Wednesday, March 2, 2011

Share

நங்கை உன் கையிலே..!

 பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ

தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே

கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு

முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்

புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்

மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்

நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே

34 comments:

தமிழ்தோட்டம் said...

//நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே//

அனைத்து வரிகளுமே அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

வேடந்தாங்கல் - கருன் said...

பெண்மையின் பெருமைகளை போற்றும் கவிதை...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

♔ம.தி.சுதா♔ said...

////முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு////

நல்ல உவமை மிக அருமையாக இருக்கிறது...

எஸ்.கே said...

//நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே//

ரசிக்கும்படியான கவிதை!

தோழி பிரஷா said...

@தமிழ்தோட்டம் நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@வேடந்தாங்கல் - கருன் நன்றி

தோழி பிரஷா said...

@♔ம.தி.சுதா♔ மிக்க நன்றி சுதா

தோழி பிரஷா said...

@எஸ்.கே மிக்க நன்றி சகோதரா

சேட்டைக்காரன் said...

எளிமையான கவிதை! எனக்கே புரிகிறது. :-))
நன்று..!

சங்கவி said...

//கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு//

Super....

MANO நாஞ்சில் மனோ said...

பெண்மையை போற்றும் கவிதை அருமையா இருக்கு....

சி.பி.செந்தில்குமார் said...

>>>மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்

ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா உங்க கவிதைல அழகியல் இருக்கும். இது ஒரே அட்வைஸ் மழையா இருக்கே பிரஷா...

ஓட்ட வட நாராயணன் said...

NICE POEM..... WELL SELECTED WORDS......

இரவு வானம் said...

அருமைங்க, எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...

நேசமுடன் ஹாசிம் said...

பெண்ணை வர்ணிக்கும் பெண்ணழகு அருமை...

Lakshmi said...

பெண்மையின் சிறப்பினைக்கூறும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

shanmugavel said...

நல்ல கவிதை

அரசன் said...

சிறப்பான கவிதை தோழி ...

தோழி பிரஷா said...

@சங்கவி மிக்க நன்றி சங்கவி

தோழி பிரஷா said...

@MANO நாஞ்சில் மனோ மிக்க நன்றி

தம்பி கூர்மதியன் said...

சூப்பர் ப்ரஷா.!!

Chitra said...

good one.. :-)

வசந்தா நடேசன் said...

யாரை சொல்ரீங்க,, ஜெயலலிதா பற்றியா?? அம்மா வாழ்க.. அம்மா வாழுக.. சாரிங்க, எலக்ஷன் நேரத்துல கடுப்பை கௌப்புனது மாதி ஒரு பீலிங்கு..

asiya omar said...

நல்ல கவிதை.

ஹேமா said...

என்ன பிரஷா...பாட்டி காலத்து அறிவுரைகள் எல்லாம் சொல்றீங்க.எடுபடுமா !

# கவிதை வீதி # சௌந்தர் said...

அழகிய கவிதை வரிகள்
வாழ்த்துக்கள்..

Anonymous said...

வரிக்கு வரி... வரிக்குதிரையாய் கவிதை அருமை.

பாரத்... பாரதி... said...

புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே... தங்கச்சி கண்ணே..

மண்ணின் மகிமையை போற்றும் வகையில் , பெண்ணின் பெருமையை காப்பாற்றும் வகையில், பிரஷாவின் வார்த்தைகளை பின்பற்ற வேணும்..

பாரத்... பாரதி... said...

நல்ல கவிதை, நயமான வார்த்தைகள்..

Jana said...

மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்


இது நிய அழகு.

Ramani said...

உங்கள் படைப்பில் சொற்கள் எல்லாம்
தானாகவே விரும்பி வந்து சேர்ந்தவைகளைப் போல
மிக அழகாக அணிவகுத்து நிற்பது
உண்மையில் ஆச்சரியமளிக்கிறது
கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

தேங்க்ஸ் தங்கச்சி...என்னை புகழ்ந்து ரொம்பவே நல்லா கவிதை எழுதிருக்கே....:))

VELU.G said...

இல்லறத்தை நல்லறமாக்கும் சிறப்பான கவிதை