கவில்லை என்னுள்...
இந்ஜென்மம் சொல்ல முடியா
என் காதலை சொல்லிட
காத்திருக்கிறேன்
மறுஜென்மத்திற்காய்.....

Tuesday, September 28, 2010

Share

அன்று ஒருகாலம்

அன்று
என் வாழ்வின் 
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு 
எல்லையே இல்லை

சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.

அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்

ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்

இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....

Monday, September 27, 2010

Share

கனவு...

என்
கனவில் வந்து
அடிக்கடி தூக்கதைக்
கெடுக்கும் - நீ
நிஐ வாழ்வில்
ஒரு தடவையேனும்
வந்து
உன் புன்னகை
வதனம்
காட்ட என் தான்
மறுக்கிறாய்?

Sunday, September 26, 2010

Share

மறுமணம்

உன் நினைவுகள்
ஊற்றெடுக்கும் 
என் தேகத்தில்
மூன்றாம் இதயத்துக்கு
என்ன வேலை?

Saturday, September 25, 2010

Share

உன் புன்னகையில்...

 நீ
சிரிக்கும் போதெல்லாம்
புதிதாய் பிறக்கிறேன்
நான்.

மெளனத்தினால்
ஐயாலம்காட்டி
ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி
உன் புன்னகை...

செவ்விதழ் பூவாக நீ
அதை உறுச்சும் வண்டாக நான்
தென்றல் தீண்டுகையிலும்
என்னவளின் உரசலாக
என்னில் ஓர் உணர்வு...

கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்....

Friday, September 24, 2010

Share

நம்பிக்கையில்........

நினைவுகளின்
ஏஐமானாய் நீ
இருப்பதால்.....

 மனதோடு போராடி
தோற்று விட்டேன்
உன்னை மறப்பதற்கு
நீ ஒருமுறை
முயற்சித்து பார்..

அன்புக்காக தவமிருந்து 
தோற்று போகிறேன்
உன்னிடத்தில்.....
விடுவதாய் நானுமில்லை
முயற்சிக்கிறேன் பல வழிகளில்
அன்புக்கு இலக்கணமாய்
நீ இருப்பதால்......

கண்டேன் அன்னையை
உன் விழிகளில்
தவிக்கிறேன் நானும்
உன் மடியில்
தலை சாய்க்க....

வருவாய் என்னும் நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
கண்ணீர் துளிகளுடன்...........

Wednesday, September 22, 2010

Share

பிரியமே.....

என் காதல்
ஞாபங்களை - நீ
இலையுதிர் காலமாய்
நினைத்து
உதிர்த்தெறிந்திருக்கலாம்
ஆனால் நான்
உன் காதல் சில்மிஷங்களை
நிலாக்காலமாய் எண்ணி...
இன்னும்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். 

Tuesday, September 21, 2010

Share

எல்லாமே நீ.........

 என் உயிர் துடிப்பின் ஆதாரம்,
என் நினைவுகளின் கருவூலகம்,
என் உறவுகளின் அஸ்திவாரம் ,
என் காதலும், 
என் வாழ்கையும் ,
என் நட்பும்,
என் செல்லமும் ,
என் இன்பத்தின் இருப்பிடம் ,
என் கோபத்தின் காரணம்,
எல்லாமே நீயாக இருக்கும் போது
நான் மட்டும் எப்படி வேறாவேன்???

Monday, September 20, 2010

Share

உன் ஸ்பரிசங்களால்.....

 என்னில்
பல அதிசயங்கள்
நிகழ்த்திய கடவுள் நீ

நீ என்னருகில்
உன் ஸ்பரிசங்களின்
தீண்டல்களால் உண்டான
இன்பம் அரவணைத்து 
கொள்கின்றது என்னை....

நானோ சந்தோசத்தில்
துள்ளி குதிக்கிறேன்
கட்டி தழுவுகிறேன்
சற்று நேரத்தில்
எங்கும் வெறுமையாய்
கண் விழித்துப் பார்க்கிறேன்
வெட்கத்தில் கண் சிமிட்டுகின்றது
என் தலையணை
என் அறியாமைய் கண்டு...

கரை தொடும் அலை போல்
உன் நினைவலைகள்
என்னில் ....

Saturday, September 18, 2010

Share

இவள் இன்று..

 உறவுகள் பல இருந்தும்
தனிமையாய் இவள் மனம்...
நரகத்தில் வாழ்ந்திடும்
நங்கையாய் 
இவள் இன்று...

பாசமெனும் போலித்திரை போடும்
உறவுகள் நடுவினிலே
நடைபிணாமாய்
ஊர்வலம் வருகின்றாள்
இவள் இன்று.....

இறைவனும் அறியானோ?
இவள் துன்பம் தீரானோ?

Friday, September 17, 2010

Share

தேவதையே....

