Monday, April 11, 2011

Share

அவளுக்காய்...

 விதியேன எண்ணியே
விலகிட்ட போதிலும்
வழியதில் வந்தும்
நிழல் போல் வலியது
தொடருதே என்னை

உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..

வஞ்சம்மில்லாத அவள்
நெஞ்சமதில் - நான்
நேசிக்கப்பட்டதினால்
வஞ்சியவள் வாழ்வில்
வளம் மிகுந்து ஒளிர்வதற்காய்
அன்பு எனும் அணையாய்
அகல்விளக்குக்கு ஒப்பாய்
மாய விம்பத்தினால்
திரியும்மிட்டு அதில்
யாரும் அறியாமலே
அகம் வடிக்கும்
கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்

33 comments:

Chitra said...

உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..

......Simply Superb! ரொம்ப அருமையாக கவிதைகள் எழுதுறீங்க... பாராட்டுக்கள்!!!

சி.பி.செந்தில்குமார் said...

mudhal முதல் மழை..?

சி.பி.செந்தில்குமார் said...

>> விதியேன எண்ணியே

விதியே என எண்ணியே அல்லது

விதி என எண்ணியே

Praveenkumar said...

வாவ்......!!! சூப்பருங்க... கவிதை அருமையா இருக்கு....

சி.பி.செந்தில்குமார் said...

>>கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்

மனதைக்கவர்ந்த வரிகள்

Praveenkumar said...

//கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்//

கவிதையை முடித்த விதம் மிக அருமை..!! வாழ்த்துகள்.

சக்தி கல்வி மையம் said...

அசத்தல்..

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் அருமை அருமை.....

jeminivivek.k said...

மிக அருமையான வரிகள்
எ(ன்)னைத் தவிர யார் அறிவர்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//விதியேன எண்ணியே
விலகிட்ட போதிலும்
வழியதில் வந்தும்
நிழல் போல் வலியது
தொடருதே என்னை//

...என் மனதைத் தொட்ட வரிகள் இவை. ரொம்ப ரொம்ப நன்றி :)

Harini Resh said...

//அகல்விளக்குக்கு ஒப்பாய்
மாய விம்பத்தினால்
திரியும்மிட்டு அதில்
யாரும் அறியாமலே
அகம் வடிக்கும்
கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்//
Supper Prasha :)

ஹேமா said...

வரிக்கு வரி உணர்வோடு போராட்டம்.அருமையான கவிதை எப்பவும்போல !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நெகிழ வைத்த வரிகள்...கிரேட்

Learn said...

//உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..//

அருமையான வரிகள் தோழி பிரஷா

தமிழ்த்தோட்டம்

VELU.G said...

வலி உணர்த்தும் வரிகள்

அருமை

all info said...

very super also this kavithai

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் 2 வது மழை யாரு சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார் நன்றி பிரவீன்.. தொடர்ந்து வருகை தாருங்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி சார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார் வாழ்த்துக்கு நன்றி பிரவீன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@jeminivivek.k நன்றி மனோ சார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி)ரொம்ப ரொம்ப நன்றி ஆனந்தி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா நன்றி ஹேமாக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rathnavel வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அப்பாவி தங்கமணி நன்றி தங்கமணி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் நன்றி யுஜீன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@VELU.G நன்றி வேலு..

சீராளன்.வீ said...

யாரறிவார் இவள் மனதை ....அருமை அருமை