Tuesday, September 18, 2012

Share

வாழ்க்கைச் சக்கரத்தில்


மனிதனே!
வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்து போகும்
வரைமுறைகள் பலவிதம்


வாழும்வரை 
விரோதங்களை ஒதுக்கிவிடு-வீண்
விவாதங்களை தவிர்த்திடு...
வேற்றுமைகளை விலக்கிடு-பல
வேஷங்களை களைந்திடு...
பலருக்கு உதவிடு-உன்
பாவங்களை கழிவிடு..

வஞ்சத்தை மறந்திடு-சூழ்ந்த
வஞ்சகர்களை களைந்திடு...
சுயநலத்தை தவிர்த்திடு-உன்
சுற்றத்தை மதித்திடு...
நம்பிக்கையை வளர்த்திடு-உண்மை
நட்புக்களை மதித்திடு...
துரோகத்தை மறந்திடு - உன் 
துரோகிகளை மன்னித்திடு...

தவறுகளை உணர்ந்திடு
தனிமையை தவிர்திடு
பிழைகளை உணர்ந்திடு -பிறர் 
பிழைகளை மன்னித்திடு...
பெருமையை துரத்திடு-பிறர்
பெருமைகொள்ளும்படி வாழ்ந்திடு...
தலைக்கணத்தை தவிர்திடு-பிறருடன்
தன்மையாய் நடந்திடு..

அன்னையை மதித்திடு-அன்பால்
அனைத்தையும் வென்றிடு..
உறவுகளை மதித்திடு-உன்
உரிமைகளை பெற்றிடு...
இன்றிருப்போர் நாளையில்லை
வந்த வழி எப்போ செல்வோம்
யாருக்கும் தெரியாது..
ஒற்றுமையை வளர்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@திண்டுக்கல் தனபாலன்@நண்டு @நொரண்டு -ஈரோடு தொடர்ந்து எனது கவிதைகளை வாசித்து கருத்துக்களை பகிரும் தங்களுக்கு எனது நன்றிகள்

Murugeswari Rajavel said...

அருமையான கவிதை.ஒற்றுமை குறித்து அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Murugeswari Rajavelமிக்க நன்றி