Tuesday, August 30, 2011

Share

இன்றைய மனித வாழ்வு...

நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது
நிதர்சனங்கள் கூட
நிச்சயமற்று போனதால்
நிம்மதி இழந்து
நிலை குலைந்து
நிர்க்கதியற்று போனது
இன்றைய மனித வாழ்வு....

Sunday, August 28, 2011

Share

வாழ்க்கை சிறையில்...

 "அழகை விடுத்து
அறிவை நேசித்தேன்...."
"பணத்தை விடுத்து
பாசத்தை நேசித்தேன்..."
"ஆடம்பரத்தை விடுத்து
அடக்கத்தை நேசித்தேன்..."
"ஆணவத்தை விடுத்து
அன்பை நேசித்தேன்...."
இருந்தும் இன்று
வாழ்க்கை என்னும் சிறையில்...
தூக்குத் தண்டனை கைதியாக........
Share

தாமரை போல்...

 சூரியன் உதயத்திற்கு
காத்திருக்கும்
தாமரை போல்...
உன் மார்பில் சாய்ந்து
ஆதங்கம் தீர்ந்திட
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்...!

Thursday, August 25, 2011

Share

சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்

மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!

அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி  அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி 

உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும்  சிறகுக்காய்......

Monday, August 22, 2011

Share

தோழியே!!!அன்பினிலே.
தாயின் மறு உருவமானாய்
தந்தையின் பொறுப்பானாய்
அறிவுரையில் அக்காளானாய்
அதட்டுதலில் அண்ணானாய்
சம உரிமை அளித்திடும் தங்கையாய்
அறிவுரை சொல்லுகையில்
என் பாட்டி கூட - உன்னிடம்
பாடம் கற்கும் ஆசானாய்
தோழியே!!!
ஒரு உருவில் என்
குடும்பததைக் கண்டேன் உன்னில்....

காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...

மாற்றம் என்பது மாறாததொன்று - இது
யாவரும் பிதற்றும் கோஷம்
வேண்டவே வேண்டாம்
மாற்றத்திற்கு புது அர்த்தம் கொடுபோம்
கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று....

Thursday, August 18, 2011

Share

அவன் நினைவுகள்.....


காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கரைந்த
ஏக்கங்களுகம் அதிகரித்த
நாடி நரம்புகள் துடிக்க
அவன் வருகைக்காய் 
காத்திருந்த - அக் கணப்பொழுதுகள்
இன்று நினைக்கையில்
இனிமையான நினைவுகள்
வலியுடன் கலந்து
புதுவித உணர்வுகளை - என்னுள்
பிறப்பிக்கின்றன இன்னும்....

நட்பில் வளர்ந்த காதல்
வீரியம் கொண்டு வளர்கையில்
என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்
பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.

தொலைபேசியில் அழைப்பில்
சிணுக்கிடும் அவன் பெயர்
செல்லமாய் எனை அழைப்தாய்
இன்றும் ஓர் பிரமை 
என்னைச் சுற்றி....

விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்...

Thursday, August 11, 2011

Share

காத்திருப்பு....


கன்னியவள் கை பிடிக்க
கண் தூங்கும் நேரம் முதல்
காலை வரை திரண்டு வரும்
கனவுகளில் தினம் மூழ்கி
கடந்தோடும் மணிந்துளிகள் ஒவ்வொன்றும்
கலந்து பெருக அவள் நினைவு - இன்ப
களிப்பினிலே அவன் மனம்.

கானும் காட்சியெல்லாம்
கன்னியவளாய் தோன்றிட
ஒலிக்கின்ற ஓசையிலே - அவள்
நாமம் தித்தித்திட
இசையும் இனிமையும்
இணைந்த இன்பத்தில்
இவ்வூலகில் அவன் இன்று

மனதினிலே மாளிகை கட்டி
மன கற்பனையில் வாழும் அவன்
மண மஞ்சமதில் மாலை சூட்டி - தன்
மனைவியாய் மனைதனை
அலங்கரிக்கும் அன்நாளுக்காய்
அல்லும் பகலும் காத்திருக்கின்றான்.....

Sunday, August 7, 2011

Share

உண்மையான நட்பு.....உலகில்
இறைவனின் படைப்பான
அழகிய சிற்பமான
பல சிற்பிகளால் - இணைந்து
செதுக்கப்படும்
இல்லை இல்லை
உடல் வளர்ந்து 
உயிர் கொடுக்கும்
உன்னதாமான உறவாக 
நட்பு...

தாம் வாழ 
பிறரை வருத்தும் உறவில்
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு.....

Wednesday, August 3, 2011

Share

அந்த நிமிடத்தில்...


நேற்று தொடங்கி
இன்று வரை நீடித்த
என் உள்ளத்து உணர்வுகள்
அடங்கியே போனது - இன்று
அந்த சில நிமிடங்களில்....

காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...

இனிமையான நினைவுகளினால்
இதழ் விரிக்கும் உணர்வுகள் - என்னி்ல்
தினம் தினம் அதிகரிக்க
காத்திருக்கும் கணபொழுதுகள்
பெரும் மூச்சுடனே
கரைந்தே போய் இருந்தன
இன்று வரை....

கணிசமான கணப்பொழுதுகள்
கழிகின்றது அவளுடனேயே..
இருந்தும்
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...

ஏதோ..
ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று....