Friday, March 4, 2011

Share

யார் தருவார்?

பெற்றவள் இங்கு
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!

உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..

என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?

பணம் பொருள் பார்த்தாச்சு
சொத்து சுகம் சேர்ந்தாச்சு
இத்தனையும் இருந்தென்ன
உற்றதுணை தானிருந்து-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?
...............................................................................................................................

..............................................................................................................................

30 comments:

தமிழ் உதயம் said...

உண்மை தான் உண்மை அன்பை யார் தருவார்

ரேவா said...

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...! என் நிலையும் இதுவே தோழி.... கண்ணீரோடு முடிக்கின்றேன் கவிதை அருமை.... வாழ்த்துக்கள்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அம்மாவின் பிரிவு எல்லோருக்குமே பெரும் துயர்தான்! அதை அருமையாக கவிதையில் கொண்டு வந்துள்ளீர்கள்! அருமை!!

Kousalya Raj said...

ஆழமான உணர்வுகளுடன் அருமையாக ஒரு கவிதை...ரொம்ப பிடிச்சிருக்கு பிரஷா

சக்தி கல்வி மையம் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு..

செய்தாலி said...

வரிகளில் மாசற்ற அன்பிற்கான தேடல் அருமை
நம்மை சுற்றிய எல்லா உறவுகளிலும் நானும் இதைதான் தேடுகிறேன்

வசந்தா நடேசன் said...

//உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்.,,,//

சீக்கிரம் ஒன்று அமைய வாழ்த்துக்கள்..

jeminivivek.k said...

எல்லாம் வரிகளும் சூப்பர்
இவன்
அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.கே

logu.. said...

யார் தருவார் உண்மை அன்பை?

சி.பி.செந்தில்குமார் said...

>>>-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?

நண்பர்கள் தருவார்கள்

MANO நாஞ்சில் மனோ said...

//உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..//

பாரமான வேதனை தரும் கவிதை உணர்ந்து எழுதி உள்ளீர்கள் மக்கா....நச்.....

logu.. said...

உண்மை அன்பை யார் தருவார்?

எல்லோரும் ஒருவகையில் இதைதான் தேடுகிறார்கள்.

கவிதை அழகா இருக்கு.

Unknown said...

Nice!

Unknown said...

சூப்பர் மேடம்...

நிரூபன் said...

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...//

உலகில் எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே ஒரு பொருள் உண்மை அன்பு. வெளி வேசங்களினால் மனதில் சந்தோசம் எனப் பலர் நடித்தாலும் உண்மை அன்பு அவர்களிடம் இல்லை என்பதை உங்கள் கவிதை உணர்த்தி நிற்கிறது. உறவுகள் எல்லாம் வேசங்கள் ஆனது,
மனதினுள் நீயோ மரித்துமே இருப்பதால்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதையில் ஏக்கங்கள் இழையோடியிருக்கிறது..
அருமையான கவிதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்..

பத்துக்கு பத்து...
விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

Jana said...

இன்று அன்புக்கும் அரவணைப்பிற்கும் மிகப்பெரும் தேடல் நிலை உள்ளது என்பது மனதை நெருடும் ஒரு பேருண்மை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உண்மை.. உண்மை அன்பை யார் தருவார்.. சரியா தான் கேட்டு இருக்கீங்க.. விடை தெரியாத விடயம்..

உணர்வின் வெளிப்பாடு வரிகளில்.. நல்லா இருக்குங்க.

Lingeswaran said...

A Good Emotional Kavithai !

கவிதை பூக்கள் பாலா said...

வார்த்தை கோர்வை அருமை வலிகொண்ட பாச கவிதை தோழியே

Asiya Omar said...

அருமை.வாழ்த்துக்கள்.தேடலுக்கான விடை விரைவில் கிடைக்கும்..

சிவரதி said...

உள்ளம் ஓன்றை தேர்ந்தெடுத்து
உண்மை அன்பை நீ கொடுத்தால்
உறவாகி என்னாலும் உயிர் தந்தே
உறவாடும் உன்னோடு...

பாரி தாண்டவமூர்த்தி said...

அம்மாவின் பிரிவிற்கும் பாசத்திற்கும் மாற்று ஏது?? அருமையான கவிதை....

Unknown said...

அருமையான அன்புத்தேடல் கவிதை.

சிந்தையின் சிதறல்கள் said...

உண்மை அருமை வாழ்த்துகள்

ஆயிஷா said...

அருமை வாழ்த்துகள்

கலையன்பன் said...

பாசத்தின் தேடலை கவிதையாய்

தந்தீர்கள், அழகாய் !
-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)

ஆனந்தி.. said...

தங்கச்சி...நல்லா இருந்தது டா இந்த கவிதை...அந்த ஆதங்கம் என்னாலே உணர முடிஞ்சது...

ம.தி.சுதா said...

உண்மை அன்பு எங்கே இருக்கிறது என பலருக்கு புரிவதில்லை அக்கா...