Sunday, July 31, 2011

Share

நினைவலைகள்...அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும் 
மாலைப்பொழுதில்
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!

Tuesday, July 26, 2011

Share

துரோகியாய்.....


அன்பே!!
இனிமையான உணர்வுகளினால்
பின்ணி பிணைந்த நம் உறவு
இன்று சுருதி இழந்து
முட்களால் நிறைந்த
ரோஐாவனமாய் போனதடி
நம் காதல்.

நீ 
இன்று மெளனத்தினால்
காதல் மொழி பேசுகையில்
சோர்வடைந்து போகுதடி 
என் இதயம்...

நிமிடங்கள் 
மணித்தியாலங்களாக மாற
அளவின்றி காலங்களும் கரைய
பேசிப் பேசியே - நாம்
வளர்த்த காதல் செடி இன்று
முகாரி ராகம பாடும்
முறையில் தான்
நியாயம்முண்டோ?

உன் 
கண்கள் சிந்தும்
ஒரு துளி நீர் கண்டு
என் இதயம்
உதிரம் வடிக்கும்
உண்மை நிலை - 
அறியாயோ?

வானுக்கு ஒர் நிலா போல்
என் வாழ்வில்
வசந்தங்கள் வீசும்
பெளர்ணமி நிலா நீயடி
நிலாவான நீ எனக்கு
நிலை குலைந்து போகையில்
நிம்மதி இழக்கின்றேன்
அத் தருணத்திலே....

என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று 
துரோகியாய்.....

Thursday, July 21, 2011

Share

ஒற்றைவழி பாதை தேடி....

 காதல் செய்த மாயத்தினால்
கன்னியிவள் விட்ட பிழையிது
பெற்றவர்கள் கண்கலங்க
பெரியவர்கள் ஆசியின்றி
உற்றவனை கைபிடித்து
இல்லறத்துள் கால் பதித்தாள்

உறவுகள் தேவையில்லை
உடையவன் போதுமென
உதறிவிட்டாள் உறவுகளை
தனிமையிலே ஒரு ஜோடி
ஒற்றைவழி பாதை தேடி
ஒற்றுமையை தொலைத்தனரிங்கு..

தனிமைபட்ட வாழ்க்கையில்
தம்பிழையுணர்ந்திங்கு
தனித்தனியே புலம்பியென்ன பயன்
பிழைசெய்ய தூண்டுவது காதலா?
இல்லை அவர் அவர் மனமா?
இல்லையேல் பருவமறியா காதலா?
ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்தும்
ஆறுதலின்றி அலையிதிங்கே இரு ஜீவன்.!

காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந்திடலாம்
நடைமுறையில் சாத்தியமா?
இவ்விருவுள்ளம் புரியவில்லை
நடைமுறை வாழ்க்கையினை...!

வாழ எண்ணி வாசல் 
தாண்டி வந்தவர்கள்-இன்று
வாழ்வை எண்ணி 
கலங்குகின்றார்களே...
வாழ வழிகாட்ட யாருமின்றி
வாடி போன மனமுடனே
கதிகலங்கி நிற்கும் 
இவ் இரு உள்ளங்களை 
சாதியினை காரணம்  சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத்து
தள்ளியே வைத்தனர் உறவுகள்...!

பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!

Tuesday, July 19, 2011

Share

புரிதலின்றி...

 மனம் சோரும் மறு நொடியே
என் மனதறிந்து நடந்திட 

வேண்டுமடா நீ-என
கூறிட வேண்டி மனம் 

கற்பனை வளர்த்திடும்
மறுநொடி தடுத்திடும் அதே மனம்
பாசத்தை அளந்திடு
புரிதல் எனும் கருவி கொண்டு...!

மன்றியிடும் என் கண்கள்
உன் கண்களுக்கு தெரியலயா?
மரணத்தை தேடும் என் மனதை
உன் மனதால்  புரிந்திடத்தான் முடியலையா?
உனக்கு புரிதல் தான் இல்லையா?

காதலுக்கு தேவை புரிதலென்றாய் அன்று
ஆனால்...
காதலே புரிதலின்றி போனது இன்று..
!

Friday, July 15, 2011

Share

நான் யார் உனக்கு?


உன்னுடன் பழகியது குற்றமா
உன்னில் காதல் கொண்டது குற்றமா
உரைத்திடு  உண்மையை 
உன்னை  விட்டு செல்லுகின்றேன்...


உறவுகளை வெறுத்தேன் 
உன்னத நட்புக்களை இழந்தேன் 
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....


என்நிலை தெரிந்தும் 
என்னை வார்த்தையாலே 
எள்ளி நகையாடுகின்றாய் 
வலிக்க வலிக்க...!
எட்டாப்பழம் புளிக்குமென்று தெரிந்தும்
என்னை ஏன் காதலித்தாய்?


எதுவரினும் எதிர்த்திடுவேன் 
என்றும் உன்னை நான் மறவேன்
என்றென்றும் நீ வேண்டுமென்றாய்
என் உயிரே நீ என்றாய்
எல்லாமே வார்த்தைஜாலமா?


நான் உனக்காக எதையிழக்க 
உனையிழக்க நான் தயாரில்லை 
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட 
நான் யார் உனக்கு?...

Monday, July 11, 2011

Share

உன்னத உறவு....

தனிமையில் பிடியில்
இனிமைகள் தொலைந்து
பாலைவனமான வாழ்கையில்
பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது

சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.

அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..

காலங்களும் இனிமையாய் கழிய
காதலும் நம்முள் தோன்ற
பாலைவன வாழ்கை
சோலைவனங்களாக மாற
பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.

காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ
பருவங்களில் மாற்றம் வைத்த - கடவுள்
காதலிலும் புரட்சி செய்தாரோ?
இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..

இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான 
உன்னத உறவின் வரவுக்காய்.....

Thursday, July 7, 2011

Share

மாற்றம்...பரந்து பட்ட உலகில்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப
மாற்றம்மின்றி சிக்கி தவிக்கிறது மாற்றம்.

பத்து மாதம் சுமத்து
பாசத்துடன் பாலூட்டி
பாசம் காட்டும்
அன்னைக்கும் சேய்கும்
இடையில் ஏற்படும்
வயதில் மாற்றம்...

சுமையை இனிமையாய் சுமத்து
குடும்பம் தழைத்திட
அல்லும் பகலும் உழைத்து
சேய் வாழ தான் சிரிக்கும்
தந்தைக்கும் பிள்ளைக்கும்
இடையில் ஏற்படும்
தனிமையில் மாற்றம்...

ஓர் கொடியில் பூத்து
பாச மலர்களாக
ஓர் தட்டில் உணவருத்தி
ஓர் கூட்டில் வாழும்
சகோதரங்களுக்கு
இடையில் ஏற்படும்
பிரிவில் மாற்றம்....

ஓடியாடி விளையாடி
அறிவு என்னும்
சுவையை பகிர்ந்து
வாழ்வின் சிகரத்தை அடைய
பாடசாலை தரும்
கல்வியில் மாற்றம்....

வாழ்க்கை என்னும் கடலில்
நீச்சல் எனும் ஊடலில் இணைய
கணவன் எனும் துடுப்பை
கை பிடிக்கும் தருணத்தில்
பெண்ணின் பிறப்பில் மாற்றம்..

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...