Saturday, October 30, 2010

Share

எல்லாம் நீயாய்!

 மறந்துவிட நினைக்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாய்..
வெறுத்துவிட நினைக்கிறேன்
என் விருப்பமெல்லாம் நீயாய்...
விலகிவிட நினைக்கிறேன்
என் நிழலெல்லாம் நீயாய்!
ஆனால்
முடியவில்லை என்னால்.


Thursday, October 28, 2010

Share

பிரிவின் தருணம்.....

 காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

காய்ந்த காயப்பட்ட
என் இதயத்தை விட்டு
பறந்து செல்ல
நினைத்து விட்டாய் நீ
பரவாயில்லை
பறந்து செல் கிளியே...

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் நதிகளின்
அருகில்,
பூக்களால் நிறைந்த வழியும்
நந்தவன சோலையில்,
பசுமையான இதயத்தில்
நிரந்தரமாக அமர்ந்து கொள்
உன் இனிமையான வாழ்வுக்காக.....

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

காயப்பட்ட என் இதயத்தில்
காதல் என்னும் போர்வையில்
ஓய்வு கொண்ட பட்சியே,
புது புது அர்த்தங்களை
என்னில் உணர வைத்த
உன் உறவினை,
உயிர் மூச்சு உள்ளவரை
மறக்க மாட்டேன்...

Monday, October 25, 2010

Share

தூக்கமின்றி தவிக்கிறாள்....

உன் நினைவுகளால் 
பிணையப்பட்டு 
இவள் இன்று
தூக்கமின்றி தவிக்கிறாள்.

தூக்கமின்றி தவிக்கும்-உன்
தூயவளுக்கு உன் பதில்
தூது அனுப்பிடு கனவிலாவது....

 உன் நினைவு மெத்தையில்
உல்லாசமாய் தூங்கட்டும் 

Sunday, October 24, 2010

Share

தூதாக கவிதைகள்

கவிதைகள் வாடுகின்றன
உன்னை காண ஏங்குகின்றன.
பல கவிதைகள் எழுதுகின்றன
பயந்தால் மடிகின்றன.
தொலைத்து விடாதே
எனது கவிதைகளை
தொலைந்தால் தொலைப்பது
கவிதையல்ல...
என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்.

Saturday, October 23, 2010

Share

உன் பிரிவால்..

 என் நெஞ்சே நீ எங்கே
உன்னைக் காணாமல்
என் இதயம் அழுகிறது.
கண்கள் கண்ணீரை தினம்
இங்கு வடிக்கிறது.
வீசி வரும் காற்றை பிடித்து - உன்
முகவரி கேட்டேன் கிடைக்வில்லை
வெண்ணிலவை அருகில் அழைத்து
உன் முகம் தேடினேன் தெரியவில்லை
உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்
அன்பே என் அமுதே நீ எங்கே
கண்னே என் நெஞ்சே நான் இங்கே
நிஐம் உன் நினைவால் நிழலாகின்றது
நிழல் உன் நினைவால் நிஐமாகிறது
பாவையே என் போதையே
ஏன் நீ என்னை விட்டுப் பிரிந்தாய்
அதனால் நான் இன்று கல்லறையில்....

Thursday, October 21, 2010

Share

சாபம் பெற்ற மங்கை

இனிய நம் காதல் நினைவுகளை
இசையாக மீட்டுகின்றேன்
இனியவன் செவிகளுக்கு
இனியவளின் தூதாக....

 தண்ணீரில் மீனைப்போல் நானிங்கே
கண்ணீரில் நீந்திடும் பெண்ணானேன்..
கண்ணாளன் நீயின்றி நானிங்கே
முள்ளில்பட்ட சேலையானேன்.

வலிகளுடன் வாழ்ந்திடும்  
வரம்  வேண்டி வந்தேனோ???
வஞ்சி என் வாழ்வின்று 
வஞ்சகர் கையினிலே
வந்து என்னை மீட்டு செல்
வலிகள் நிறைந்த கனவுகளுடன்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

Tuesday, October 19, 2010

Share

ஆழமான நட்பு ....

 பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 
கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

Sunday, October 17, 2010

Share

வசியகாரா....

