Saturday, April 30, 2011

Share

உழைப்பாளிக்கு.....


தேவைகளை பூர்த்தி செய்ய
தேடலில் இறங்கியவர்
ஆசைகள் அதிகரிக்க
ஆர்வமும் பெருகியதால்
அவற்றினை நிறைவு செய்ய
வேலைகளை தேர்தெடுத்து
சேவைகளை தாம் பகிர்ந்தனர்

சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினிலே
செல்வ வளம் செழிப்பதற்காய்
சிரமமது பாராது உழைக்கிறார்
உடல், உள உழைப்பதனை
உவர்ந்துநீர் வழங்குவதால்
உற்பத்தி பெருகிடவே
உதயமாகும் பொழுதெல்லாம்
உளமகிழ்ந்து வாழ்ந்தனவே
உயிர்களெல்லாம் இவ்வுலகில்.

உயிர்களெல்லாம் உள மகிழ
உதிரத்தை உரமாக்கி
உழைத்திடும் உழைப்பாளி நெஞ்சங்களை 
உவ மகிழ்ந்து வாழ்த்துவோம்.

14 comments:

Yaathoramani.blogspot.com said...

தொழிலாளர் தினத்திற்க்கென
தாங்கள் படைத்துள்ள கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

அருமையான கவிதை உழைப்பாளி வர்க்கம் என்றும் உயரட்டும் வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினிலே
செல்வ வளம் செழிப்பதற்காய்
சிரமமது பாராது உழைக்கிறா

யதார்த்தமான வரிகள்

Jana said...

Need and Research!! இல் கவிதை தொடங்கி அருமையாக உள்ளது.
தங்களுக்கும் உழைப்போர் தின வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு வழக்கம் போல் சூப்பர்.....

Unknown said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

உழைப்பாளிகளின் பெருமைகளை அழகாச் சொல்லி வாழ்த்தி நிற்கிறது உங்களின் இந்த வாழ்த்துக் கவிதை.

சி.பி.செந்தில்குமார் said...

மே தினக்கவிதைக்கு வாழ்த்துக்கள்

சுஜா கவிதைகள் said...

உழைப்பபாளர்களுக்கு ஒரு மரியாதை ......நன்று

சிசு said...

உழைப்பவர்களை நினைவு கூறும் அருமையான வரிகள். பாராட்டுகள்.

தொழிலாளர்களைப் போற்றுவோம்....
(எங்க மொதலாளிக்கு இந்த லிங்க் அனுப்பனும்ப்பா...)

Harini Resh said...

யதார்த்தமான வரிகள்
வாழ்த்துக்கள்.

sakthi said...

மே தின வாழ்த்துக்கள்

sakthi said...

கவிதையில் மெருகு கூடி வருகின்றது வாழ்த்துக்கள் தோழி பிரஷா

SURYAJEEVA said...

மே மாதம்

நாற்பது கிலோ உடல்
சுமக்க திணறும்
தொழிலாளியின் உயிர்...


அவன் நிலை கண்டு
ஏளன சிரிப்பில்
காலிப்பானைகள்...


இறுதி ஊர்வலத்திற்கு
சங்கூதும்
அல்சர் விருது
பெற்ற வயிறு...


வெளியே மழை
விளைவு
பிரிவை எண்ணி
அழ ஆரம்பிக்கும்
வீட்டு கூரை..