Tuesday, July 10, 2012

Share

நிலவு!



என் ஓட்டை வீட்டு
கூரையின் நடுவில்
எட்டி எட்டிப் பார்த்தது
வெள்ளை நிலவு!

விசயம் என்னவென்று
வினா எழுப்ப,
ஓவென்று அழுதது
கண்ணீர் பெருக
நிலவு.

வலி தாங்கும்
சூட்சுமத்தை
கற்றறிந்த மனிதனே!
தனக்கும் கற்றுத் தர
கோரிக்கை விடுத்தது
நிலவு.

விரிந்து கிடக்கும்
பிரபஞ்சத்தில்
முடிவில்லா பதையில்
தொடரும் நினைவுச்
சங்கிலியில்
சிக்குண்டு தவிக்கும்
தனிமையின் கொடுமையில்
நிலவின் கண்ணீர்..

பாவம் நிலவு!
உறவுகளால்
வஞ்சிக்கபட்டிருக்குமோ?
காதல் எனும்
விஷயத்தை ருசித்திருக்குமோ? 
பிரியத்தின் மெளனத்தினால்
தண்டிக்கப்பட்டிருக்குமோ?
எதிர்பார்ப்புகளில் சிக்கி
ஏமாந்திருக்குமோ?
அதுதான் என்னமோ
தொட முடியா தூரத்தில்
துறவரம் பூண்டுள்ளது
நிலவு.

அப்பழுக்கில்லா
வெள்ளை நிலவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நானும் அப்படி தான் என்று.....

6 comments:

செய்தாலி said...

கவிதையில்
இன்னும் தணியாமல்
சோகம்

Unknown said...

//அப்பழுக்கில்லா
வெள்ளை நிலவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நானும் அப்படி தான் என்று.....//

நிறைய பேர்கள் அப்படித்தான் மேடம்

Unknown said...

நல்லாருக்கு! ஆனா ஏன் இவ்ளோ சோகம்?

ஆத்மா said...

நல்லதொரு கவிதை...அழகான சிந்தனையோட்டம்...

ம.தி.சுதா said...

நிலவின் மாற்றம் போல் தானே வாழ்க்கையும் அக்கா...

சிவரதி said...

ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...

வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகாலம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....

இன்பமும் துன்பமும் இருப்பது எம்கையில்
இருட்டில் மலரும் நிலவிலல்லா....