Friday, September 23, 2011

Share

முத்தம்...



அந்தி சாயும் நேரம்
அன்று கடற்கரையோரத்தில்
கடலலை எமை நனைக்க
இயற்கையின் படைப்பில்
எம் கண்கள் வியக்க
அதை கண்டு நிலா
கண் சிமிட்ட
முகில்கள் தன் கண்னை மூட
சத்தமின்றி நீ
பதிந்த முத்தம்
காயவில்லை இன்னும்...

Sunday, September 18, 2011

Share

விவாகரத்து...



பேசி பேசி பார்த்தாச்சு
பேச்சும் முடியவில்லை
முடிவும் எட்டவில்லை
ஓர் முடிவினை நோக்கி
பல விதங்களில் பேச்சு
விடிய விடிய பேசினர்
விடித்த பிறகும் பேசினர்.

விரிசல்களும் அதிகரித்தன
விரக்தியுடன் வலி அதிகரிக்க
தொடர்ந்தனர் தம் பேச்சை
இருந்தும் முடிவு எட்டவில்லை
அன்பாக பேசினர்
அதிகாரமாக பேசினர்
எல்லை மீறியும் பேசி பார்த்தனர்
தீர்வு ஏதும் எட்டவில்லை
சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.

இதற்கு பிறகும்
பேச்சு எதற்கு?
இரு மனங்களுடன் உறவாடி
தீர்க்கமான முடிவை எட்டினர்
கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...

Saturday, September 10, 2011

Share

தாய்மை....


இதம் தரும் உணர்வுகளுடன்
அனுதினம் கலண்டர் கிழிக்கையில்
அச்செய்தி கிடைத்திடுமோ - என
ஏங்கத்துடன் இருந்த அவள்,

ஆண்டு பல கடந்தும் - அவள்
புரிந்திட்ட நன்மையின் விளைவால்
ஆண்டவனின் அருளால்
அவள்தன் தங்க வயிற்றில்
குட்டி நிலா துயில் கொள்ள
தனியான இடம் அமைத்து
பெண்மைக்கே பெருமை சேர்க்கும்
தாய்மை என்னும் உறவுக்குள்
நகர தொடங்கி விட்டாள்
இன்று முதல்...

வெறுமையாய் இருந்த அவள்
முழுமையாயாய் ஆனாதினால்
ஆனந்தத்தில் மூழ்கியே
சரணடைகின்றாள் தன்
கணவன் மடியில்....

பிரிவால் துவண்டு இருந்த
உறவினர் முகங்களிலே
ஆயிரம் மின்னல் அடித்திடும்
புன்னகையின் பிரதிபலிப்புக்கள்..

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...

Monday, September 5, 2011

Share

சில்மிஷம்.....



வெறுமை என்னை
ஆட்கொள்ளும் தருணங்களில்
துணைக்கழைக்கின்றேன்
உன் நினைவலைகளை
அது என்னை
சீண்டுவதும்
கெஞ்சுவதும்
கொஞ்சுவதும்
அடிமையாவதும்
உணர்வுகளை தூண்டுவதும் - என
தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில் 
இல்லாமல் போனாலும்கூட...