Monday, June 27, 2011

Share

பாசம்...


பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..

பாசம் இதன் எல்லைக்குள்
பலம் சேர்ந்து போட்டியிட
பல ஜென்மம் எடுத்தாலும்
பலியாகி போகிறது - அது
பாசத்திற்குள்ளே இங்கும்

பசியிது மறந்து
பகல் இரவெல்லாம்
பகையிது வளர்திடுமோ என
பாவையிவள் பட்ட துயர்
பகிடிக்கு கூட இந்த
பாரினில் யாருக்கும் வேண்டாம்

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்.

Friday, June 24, 2011

Share

நட்பின் நாயகியை...
வண்ண வண்ண மலர்களெல்லாம்
வாசம் வீச வந்துதித்த
வையம் என்னும் தோட்டத்திலே
வசந்தகால புதுவரவாய்
வந்துதிந்த வண்ண மலரே


பாசமதில் மீதமின்றி
பாரினிலே பாச தாயாய்
கணவனுக்கு காலமெல்லாம் காதலியாய்
நட்பினிலே நாயகியாய்
அனைவருக்கும் அன்புருவாய்
அகிலமதில் அலை மோதுதம்மா உன் அன்பு


உதட்டு வழி புன்னகையும்
உள்ளத்து வண்ணங்களும்
உலகமதில் என்றும் நிலைத்திட
உருவேற்று உயிர்பெற்று
புது மலராய் நீ மலர்ந்து
மணம் பரப்பிற்ற இன் நன்நாள்போல்
என்நாளும் புலர்ந்திட
நானும் உனை வாழ்த்துகின்றேன்.


(என்னை கவிதையில் வாழ்த்திய அன்பு உறவுக்கு நன்றிகள்)

Tuesday, June 21, 2011

Share

அழகு...


பெண்ணே!!!
அறியாயோ
ஓர் சேதி
பகலை விழுங்கி
இரவினை கக்கும்
பொழுதினிலே
வெளியில் வராதே
பொறாமைப்படும் நிலா
உன் முகத்தைப் பார்த்து.....!

Friday, June 17, 2011

Share

நட்பு


தோழியே,
உன் பிரிவில் கூட
இனிமையான நினைவுகள்
என்னுள் ரீங்காரம் போடுகின்ற
நாம் பழகி தொலை நாட்களை.

இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு
இனிமையாய் நகர்கையில்
இடைநடுவில் வந்த
இடைவெளியும் விலகிடும்
இனிமையும் தொடர்ந்திடும்
விடியாத இரவுகள்
மீண்டும் மலர்ந்திடும்
நம் நட்பின் ஆழம்
நாலு பேருக்கு புரிந்திடும்
நம்பிக்கையே வாழ்வையாய் - நீ
நகர்ந்து செல்கையில்
நிழல் போல் தொடர்ந்திடுவேன்
என்றும்  நட்பாய்......

Saturday, June 11, 2011

Share

இ(எ)ன்றும் காதலர்களாய்.....

பாசம் என்னும் வலையில் சிக்கி
பரி தவிக்கின்றேன் பாரினில்..
பாவங்கள் போக்கிட
பாரிகாரம் தேடுகின்றேன்...

விதி தேவன் வரைந்திட்ட
பாதை வழியினிலே
நான் கடந்திட்ட
கடின பாதைகளும் எத்தனையோ....
அன்றும் அப்படித்தான்
மனம் சோர்ந்து தவித்திருக்கையில்
கடவுளின் கிருபையால்
மண்ணுலகில் அவதாரித்த
மானுட தெய்வமாக
அன்று அவள் எனக்கு
வரமாய் கிடைத்தாள்..

அன்பு என்னும் ஒன்றுக்கு
அநாதையாய் அலைந்து
ரணமாய் போய் இருந்த
என் இதய கூட்டுக்கு
அமைதி தரும் இனியவளாய்
என்னருகில் அவள் அன்று..

பசித்தவனுக்கு பாயசம்
கிடைத்தாற் போல்
என்னுள்ளும் பல
மாற்றங்களை ஏற்படுத்திய
மகத்தான உறவான அவள்
நல்ல அம்மாவாக....
நல்ல தோழியாக..
நல்ல காதலியாக...
நல்ல மனைவியாக...

சந்தோசம் என்னும் வானில்
சிறகடித்து திரிந்த பறவைகளாய் - நாம்
காலத்தின் கோலத்தால்
பிரிவு என்னும் அரக்கானால்
திசை மாறி பறந்து
நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்
இன்றும் காதலர்களாய்.....

Thursday, June 9, 2011

Share

திசைமாறும் உலகில்.!

 தனிமையில் பேசிட 
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய் 
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!

அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!

மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!

அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!

அவன் ஏக்கமாய்  நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!

மனதோடு போராடி  மரணித்த மனதுடன்  போகின்றேன் 
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு  மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று 
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!

தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல் 
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!


மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து 
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!

Friday, June 3, 2011

Share

பெண்ணின் அவலம்...


பெண்ணின் பெருமை பேசும்
இவ்வுலகின் வாழ்வுதனில்
பெண்ணின் வேதனைகள் தான் எத்தனையோ!
இளமைப் பருவ காதலுடன்
இனிமையாய் காலத்தை கழிக்கும்
கன்னியரின் கல்யாண கனவு
மணவறையுடனே மரித்திடும்
மாயம் தான் என்னவோ...

ஆண்கள் என்னும் ஆதிக்க வலையில்
பெண்ணுக்கு விலை பேசும்
பேதகர்களின் ஆசையினால்
முதிர்கன்னிகளின் வேதனைகள் எத்தனையோ?

வீதிகளின் நடக்கையில்
காமுகரி்களில் கண்ணில் பட்டு
காலமெல்லாம் கண்ணீருடன் 
காலத்தை கழிக்கும் 
பெண்கள் தான் எத்தனையோ?

சுடும் சூரியனாய் சுட்டெரிக்கும்
ஆடவன் வார்த்தைகளால்-மனம்
கல்லான பெண்கள் எத்தனையோ
கல்லறை தேடிய பெண்கள் எத்தனையோ

முகம் தெரிய புது உறவை
மணவாழ்க்கை என தேர்ந்தேடுத்து
சந்தேகம் என்னும் தீயில்
தினமும் தீக்குளித்து
பிறந்த வீட்டுமை பெருமை காக்க
தம் உணர்வுகளை தீயாக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?

இவர்கள் தான் 
பாரதி கண்ட 
புதுமைப் பெண்களா?