Friday, July 30, 2010

Share

எரிகிறேன் மீண்டும் ...

 உருத்தெரியா ஒன்று
உணர்வுகளுக்குள்
தீ கொளுத்தி
திசை மாறி நடக்கிறது ...

தேடியும் தெரியவில்லை
சுடர்விட்டு படர்கிறது
உன் நினைவுகள் ..
நாடி நரம்புகளில் தீ
நாளமாய் ...

சுகமாகவே எரிகிறேன்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளால் தொடங்கி
உன் நினைவுகளையே
சாம்பலாய் உதிர்த்து
எரிகிறேன் மீண்டும் ...

Tuesday, July 27, 2010

Share

என்னவளே !!!...


இதயம்
பட படவென
துடிக்கிறது பெண்ணே
நெருங்கிடவேண்டும்
உன்
நிழலையாவது
நான் பார்த்திட வேண்டும் ..

காலம்
கடந்து விட்டது
காத்திருக்க நேரமில்லை
கனவுகள்
கலைந்து போனாலும்
நினைவுகளை
நிலைக்க விடமாட்டேன்

என் சுவாசம்
சிறைபடும்முன்
உன் வாசத்தில்
நானும்
வசப்பட வேண்டும்

உன்
பார்வை
கணைகளால்
நான் ஊனமாக வேண்டும் ...
உன் இதழ் தரும்
தீண்டல்களே
அதற்கு
மருந்தாக வேண்டும் ...

மஞ்சமாக
மலர் நீயும்
மடி தரவேண்டும்
தஞ்சமாக
நானும் அதில்
தலை சாய்க்க வேண்டும்

உன்
மார்போடு
முகம் புதைத்து
நான் அழ வேண்டும்
மலர் உந்தன் கைகள்
எனைத் தழுவ வேண்டும்

என்றுமே
என்னவளாய்
நீ இருக்க வேண்டும் ...
உனை பிரியும்
நாள் அன்று
என் உயிர்
பிரிய வேண்டும் ..

Saturday, July 24, 2010

Share

கண்மணியே !!..

 
மறந்திடுவாயோ அன்பே
என் மௌனராகத்தை
என்றுமே நிலைக்காத
என் இதயராகத்தை ...

காணாமல் இருந்தால்
கரைபுரளும் கண்கள்
கடந்த காலமெல்லாம்
கைப்பிடித்த விரல்கள் ...

மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...

பேசாமல் இருந்தால்
மௌனமாய் அழுதிருக்கும்
என்றுமே இமையாக
ஏக்கமாய் தவித்திருக்கும் ...

மறந்திடாதே அன்பே
உன் உயிரிதனை...
அதுவும் மறைந்திடுமே
இவ்வுலகை மறந்தே ..

Wednesday, July 21, 2010

Share

ஏற்றுக்கொண்டேன்

சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

 
பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...
Share

ஏன் புரிய மறுக்கிறாய்???

 உன் தூக்கத்தை மறந்தாய்....
என் துன்பங்களை சுமந்தாய்....
தாயின் பாசத்தை நீ தந்தாய்...
உன் ஏக்கங்களை தொலைத்தாய்...
என் எண்ணங்களை சுமந்தாய்...
இன்பத்தை மட்டுமே எனக்கு தந்தாய்...
எதையும் இழக்க சம்மதித்தாய்...
எத்தனை உறவுகள் வந்தாலும்
உன்னுடன் உள்ளம் திறந்து
உண்மைகள் பேசினேன்.
உன் ஆழமான அன்பால்
என்னை தொலைத்தேன்
ஏன் அன்பே
என் அன்பை புரிய மறுக்கிறாய்???


Tuesday, July 20, 2010

Share

இலக்கற்ற பயணம்

உயிர் கொண்டாடிய
உறவுகள் தூரமாகிட
போலிப் புன்னகை
இதழைத் தாங்கிட
இதயத்தை அழுத்திடும்
துன்பங்கள் தீயென
உயிரைப் பற்றிட
கால்களை கண்கள்
தொடர கண்களைத்
தொடர்ந்து செல்கிறது
மனமும் இலக்கற்ற
பயணத்தை நோக்கி....