 உணர்வுகளுக்கு உயிர்
கொடுக்கும் தேவதையே
உன் பார்வையின்றி
துடிக்க மறுக்கின்றது 
என் இதயம்

புரிந்தும் நீ
புரியாமல் இருப்பது ஏனோ?
தேடுகின்றேன் உன்னை
வாராயோ என் அருகில்

Thursday, September 16, 2010

Share

நான் மட்டும்

 உன்னோடு
பேசிக் கொள்ள
இரவுகளை நாடினேன்
நீயோ
விடியல் தேடி
பறந்து சென்றுவிட்டாய்
நான் மட்டும்
இன்னும் இருளுக்குள்...

Tuesday, September 14, 2010

Share

சாபங்கள்

 இதயத்து
ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்தைக்காகத்
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றது
சாபங்கள்.....
Share

காத்திருக்கிறேன்...

 என்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து
உன் நெஞ்சில்
காதல் கற்பம் சுமத்தும்
தாயாக எனக்கு நீ....

ஆனால் இன்று...
சூழ்நிலை கைதியாக நீயும்
உணர்வுகள் இழந்தவனாக நானும்
தடுமாறும் தருணங்கள் பல...

உனக்கும் எனக்கும்
இடைவெளிகள் அதிகரித்தாலும்
உணர்விலும் உள்ளத்திலும்
நெருக்கம் அதிகமே
நீயே உலகமென
உன் நினைவுகளை
சுமந்து அலையும்
காதல் கிறுக்கனாக நான்..

நிலா நீ
முகம் காட்ட
வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருக்கிறேன்
பல கனவுகளுடன்.....

Monday, September 13, 2010

Share

நினைவுகள்

 
எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்
Share

அன்னை...

பத்து மாதம் சுமந்து
பரணியிலே பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி...
பக்குவமாய் வளர்த்திடுவாய்...

பிள்ளை உள்ளம் தானறிந்து
ப்ரியமுடன் நடந்திடுவாயம்மா
கொஞ்சும் மழலை மொழியினிலே
இன்பத்தை காண்பாயம்மா.....

பச்சிளம் குழந்தயாய்
மண்ணில் தவழும் போது
பார்த்து ரசித்தவண்ணம்
அள்ளி அணைத்திடுவாயம்மா...

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
நீர் அடித்து நீர் விலகிடுமா?
உன் அன்பு என் நெஞ்சில்
என்றும் விலகிடாகதம்மா....

Sunday, September 12, 2010

Share

ஏங்குது என் மனம்...

  அன்பே
நினைவுகளை மட்டுமே
விட்டு சென்றாய்
நினைவிழந்தவளாய் நான்
நீண்ட நாள் வாழ்கிறேன்...

வெந்து போன எனக்கு
பால் ஊற்ற வருவாயா???
இல்லையேல்....
அனாதையாய் நானாவேனா???

என்னுள் வேதனைகள் ஏராளம்
உன்னிடம் சொல்லிட
ஏங்குது என் மனம்....

Saturday, September 11, 2010

Share

காத்திருக்கிறேன்...

 உன் மெளனம்
அழகானது தான்
எனினும்
உதிரும்
ஓரிரு வார்த்தைகளுக்காக
காத்திருக்கிறேன்...

நீ இல்லாத
தனிமைகள்
தீ மூட்டி என்னை
எரிக்கின்றன...
விரைந்து வா...
நான் குளிர்காய வேண்டும்...
Share

களவாடப்பட்ட கனவுகள்..

நான் அநேகமாக
மெளனமாய் இருக்கிறேன்
எதிரிலிருக்கும் சுவருடனும்
எதிர்ப்படும் மரத்துடனும்
அவ்வப்போது பேசுகிறேன்
சிரிக்கிறேன் ஏனெனில் எனக்கு
தெரியாமல் என் கனவுகள்
களவாடப்படுகின்றன.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் எனை
அண்டி வருவதேயில்லை.
என்னையறியாமல் எல்லாமே
மாறிப் போயிற்று ஓர் இரவில்...

Thursday, September 9, 2010

Share

என் தனிமை காதலை.....

உனக்கு தெரியாமல்
உன்னை நேசித்தேன்
என்னுள் சுவாசித்தேன்
இருந்தும் உன்னிடம் - என்
காதலை சொல்ல யோசித்தேன்...

பாசத்தை காட்டினாய்
பண்புடன் பழகினாய்
உன் சிறு குறும்பை கூட ரசித்தேன்
உனக்கு தெரியாமல்

உலகமறிய இவளுக்கு
ஊக்கங்கள் நீ தந்தாய்
உன் அன்பால்
உயர பறக்க வைத்தாய்

தயக்கம் மரியாதை - என்
காதலை சொல்ல மறுத்திட
என்னுள் மறைத்தேன்
என் தனிமை காதலை.....