 ஏன் என் கண்னில் பட்டாய்..
ஏன் நெஞ்சில் புகுந்தாய்...
ஏன் காதல் மொழி பேசினாய்....
கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
முடியவில்லை மீள..

வந்துவிடு வந்துவிடு
வசந்தங்களாகட்டும்
என் வாழ்வு
உன் வருகையினால்.....

Saturday, October 16, 2010

Share

போர்க்களமாய் என் வாழ்வு........

 எண்ணிட முடியா  சோதனைகள்
ஏக்கம் நிறைந்த  வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன்  இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...

பட்டினியால் பல காலம்-மரத்தடியில்
படுத்துறக்கம் சில காலம்..
பயமே வாழ்வாக 
பார்த்திருந்தேன் வானமதை...

 போர்க்களமாய்  என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி  போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....

Friday, October 15, 2010

Share

இன்று

உயிரே நீ என்றாள்
உண்மையா என கேட்க
நீ இன்றி நான் இல்லை
யார் என்னை தடுத்தாலும்
என் இதயம் நீயே என்றாள்
ஆனால் இன்று
அவளோ மணவறையில்
நானோ கல்லறையில்......
Share

கனவுகள்

"உன்னோடு ...
வாழ வேண்டும் என்ற
எண்ணத்தில் ..
நான் உனக்காக
கட்டிய கனவுகள் பல
இன்று அவை
மண்ணோடு மண்ணாக ...
எனை பார்த்து சிரிக்கின்றன..
சிரிப்பது
என் கனவுகள் மட்டுமல்ல
சில உறவுகளும் தான்.."Thursday, October 14, 2010

Share

மானுடா!

 வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...

இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....

நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்...

Wednesday, October 13, 2010

Share

முதல் பார்வை

முதல் தரிசனத்திலே
என் விழிகளுக்குள்
புகுந்து கொண்டவள் நீ..
உன் கண்களின்
ஏக்கப் பார்வையும்,
மெல்லிய புன்னகையும்
எனக்கு மட்டும்....
என் மனதில் பதிந்த
உன் நினைவுகள்
மறையாது என்றென்றும்!
Share

உனக்காக....

நான் சாக நினைத்தது
எனக்காக...
அதை மறந்து வாழ்வது
உனக்காக....
தாங்க முடியாத துன்பம்
எனக்கு....
அதையும் தாங்கி வாழ்கிறேன்
உனக்காக....
சிரிக்க முடியாத வேதனை
எனக்கு...
அதையும் தாங்கி
சிரிக்க கற்றுக் கொள்வது
உனக்காக...

Tuesday, October 12, 2010

Share

உயிரெழுத்தாய் நீ...!

 அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

எழுதியவர் அருந்தா.

Monday, October 11, 2010

Share

முதல் காதல்.

 ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

Sunday, October 10, 2010

Share

என்னை ஈன்றவளே.....

 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......

Saturday, October 9, 2010

Share

நினைவு.....

 நினைவுகளின் உருவமே...
கால்கள் நனைத்துச் செல்லும்
கடல் அலைகள் போல்...
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் உன் நினைவுகள்...
கண்களை நனைத்துச்
கண்ணீரை வரவழத்து
செல்கின்றது என்னில்..

Friday, October 8, 2010

Share

கோபம்...........

 அன்றைய அவள்
முகத்தில் ஒரு ஆனந்தம்
சூரியன் கூட தன்
இதழ் சுருகி சாந்தம் கொண்டது
அவள் புன்னகையில்

ஆனால் இன்று
நிலவு கூட
அனலை கக்கின்றது
அவளின் கொடிய பார்வையில்

ஏன் இந்த மாற்றம்
அவள் பார்வையில்?
Share

உன் நினைவுகளுடன்...

 மழையில் நனையும்
பட்டாம்பூச்சியாய்...
கண்ணீரில் நனைகிறேன்
உன் நினைவுகளால்..

இறந்திட எண்ணும்
என் இதயம்
உன் நினைவுகளுடன் 
வாழ்ந்திடவும் சொல்லுதடா..

Thursday, October 7, 2010

Share

ஏக்கத்தோடு......