Monday, July 19, 2010

Share

அன்பு காதலியே.......

 உன் கண்ணீர் துடைத்திட
என் கரங்கள் இல்லை
உன்னருகில்....

உன் இதயத்தின் சோகங்கள்
நீக்கி தோளோடு தோள்
கொடுக்க நான் இல்லை
உன்னருகில்....

உன் கண்களில் கரைந்தோடும்
கண்ணீரில் கரைகின்றது
என் நிமிடங்கள்....

காதலியே உன்னருகில்
நான் இல்லை என்னருகில்
நீ இல்லை....

என் அன்பென்றும் உன்னையே
சுற்றி வட்டமிடும் பூமியைச்
சுற்றும் நிலவாய்...

என் மனக்கண் உன்னையே
நோக்கும் என்றென்றும்...

உன் மனம் தாங்கும் சோகங்கள்
என் இதயத்தைச் சேரட்டும்
உன் சோகங்கள் கரையட்டும்...

தண்டை நீங்கி வாழாத மலராய்
நம் காதலின்றி வாழாது என்
இதயம்....

உருண்டோடும் உலகத்தில்
ஓவ்வொரு உயிர்களிலும்
துளிர்விடும் அன்பின் மேல்
ஆணையாய் உன் மீது நான்
கொண்ட காதல் என்னுடல்
கல்லறை சென்றாலும் மாறாது
என்னுயிர் காதலியே..

உன் சோகங்கள் கலைந்திடு
நாளை விடிந்திடும் விடியலில்
பறவைகள் சந்தோஷ கானம் பாடிட
மலர்களைனைத்து பூமாலை தொடுத்திட
இதமாய் வீசிடும் தென்றலில்
துன்பங்கள் பறந்திட உன் வாழ்வில்
இன்பங்கள் புத்துயிர் பெறட்டும்....

Saturday, July 17, 2010

Share

உயிரோடு கலந்து விட்டாய்

கற்பனைத் தந்திகளை மீட்டுகையில்
கானமென இசைமீட்டிடும்
கவிதை நீயெனக்கு....

என் மூச்சுக் காற்றில் கலந்து
இதயத்தோடு கலந்து சில்மிஷம்
செய்திடும் உயிரும் நீ...

கண்மூடி திறக்கையில்
நிழலாடி வரும் உன் உருவம்
காண்கையில் காணமல் போகின்றது
கண்களில் கண்ணீர்த் துளிகள்...

தித்திக்கும் கனவுகளில் திகட்டாமல்
கண்சிமிட்டிச் செல்லும் கண்மணியே
கண்களைத் தீண்டி கனவோடு கலந்து
உயிருக்குள் நுழைந்து விட்டாய்...


Friday, July 16, 2010

Share

சிறைபடுகிறேன்

மின்னல் வீசும் உன் கண்களை
காணுகையில் - என்
எண்ணங்களில் ஒரு தடுமாற்றம்,
புன்னகை புரியும் உன் முகத்தை
காணுகையில்-என்னுள்
ஆனந்த ஊற்று,
அன்பான உன் உள்ளம் 
காணுகையில்- நான்
உன்னுள் உறைகிறேன்,
நீ எனக்கு தரும் பாசமும் நேசமும்
உன்னுள் நான் சிறைபடுகிறேன்.
அன்பே...........
உன் அன்புக்கு என்றும் நான் அடிமை.
  

Thursday, July 15, 2010

Share

அருகில் இல்லா வசந்தமே!!!

எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்

உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்

எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என!!!!

(படித்ததில் பிடித்தது.)

Wednesday, July 14, 2010

Share

காந்த விழிகள்.....

ஓடும் நீரையும் சிறைபிடிக்கும் புகைப்படமாய்...
நகரும் என் நிகழ்காலத்தைச்
சிறைபிடிக்கிறது உன்
காதல் கயல்விழிகள்...

