Saturday, December 31, 2011

Share

புதிய ஆண்டில்....சோதனை பல சபித்து - அதில்
மனிதனை வேதனையில்
விழ வைத்து
வெற்றி பயணத்தினை முடிந்து
விடைபெற தயாராகி விட்டது
2011.....

ஓராயிராம் ஆசைகளும் ஏக்கங்களும்
நம்முள்ள....

யுத்தம் என்னும் 
வேள்விக்குள் தீக் குளித்து
கேள்விக் குறியோடு
அலைந்து திரியும்
எம் தேசத்து உறவுகளுக்கு
விடை கிடைத்திட...

இயற்கையின் சீற்றதில்
சின்னாபின்னமாகி போன
பல ஆயிரம் உயிர்களை
எனியும் இழக்காமல் இருக்க
இயற்கையின் சமநிலையை காத்திட...

தோல்வியே வாழ்வாக
துவண்டு போன உள்ளங்களுக்கு
சூரிய உதயமாய்
வெற்றிகள் மட்டும் கிடைத்திட....

கண்ணீரில் கரைந்து
பாசைகளை மெளனமாக்கி
சோர்ந்து போனவர்களின் உள்ளங்களுக்கு
புன்னகை மட்டும் வரமாய் கிடைத்திட...

லட்சியம் ஏதுமின்றி
கட்டாகலி மாடுகளாய்
அலைந்து திரியும் 
இளைஞர் கூட்டத்தில் 
தன்னப்பிக்கை என்னும்
அட்சயபாத்திரம் ஊற்றெடுத்திட...

எண்ணற்ற கற்பனையில்
ஏங்கி அலையும் 
மனித மனங்களின்
ஆசைகளை பூர்த்தி செய்திட...

பிறக்க போகும் 2012
வரமாய் அமைய
வாழ்த்துகின்றேன்....

Tuesday, December 27, 2011

Share

மரணத்தின் பின்னால்...மனித சிந்தனைக்கு
அப்பாலும் சில
புதிய தேடல்கள்
விரிந்தே கிடக்கின்றது

சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்.

வாழும் போது தெரியாத
வாழ்வின் தத்துவம்
இறுதி மூச்சில்
மரணம் எனும்
வேள்வியில் உணர்கிறான்
மனிதன்!

மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்றனர்.

மாலையில் மரணிப்போம்
என அறிந்துதான்
மலர்கள் மகிழ்சியாய்
இதழ் விரிக்கின்றன..

கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய் 
கடலினை முத்தமிடுகின்றன..

இறப்பை உணர்ந்து
இருக்கின்ற காலத்தை
இன்பமாய் கழிக்கும்
இயற்கையின் லாபவம்
மனிதனுக்கு
பிடிபடுவதே இல்லை என்பதே
துரதிஷ்டம்...

Thursday, December 15, 2011

Share

பூக்களின் சொந்தக்காரியே!


தோழியே!!
மறைந்தாயோ என்னை? - இல்லை
மறக்கடிக்கபட்டாயோ?

என் கவலைகள் மறந்து
மனம் விட்டு பேச
மணிக் கணக்கில் 
அரட்டை என்னும் பெயரில்
ஆயிரம் கதை சொல்லி
குதுகலித்திடும் அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,

தொலைவாகி போனதால்
தொலைந்து போனதா 
உன் இதயம்...?
நெருங்கிட நினைத்தாலும்
வார்த்தையால் வெடிக்கிறாய்
உதிர்ந்திடும் நிமிடங்களில்
சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.

அறியாமையில் நீயூம்
ஆணவத்தில் நான் மட்டுமோ?
பூக்களுக்கு சொந்தகாரியே!
மென்மையான உன் இதயம்
அணுகுண்டாய் மாறும்
அபாயநிலை அறியாயோ?

மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்.
சோகங்களை மட்டும் - எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து,
உடல் சோர்த்து
உயிர் போகும் வரை
ஓயப்போவதில்லை
என் புலம்பலும்.....

Sunday, December 11, 2011

Share

மனசு....திசைகள் இன்றி
திண்டாடிய மனம் ஒன்று
பாவை அவள்
பார்வை தீண்டலினால் 
பக்குவமானது அன்று...

இதய கூட்டினை உடைத்து - அதில்
அவளை தான் இருத்தி
நேசிக்கத் தொடங்கியது அன்று..
படிப் படிப்யாக - அது
இமயமாக வளர்த்து
காதல் என்னும் போர்வையில்
ஆட்சி செய்கின்றது இன்று...

உதிரத்தில் கலந்திட்ட அவள்
உயிருள்ள வரை
உயிர்நாடியாய் தன்னுள்
என்றும் இருப்பாள் என்னும் 
நம்பிக்கையில் காலம் நீள்கிறது.

நினைவெல்லாம அவளானதால்
நிம்மதியின்றி தவிக்கின்றது தினமும்
யாரும் அறியாமல் தன்னுள்
புகுந்து அவள் புரியும்
சிந்து விளையாட்டக்களால்
சித்தம் கலக்கி நிற்கின்றது மனசு...

இருளின் கருமையில்
இமைகளின் ஓரம்
துளிரும் கண்ணீர் துளியில்
சுகமான அவள் நினைவுகள்
ஆறுதல்படுத்துகின்றது
மூன்றாவது கையாய்.....

பெண்ணே!
உயிர் தொலைந்தது உன்னிடத்தில்
இருந்தும்..
இதயத்தில் உருவாக காதலை
உனக்காக கவிதையாய்
எனக்குள் மெளனமாக்கிறேன்...