Tuesday, October 30, 2012

Share

எதனாலே உன் சீற்றம் ???



அழகான உலகிலே
இழிவான செயல்களால்
இயற்கை அன்னையே
இயலாது கொந்தழிக்கின்றாயா?
இல்லையேல் எதனாலே 
உன் சீற்றம் ???

வாழ்ந்து முடித்தோர் 
எது வந்தாலும் ஏற்கும் நிலையில்....
வாழ ஆசைகொண்டோர்
கண்களிலே பல ஏக்கம்...!!!
இடையினர் மனங்களோ
உன்னை எதிர்கொள்ளும் பயத்தினிலே..!!!
ஏதும் அறிய குழந்தைகளோ 
குறும்புகளுடன் சந்தோஷமாய்...!!!
நாளைய விடியலுக்காய்
விழித்திருக்கும் பல விழிகள்....!!!
எப்படி இருப்பினும்
உன்னை எதிர்கொள்ள
எம்மால் முடியாதம்மா...!!!

அடுத்தடுத்து துன்பங்கள்
அயராது தாக்கினாலும் 
எதிர்நீச்சல் போட்டிடலாம்..!!
அன்னையே உன்னை 
எதிர்த்திட முடியாதம்மா...!!!
இரங்கலாய் கேட்கின்றோம் 
இரக்கம் காட்டாயோ????

Wednesday, October 17, 2012

Share

நாளும் தெலைகின்றோம்.....




குட்டிப் பெண்னே
என்னை சிறையேடுக்கும்
உன் சிரிப்பொலி 
சில்லறையாய் சிதறுதடி...
அள்ளி எடுத்து ரசிக்கிறேன்... 
உன் விழிமொழி
பிரம்மிக்க வைக்குதடி கண்னே...
குதூகலிக்கும் உன் மனம்
வெளிப்படுத்த நீ சிரிக்கும் சிரிப்பு...
சிரிப்போடு உன் கண்சிமிட்டல்
சிந்தித்து துடிக்கும் உன் உடல் மொழி
சீராக புரியுதடி அன்னை எனக்கு...

பசித்திட்டால் தெரிவிக்கும் 
உன் இருமலுடன் சினுங்கள்
பார்க்காமல் இருப்பது போல்
நான் நடித்தால் 
குழந்தைமொழியில் உன் ஏச்சு
அப்பப்பா இத்தனை அதிசயங்கள்
குட்டிப்பெண்ணே உன்னிடத்தில்
கண்டு நான் வியக்கின்றேன்...
கருவில் சுமந்த நாளை எண்ணி 
பெருமையுடன் உன்னை இன்று
கையில் சுமக்கின்றென்...

தந்தை குரல் கேட்கும் திசை
தானாக உன் தலை சாயுதடி....
தந்தையிடம் தாவிட வேண்டி
சிரிப்புடன் உன் தாவல்
சிறுபிள்ளை மொழி பார்த்து
தந்தை முகம் ஆனந்தத்தில்....

அக்கா குரல் கேட்டிட்டால்
ஆனந்தத்தில் உன் துள்ளல்
குட்டிப்பெண்ணாய் தானிருந்தும்
உன்னை தூக்கி அள்ளிட
கொள்ளை ஆசையில் 
துள்ளி குதிக்கின்றாள் அக்கா.....


அள்ளி எடுத்து துள்ளி விளையாட்டு
ஆனந்தத்தில் நம் இல்லம்...
குழந்தையே உன் குறும்பில்
நாளும் தெலைகின்றோம்

Wednesday, October 10, 2012

Share

தந்தை உள்ளம்....


அழுத்திக் கொடுக்கும்
அன்பு மகளின்
ஆசை முத்தம்
ஆனந்நத்தில்
ஆர்பரிக்கும் தந்தை உள்ளம்....
என் அன்னையை கண்டேன்
மகளே உன் வடிவில்.

Monday, October 8, 2012

Share

என் அழுகையில்



பல இரவுகள் 
வலியின் பிடியில்
சிக்கி அழுதது 
ஓர் இதயம்.
துடிதுடித்திருந்தேன்
உறக்கமின்றி.
காலத்தின் உந்தலின்
வெளியேற்றப்பட்டேன் நான்
அன்றும் துடித்தாள் அவள்
பொறுக்க முடியாமல்
வாய் விட்டு அழுதேன் நானும்
என் அழுகையில் 
அவளின் சிரிபொலி
பூரிப்பாய் வளர்கிறேன்
அவளின் பிள்ளையாய்
'அம்மா' என்று அழைத்தபடி....

Wednesday, October 3, 2012

Share

நினைவுகளின் சிம்மாசனத்தில்...


வார்த்தைகளை ஆயுதமாக்கி
கோபங்களை செயலாக்கி
இயலாமையை வடிவமாக்கி
வலியினை பனியாக்கி
திட்டித் தீர்க்கிறாய் - என்னை
இருந்தும் 
வலிக்கவில்லை 
நினைவுகளின் சிம்மாசனத்தில்
நீயே ஆட்சி புரிவதால்
சலசலகவில்லை 
என் மனம்
உன் அறியாமையை எண்ணி...
Share

ஒற்றை வரியில்


வார்த்தை வர்ணங்களால் 
அலங்கரித்து
போலி அன்பு பூசி
பாசம் காட்டும்
பல இதயங்களும் உண்டு..
ஒற்றை வரியில்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
சில இதயங்களும் உண்டு