எனை வஞ்சிக்கும் எண்ணமோ வஞ்சியுனக்கு?
காதற்பஞ்சும் கன்னி உன்
பார்வை நெருப்பும்
பற்றிக்கொண்டு எரியுதடி
 என் நெஞ்சில்...

உன் ஒற்றைத்துளிக் கண்ணீர்
எனக்கெனச் சுரந்தால் போதுமடி...
என் நெஞ்சத்து நெருப்பணைத்துக் குளிரூட்ட...
தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!

எதிரெதிர்த்துருவங்கள் ஈர்க்குமாமே!
நீ என்னை ஈர்க்கிறாய்...
உண்மையைச் சொல்...
நான் உன்னை???...

Tuesday, July 13, 2010

Share

நம் காதல்

என்னை அறியாமல்
என் மனதில் இடம் பிடித்தாய்!
இன்பங்கள் பல அள்ளி தந்தாய்...

அன்பே........
ஏழை இவள் இதயத்தில்
ஏன் நீ குடிவந்தாய்?
பாசத்தை அள்ளி தந்தாய்
சந்தோசமே என் வாழ்வென
எண்ண வைத்தாய்...

இன்று....
இறகு தொலைத்த பறவைபோல
தேடுகிறேன் உன்னை
கனவாகி போனது எம் காதல்
யாருக்கும் தெரியாமல்
என் உயிரில் கலந்த
உன்னை மட்டும்.....
மறக்க சொல்லுது விதி
நாம் பிரிந்தாலும்-நம்
காதல் பிரியாது.

Monday, July 12, 2010

Share

காத்திருக்கிறேன்....

வான்மதி தொட்டு வலம்வரும்
கற்பனையை வளர்த்து விட்டவனே..
உன் வருடலுக்காய் காத்திருக்கிறேன்.

விழிகளை மூடி உன்னை நினைக்கையில்
விந்தைகள் நிகழ்வது ஏன்?
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பது ஏன்?
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன?
உன்னைக் கண்டு கவலைகள் கூற
சுமைகள் கலைந்திடும் மாயமென்ன?
என் வேதனை கண்டு காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன்?

உன்னை நேசிக்கிறேன் என்பதைவிட
உன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............

Sunday, July 11, 2010

Share

என் தாயே......


நினைவில் உன்முகம் மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!

மீண்டும்
ஒருமுறை மறுமுறை
வாழ்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு மரணமும்
வேண்டும்.

கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த கைகளையிழந்தேன்

எத்தனை பிறவிகள் எடுப்பினும்
அத்தனை பிறவியும் தாயாக வந்துவிடு...

அரை தசாப்பதம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் சில நினைவுகள்....

வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......

பட்டு மடியில்
தாலாட்டு....

செல்லம் என்ற
சிறு அணைப்பு.....

சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்

மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் தூயன்புக்கு நிகர்.....

Friday, July 9, 2010

Share

சாபம்....

ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!....

Tuesday, July 6, 2010

Share

அழகிய ஓவியம்


எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஓளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது...

வாழ்க்கை பற்றிய கனவுகள்
வானவில்லென கோலமிட்டு
மின்னலென பளிச்சிடுகின்றது...

நீ புதைத்த சோகங்கள்
எனக்குள் உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள் உனக்குள்
துள்ளி விளையாடுகின்றது....

உன்னோடு கரைந்த நிமிடங்கள்
ஓவ்வொரு பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்குலுங்குகின்றது
இன்பங்கள் வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது.....

உன்னோடு கலந்து விட்ட வாழ்க்கையிது
இன்பங்கள் பகிர்ந்து துன்பங்கள் துடைத்து
புன்னகைகள் பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் பயணம்....

பாதகைகள் நீடிக்க
கண்கள் அகல விரிகின்றது
உன்னோடு நான் பயணிக்க இருக்கும்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதை
நினைத்து....!