நீ
பேசுவதெல்லாம்
நிஐயம் என்று
நினைக்கும்
என்னிடத்திலா
நிஐமாகவே
நீ பேசாமல்
இருக்கிறாரய்!

உன் மெளனம்
அழகானதுதானது
ரசித்திருக்கிறேன்
உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...

இருந்தும்
புரியவில்லை - உன்
மெளனத்தின் அர்த்தம்
எனக்கு இன்று

உன் இதழ்
சொரியும் ஓர்
வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு......

Wednesday, October 6, 2010

Share

என் காதல்.......

 எப்போதும் மெளனத்தை
அலங்கரிக்கும்
உன் வார்த்தைகள்
ஓர் நாள்
காதலின்
பின் கதவை
திறந்து வைக்கக்கூடும்
அதுவரை
உன்கான காத்திருப்பில்
நீ வரும் பாதையில்...

பூங்கொத்தாய்
சிதறிக்கிடக்கும்
என் காதல்.......

Tuesday, October 5, 2010

Share

கண்ணீர்........

சோதனைகளையும்
வேதனைகளையும்
தாங்க முடியாத
என் இதயம்
விழி வழியே
நீரை சிந்தகின்றது.

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....

Monday, October 4, 2010

Share

மெளனம்

 வார்த்தை
இல்லாததால்
மெளனிக்கின்றேன்
அதனால்
தினம் தினம்
நானும்
மரணிக்கின்றேன்
என் காதல் சொல்லாமல்..
Share

பெளர்ணமி நிலா

  இரவு நேர பெளர்ணமி நிலா
வானத்துக்கு பொட்டு வைத்து
அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது.

என் நிலா நீ என்பதால்
ரசிக்கின்றேன் ஆனந்தமாக
இதயத்தை ஆக்கிரமிக்கின்றது
உன் நினைவுகள்
என்றும் இன்ப புதையலாக
உன்நினைவுகள் என்னில்....

Sunday, October 3, 2010

Share

அம்மா

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்
அம்மா

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை வரமாய் கேட்கிறேன்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு.... 

Saturday, October 2, 2010

Share

கசப்பான காதல்

 தனிமையே உலகம்
தனிமையே வாழ்கை
தனிமையே எல்லாம்
என்ற எண்ணத்தை
மாற்ற வைத்தவளே

அன்பென்னும் கோயிலில்
அடைகலம் அடைந்தேன்
உன்னிடத்தில்...

என் சுமைகள் தாங்கும்
சுமைதாங்கியாக
வாழ்கையில் காணத
இன்பத்தின் உருவாமாக நீ அன்று...

வேதனையில் துவண்டு
விழும் போதெல்லாம்
தலை தடவி
ஆறுதல் சொல்லும்
தாயாக நீ அன்று....

வாழ்கையில் தடுமாறும்
தருணங்களில் அறிவுரை கூறும்
நல்ல நட்பாக நீ அன்று....

உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
காதலாக நீ அன்று

என் வாழ்வில்
உயிராக..
உணர்வாக...
எண்ணமாக...
இன்பமாக....
எல்லாமா இருந்த நீ

இன்று
நீ வேறு நான் வேறு
என்று வரையறை போடுவது
எந்த வகையில்
ஞாயமடி??

Friday, October 1, 2010

Share

உன் பிரிவில்........

 அழும்போது கூட சிரித்தேன் நீ
என் அருகில் இருக்கும் போது
சிரிப்பதாய் நடிக்கக்கூட
முடியவில்லை உன் பிரிவில்.

உன் நினைவுகள் சுமக்கும்
என் இதயகூடு
சல்லரித்து சாவின்
விளிம்பில் இன்று....

உன்னை மறக்க நினைத்து
விழி மூடும்போதுகூட
உன் விம்பமே காட்சிகளாக
மறக்கவும் முடியவில்லை
நினைக்கவும் உரிமையில்லை.
நரக வேதனையில் நான்...

உன்னோடு கழித்த நாட்கள்
பல ஜென்மங்கள் வாழ்ந்த
இன்பத்தை தந்தாலும்
நீ என்னை பிரியும்
ஒவ்வொரு வினாடியும்
அடுத்த பிறப்பையும்
கொல்லுவதாய் கசக்குதடா