Wednesday, March 27, 2013

Share

இன்று முதல்....

அம்மா
ஏன் என்னை
பெற்றாய்
பாசத்தின்
ஏழ்மையான என்னிடம்
வஞ்சனையால்
வதைக்கின்றனர் 
யாவரும்!

சிதறிக் கிடக்கும்
சுயநலம் 
இல்லாத உறவுகளை
தேடி அலைகிறேன்
எங்கும்
ஏமாற்றமாய்
என் தேடல்..!!

பணம்
பாசம் விற்கும்
பாவப் பொருளாய்
இதயத்தை 
கீறு போடும்
ஆயுதமாய்
இன்று 
என் வாழ்வில்.
தொலைந்தது
பாசம்
இடிந்தது இதயம்...!

ஆயிரத்தில்
ஒன்றில்
அலைந்து திரியும்
நடை பிணமாய்
நானும்
இன்று முதல்....

-தோழி பிரஷா-
25.03.2013

Thursday, March 21, 2013

Share

உன் வரவுக்காய்..


உன் நினைவுகளில்
நனைந்தபடி...
இழக்கும்
ஒவ்வொரு
மணித்துளிகளும்
உன் வரவுக்காய்
காத்திருந்து
கரைந்து போகின்றது
கண்ணீர் துளிகளாய்..!

♥-தோழி பிரஷா-♥
11.03.2013
Share

இதயக்கூட்டில்


மனதை குத்தி செல்லும் 
மனித மனங்களை 
மாற்றிட தினம் வேண்டி
தோற்றுத்தான் போகின்றேன்...!!!

இரக்கமற்ற இதயங்கள் நடுவே
இரையாகித்தான் போனேன்
இறைவா..!!!
இரங்கிட மாட்டாயா???
இவள் துன்பம் துடைத்திட மாட்டாயா?

வாழ்வின்
வழியெங்கும் போராட்டம்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளுடன் 
தினம் நகரும் மணித்துளிகள்...!

இதயக்கூட்டில்
இரக்கமற்றவர்களின் 
கிறுக்கல்கள் வடுக்கலாய்...!
அழித்திட பல வகை புச்சுக்கள்
அழித்திட முடியுமா? 
அழியாத வடுக்களை...!

♥-தோழி பிரஷா-♥
20.03.2013
Share

அற்புத கலையாய்...


மனம்
கடலை விட
ஆழமானதென
அறிஞர்களின் 
ஆய்வுகளின் வெளியிடை.
அந்த 
ஆழத்தின்
தூரம் அறியும்
இரு உள்ளங்களின்
தேடலாய்...
ஆசைகள் 
கனவுகள்
கட்டி வளர்க்கும்
அற்புத கலையாய்...
"காதல்"

♥-தோழி பிரஷா-♥
11.03.2013
Share

உறவுகள் எனும் மேடையில்


கடிகாரம்
இழக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
என் சுவாசத்
தொகுதியினை
கூறு போட்டுச்
செல்கின்றன
உறவுகள் எனும்
மேடையில்
நானும் ஒரு
நடி(க)கை(னா)யாக
மாறும்போது...

♥-தோழி பிரஷா-♥
06.03.2013
Share

திறந்து விடு உன் கண்ணை..!


இரக்கமற்ற இறைவா
இதயத்தோடு
எனை ஏன்
படைத்தாய்?
உன் திருவிளையாடலை
தொடர
மனம் என்ன
விளையாட்டு மைதானமா?
நித்தமும்
கண்ணீரால் 
அபிஷேகம் செய்கிறேன்
குளிரவில்லையா
உன் மனம்?

சூரியனும், சந்திரனும்
இயற்கையின்
நியதியாகும் போது
எனக்கு மட்டும்
ஏன் 
இருளை வரமாய் 
அழித்தாய்?

கல்லான கடவுளே
மனிதனாக பிறந்தது
பாவமா?
இதற்கான பதிலை
எப்போது 
சொல்லப் போகிறாய்?

கண்களின் ஓரம்
திரட்டும் கிடக்கும்
தண்ணீர் திட்டுக்கள்
இன்று காயும்
நாளை காயும்
என காலம்
நீண்டே செல்கிறதே
எப்போது இதற்கான
முற்றுப்புள்ளி?