இதயம் போடும் ஆனந்தக் கூச்சல்
கண்கள் போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் மெல்லிசை
அனைத்தும் உன் பெயரே...

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி அலைகின்றது
என்றாவது என் கண்கள் உன்னைச்
சந்திக்கும் நேரம் அழகிய ஓவியமென
எம் நினைவுகளைப் பரிசளிக்க..........

Monday, July 5, 2010

Share

உன் மெளனம்......


அன்புக்கேது அளவுகோல்
அளந்தளந்து அன்பு வைத்திட....

நிலவு தேய்ந்திட
வானம் அழுவதில்லையே - நீ
தேய்வதால் நான் அழுகின்றேன்......

தேய்ந்திட்ட நிலவு வளர்ந்திட
மலர்ந்திட்ட பூ வாடியதே
உன் சினம் கண்டு.....

மழை நீரென அன்பை நீ பொழிந்திட
சிலிர்த்துப் போகுதே எனதுயிர்....

கனிந்திட்ட பழமென இனித்திடும்
உன் புன்னகையின் தித்திப்பில் என்னிதயம்....

என் பூவாசல் தேடி வந்த தேவதையே
உன் அன்புக் கனிகளை
மரமென விதைத்திடு என் மனதினிலே
என் ஆயுள் முழுவதும் புசித்திடுவேன்...

என் தேகம் தீண்டிடும் தென்றல் காற்றே
என்னுயிரின் தேகம் தீண்டி வந்தாயா
என் ஆருயிரின் ஸ்பரிசம் உன் தீண்டலில்.....

பூக்களே பூக்களே - என்
கவிதையில் மலர்ந்திட்ட பூக்களே
என்னவள் கூந்தலில் அடைக்கலம் தேடுங்கள்
உயிர்த்திடுவீர்கள் என்னவள்
தொடுகையில்....

உன்னோடு நான் பேசியதை விட
உன் மெளனத்தோடு இரண்டறக் கலந்தது
அதிகமன்பே...

உன்னை விட - உன்
மெளனம் பிடிக்குமெனக்கு
என்னை அணுஅணுவாய்
சித்திரவதை செய்வதால்...

அதில் கூட சுகமுண்டு உயிரே
என் உயிரே நீயாகி போனதால்.....

Sunday, July 4, 2010

Share

ஆசை.......

உன் அரவணைப்பினில்
கொஞ்சிடும் குழந்தையாய்
தவழ்ந்திட ஆசை...

உன் இன்னிசையில்
ராகமாய் மாறிட
ஆசை...

உன் சுவாசத்தின்
காற்றாய் மாறிட
ஆசை...

உன் உதட்டில்
புன்னகையாய்
வாழ்ந்திட ஆசை...

உன் இதயத்தில்
இரத்தோட்டமாய்
ஓடிட ஆசை...

உன் மனதினிலே
எண்ணங்களாய்
உருப்பெற ஆசை...

கடைசி வரை உன்
நாமத்தை உச்சரிக்க
ஆசை...

உன் கண்களில்
ஓளியாய் வாழ்ந்திட
ஆசை...

என் வாழ்வின் துன்பமான
உன் காதல் நினைவுகளை
தென்றலாய் கலைத்திட
ஆசை....

வானத்தில் நிலவாய்
இயற்கையின் பசுமையாய்
பூக்களில் வாசமாய்
என் வாழ்வின் வலிகளை
புற்களாய் கலைந்திட
ஆசை...

Friday, July 2, 2010

Share

பிரிவும் ஒரு காதல் தான் !!!...

 பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Thursday, July 1, 2010

Share

மௌனம்

மௌனம் கூட ஒரு மொழிதான்
அழகும் அர்த்தமும் நிறைந்ததுதான்
அதற்காக அதையே கட்டி கொண்டு வாழ வேண்டுமா ?

சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை..

சோதனைகள் வாட்டும் போதும்
சோர்ந்து நான் விழும் போதும்
சோகங்கள் தீர்த்து வைக்கும்
சொற்கமான உன் மடி வேண்டும் தாயே!