Tuesday, January 24, 2012

Share

காதலே...


கண்களில் சிறைப்பட்டு
இதயத்தில் உயிர் பெற்று
நினைவுகளில் படர்ந்து
பரிதவிக்கும் காதலே
வந்த வழியே
மீண்டும் செல்வாயோ?

முட்களில் உறங்கும் 
இதயக் கூட்டில்
உனக்கேது வேலை இங்கு?
நேற்று வரை இல்லாத 
தவிப்புகளை என்னில்
தொடரலையாய் 
ஏற்படுத்தும் உன்னை
அரவணைக்கும் எண்ணமில்லை. 

சிந்தனையை கலைத்து 
சிதறடிக்கும் உன்
உன்னத உணர்வால்
சீர்குலைகின்றது 
என் வாழ்க்கை..

ஆயுதமின்றி
எனை தாக்கும் உன்னை
தாக்கும் பிடிக்கும் தைரியம்
என்னிடம் இல்லை.
நிம்மதி நிலை குலைந்து
நிர்கதியாக நிற்கும்
என்னை விட்டு ஓடு..

நாளைய பொழுதுகள்
எனக்காகவும் விடியலாம்
அன்று சந்திக்கலாம்.
அதுவரை
நினைவுகளை மட்டும்
எனதாக்கி விட்டு செல்
காலமெல்லாம்
நானாகவே வாழ்ந்திடுவேன்.

Friday, January 20, 2012

Share

தவிக்கிறேன்


நடக்க நினைக்கிறேன்
பாதை எங்கும் இருளாக
உறங்க நினைக்கிறேன
படுக்கையெல்லம் முட்களாக
வாழ நினைக்கிறேன்
எங்கும் சூனியமாக
அன்பைத் தேடுகிறேன்
எல்லாம் ஏமாற்றமாக
திசைகள் இன்றி
தவிக்கும் படகு போல
தவிக்கிறேன் நானும்
தனிமரமாய்....

Saturday, January 14, 2012

Share

பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Saturday, December 31, 2011

Share

புதிய ஆண்டில்....



சோதனை பல சபித்து - அதில்
மனிதனை வேதனையில்
விழ வைத்து
வெற்றி பயணத்தினை முடிந்து
விடைபெற தயாராகி விட்டது
2011.....

ஓராயிராம் ஆசைகளும் ஏக்கங்களும்
நம்முள்ள....

யுத்தம் என்னும் 
வேள்விக்குள் தீக் குளித்து
கேள்விக் குறியோடு
அலைந்து திரியும்
எம் தேசத்து உறவுகளுக்கு
விடை கிடைத்திட...

இயற்கையின் சீற்றதில்
சின்னாபின்னமாகி போன
பல ஆயிரம் உயிர்களை
எனியும் இழக்காமல் இருக்க
இயற்கையின் சமநிலையை காத்திட...

தோல்வியே வாழ்வாக
துவண்டு போன உள்ளங்களுக்கு
சூரிய உதயமாய்
வெற்றிகள் மட்டும் கிடைத்திட....

கண்ணீரில் கரைந்து
பாசைகளை மெளனமாக்கி
சோர்ந்து போனவர்களின் உள்ளங்களுக்கு
புன்னகை மட்டும் வரமாய் கிடைத்திட...

லட்சியம் ஏதுமின்றி
கட்டாகலி மாடுகளாய்
அலைந்து திரியும் 
இளைஞர் கூட்டத்தில் 
தன்னப்பிக்கை என்னும்
அட்சயபாத்திரம் ஊற்றெடுத்திட...

எண்ணற்ற கற்பனையில்
ஏங்கி அலையும் 
மனித மனங்களின்
ஆசைகளை பூர்த்தி செய்திட...

பிறக்க போகும் 2012
வரமாய் அமைய
வாழ்த்துகின்றேன்....

Tuesday, December 27, 2011

Share

மரணத்தின் பின்னால்...



மனித சிந்தனைக்கு
அப்பாலும் சில
புதிய தேடல்கள்
விரிந்தே கிடக்கின்றது

சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்.

வாழும் போது தெரியாத
வாழ்வின் தத்துவம்
இறுதி மூச்சில்
மரணம் எனும்
வேள்வியில் உணர்கிறான்
மனிதன்!

மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்றனர்.

மாலையில் மரணிப்போம்
என அறிந்துதான்
மலர்கள் மகிழ்சியாய்
இதழ் விரிக்கின்றன..

கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய் 
கடலினை முத்தமிடுகின்றன..

இறப்பை உணர்ந்து
இருக்கின்ற காலத்தை
இன்பமாய் கழிக்கும்
இயற்கையின் லாபவம்
மனிதனுக்கு
பிடிபடுவதே இல்லை என்பதே
துரதிஷ்டம்...