மௌனம் காக்கும்
பரம்பொருளே
திறந்து விடு
உன் கண்ணை
நிம்மதியாய் 
உறக்கம் கொள்ள
நீண்ட நாளாய் 
காத்திருக்கிறேன்.........

-தோழி பிரஷா-
23.02.2013
Share

எதுமில்லை...!


என்னில் எதுமில்லை
கண்ணில் ஈரமில்லை
சிந்தனையில் சலசலப்பில்லை
எண்ணங்களில் மாற்றமில்லை
முகத்தில கவலையில்லை
உதட்டில் சிரிப்பில்லை
எனினும்
இதயம் மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகளை 
சுமந்தபடி.....!

-தோழி பிரஷா-
15.02.2013
Share

♥♥♥காதல்♥♥♥


எட்டி உதைந்தாலும்
கட்டி அணைப்பேன்
என்பது 
♥ தாயின் காதல்... ♥

தூக்கி எறிந்தாலும்
தாங்கிப் பிடிப்பேன்
என்பது 
♥தகப்பனி்ன் காதல்♥

முட்டி மோதி
சண்டையிட்டாலும்
விட்டுப் பிரிய
மறுப்பது
♥சகோதர காதல்♥

இடியே
விழுந்தாலும்
என்றும் பிரியாது
சேர்ந்தே இருப்பது
♥நட்பு காதல்♥

பிரிவுகள்
தொடரினும்
உறவினை 
வளர்க்கும்
உன்த உறவாய்
♥தாம்பத்திய காதல்♥

-தோழி பிரஷா-
14.02.2013
Share

அகிலமதில் வார்த்தையில்லை..


“அன்னையின் 
அணைப்பினில்-பல 
ஆயிரம் ஜென்மங்கள்
வாழந்திடலாம்”

“எவ்வித மெத்தையில்
தூங்கினாலும்
அன்பான அணைப்புடன்
அன்னை மடியில் 
தூங்குவதற்கு ஈடாகுமா?”

“அள்ளி அணைத்து
உச்சி முதல் பாதம் வரை
முத்தத்தாலே நித்தம்
பாசமழை பொழியும்
அன்னையவள் அன்பை சொல்ல
அகிலமதில் வார்த்தையில்லை..”

-தோழி பிராஷா-
12.02.2013
Share

முதல் முத்தம்...!


என் 
உணர்வுகளின்
ஆழம் அறிய
செய்தது
அன்று நீ
தந்த 
முதல் முத்தம்...!

-தோழி பிராஷா-
12.02.2013
Share

இன்றைய உன் பிரிவு....!


இழப்புகள்
புதிதல்ல எனக்கு
இருந்தும்
தாங்கிக் கொள்ள
பழகிக் கொண்டேன்.
ஆனால்,
சுழலும் தீப்பிளப்பாய்
சுட்டெரிக்கிறது
இன்றைய 
உன் பிரிவு....!

-தோழி பிராஷா-
10.02.1013

Share

தினம் தேடுகின்றேன்


நாம் நடந்து சென்ற
பாதை வழி
நான் கடந்து போகையிலே
உன்னை தினம் 
தேடுகின்றேன்
எங்கும் நீ இல்லை..!
ஆனால்
காலங்கள் கடந்தாலும்
நான் நீ 
என்னும் நினைவுகளை
தினம் கடந்தே
செல்கின்றேன்..!

-தோழி பிராஷா-
09.02.1013
Share

உன்னை தேடுகிறேன்.


அதிகமாய் 
வலிக்கிறது
மடி சாய
உன்னை தேடுகிறேன்.
ஏனோ
கண்ணாமூச்சி
காட்டுகிறாய்
இப்போதெல்லாம்...!!!

-தோழி பிரஷா(tholi Pirasha)-
05.02.2013

Share

அம்மா


அம்மா
நான் தேடி
அலையும்
சொர்க்கம்

-தோழி பிரஷா (Tholi Pirasha)-
04.02.2013
Share

தேடுகிறேன் எங்கும்

தேடுகிறேன்
எங்கும்
காட்சி தர 
மறுக்கிறாய்
தென்றலைப் போல...!


-தோழி பிராஷா-(Tholi Pirasha)-
ரோஜாக்கள் FAcebook Page
Share

நினைவு பூக்கள்தினம் தினம்
மலரும்
உன் நினைவு
பூக்கள்
என் கண்ணீர்
மழையில்
நனைந்து
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது

-தோழி பிரஷா-
29.01.2013