Tuesday, September 7, 2010

Share

ஏன் நீ புரியவில்லை????

 அன்பிற்கு ஏங்குகிறேன்
யாருக்கும் புரியவில்லை
என்னை புரிந்த
உனக்குமா புரியவில்லை???

எல்லாம் நிறைந்திருந்தும்
வெறுமையாய் என் இதயம்....
வேதனைகள் மட்டுமே
நிரம்பலாய்....

சொல்லியழ நீ இருந்தும்
சொல்ல மனம் தடுக்கிறது-ஏனெனில்
அன்பின் அரசன் நீயல்லவா.........
உன் அன்பை பெற முடியாமல்
தவிப்பவள் நானல்லவா...........

என் கண்ணை பார்த்தவுடன்
என் வேதனை நீ அறிவாய்-இன்று
என் கண்களை பார்த்தும்
ஏன் நீ புரியவில்லை????

Monday, September 6, 2010

Share

என் இதயம்....

 நேற்று என்னை பிடித்த அவளுக்கு
ஏனோ இன்று பிடிக்கவில்லை
யோசிக்கிறேன் புரியவில்லை
என் இதயத்துக்கு

என் உயிர் நீ என்றாள்
என் உறவு நீ என்றாள்
எல்லாம் நீயே என்றாள்
ஆனால் இன்று???

ஆயிரம் புன்னகை சிந்தும்
அவள் உதட்டில்
இன்று தொடரும் நிசப்தம்
ஏனோ புரியவில்லை எனக்கும்...

சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்
ஆனால் நீயோ
மெளனமொழி பேசி பேசி
கொல்லாமல் கொல்வதேனோ??

காரணம் தெரியாமல்
விம்மி அழுகிறது
என் இதயம்....
Share

கல்லறை..

உன்னை
பிரிந்து விட்ட
என்னுணர்வுகளின்
நிஐத்துக்காய்
துடிதுடித்து
அழுகிறது
என் மனம்

ஒரு முறையேனும்
நீ என்னைக்
கண்டுகொள்ள
வருவாயெனில்
என் கல்லறையிலும்
வாசல் வைத்து
காத்திருப்பேன்
உனக்காக மட்டுமே....
 

Saturday, September 4, 2010

Share

பிடித்திருக்கிறது எனக்கு...

 விடியும் விடியல் பிடிக்கவில்லை
உதிக்கும் சூரியன் பிடிக்கவில்லை
பூக்கும் பூக்கள் பிடிக்கவில்லை
வீசும் காற்றும் பிடிக்கவில்லை

உருண்டு ஓடும் அலைகள் பிடிக்கவில்லை
அலைந்து திரியும் காதலர்களையும் பிடிக்கவில்லை
சினிமாவும் பிடிக்கவில்லை
சின்னதிரையில் அழுது புலம்பும் நாயகிகளையும் பிடிக்கவில்லை

தினம் சினுக்கும் அலைபேசிகள் பிடிக்கவில்லை
தொல்லை தரும் எஸ்எம்எஸ்கள் பிடிக்கவில்லை
இம்சை தரும் இமெயில்கள் பிடிக்கவில்லை

தனிமையும் பிடிக்கவில்லை
இனிமையும் பிடிக்கவில்லை
உறவுகள் பிடிக்கவில்லை
அழும் குழந்தையும் பிடிக்கவில்லை

அழகான என் காதலும் பிடிக்கவில்லை
இனிமையான நட்பும் பிடிக்கவில்லை
என்னை பிடித்த உன்னையும் பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை

நான் ரசித்த எதுவும் பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்கிறது எனக்கு...
Share

எனது தேவதை..

 பகல் பொழுதினில்
பாதி தூக்கம் கொண்டு மீதி தூக்கம்
வரும் போது
அழகிய உருவமாய்..
அகிம்சை வாதியாய்...
ஆசையின் நிலவாய்...
இன்பத்தின் வழியாய்...
இரகத்தின் உயிராய்...
உண்மையின் உறவாய்...
உருவத்தில் புது மாற்றமாய்...
ஊட்டி வளந்தவளாய்....
ஊரின் கண்பட்டவளாய்....
எனது தேவதையாய்....
ஏக்கத்தின் புது வீக்கமாய் வந்து...
என் தூக்கத்தை கெடுக்காதே.....

Thursday, September 2, 2010

Share

நீ தந்த பிரிவு....

கண்மணியே!

என நினைவுகளை கலைத்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நித்தம் ஒரு சித்திரவதை
நீ தந்த பிரிவு

நீ
இல்லாத இரவில் பகலால்
வாடுகிறேன்
நிலவாய் வந்துவிடு
நானும் கொஞ்சம்
ஆனந்தம் கொள்ள......