Saturday, April 2, 2011

Share

தோழியே....

எங்கெங்கோ பிறந்து
எல்லையற்று மிதங்கும்
எண்ணங்களை எம் கைக்குள்
அடக்க நினைப்பது 
நிலையா? நியாயமா?

பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்சிக்கின்றோம் தினம் - ஆனாலும்
மூழ்கியே எழுகின்றோம்
விதியெனும் சமூத்திரத்தில்..

விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்

27 comments:

ஜீ... said...

//விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்//
அருமை!

நிரூபன் said...

பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?//

வணக்கம் சகோதரம், வாழ்வின் அர்த்தத்தினை தத்துவத்தோடு கவிதை சொல்கிறது,

நிரூபன் said...

விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கம//

யதார்த்த நடையில் தோழியினூடாக இந்த்ச் சமூகத்தின் மீதுள்ள கவிஞரின் பார்வையினையும் காட்டி நிற்கிறது கவிதை.

Philosophy Prabhakaran said...

இரண்டாவது பத்தியும் நான்காவது பத்தியும் பிரமாதப்படுத்துகிறது...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான வார்த்தை பிரயோகம்...
கவிதை அசத்தல்..

ஜெய்லானி said...

//பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?//

சரியான கேள்வி..!! :-))

கலாநேசன் said...

நல்கவிதை

தம்பி கூர்மதியன் said...

//அடக்க நினைப்பது
நிலையா? நியாயமா?//

நிலைதான்.. நியாயம் தான்..

//ஆனாலும்
மூழ்கியே எழுகின்றோம்
விதியெனும் சமூத்திரத்தில்..//

அட சூப்பருங்க..

//விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.!! தோழியை பற்றி எழுதினாலும் துயரமாக தான் எழுதுவேன் என நீங்கள் சொல்லுவது அருமை.!!!!!

இராஜராஜேஸ்வரி said...

விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்//
Nice..

Murugeswari Rajavel said...

அருமையான கவிதை!

KADAMBAVANA KUYIL said...

மிக மிக அருமையான சோகமான மனதை கனக்கச் செய்யும் வரிகள். very nice

Suthershan said...

//எங்கெங்கோ பிறந்து
எல்லையற்று மிதங்கும்
எண்ணங்களை//

அருமையான கவிதை நடை..

இன்று என் பதிவில் : கனவு வலை..

http://en-nandhini.blogspot.com/2011/04/dream-web.html

சிசு said...

தோழியே - நிதர்சனம்...

G.M Balasubramaniam said...

முதன் முதலாய் உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன். சிலபல பதிவுகளைப் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். எழுத்துக்களில் ஒரு மென்சோகம் இழையோடுகிறது. எல்லாம் கற்பனையாகவே இருக்க வேண்டுகிறேன். வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் நமக்கு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் .

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

//விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்//
கண்ணீரால் கரையலாம் அல்லது இறுகிப் போகலாம்.அதுவும் விதியே. நன்று பிரஷா

Lakshmi said...

கவிதை மிகவும் அருமை.

Jana said...

வாவ்...தோழமைக்கும் உண்டோ அடைக்குத் தாழ்!

Geetha6 said...

அருமை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை//

...ரொம்ப சரிங்க.. ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குதே

//நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?//

...ஹ்ம்ம்.. இது தோழமைக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும்.. ஏதும் மார்க்கம் இருந்தால் நல்லாத் தான் இருக்கும்..!

உங்கள் நட்பிற்கு நன்றி :)

asiya omar said...

மிக நல்ல கவிதை..

சி.பி.செந்தில்குமார் said...

>>விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்

குட் பஞ்ச்

யாதவன் said...

கவிதை அழகு தோழி

ஹேமா said...

எப்பவும்போல பாராட்டுக்கள் தோழி !

ரிஷபன் said...

இன்றுதான் உங்கள் கவிதைப் பக்கம் எனக்கு வெளிச்சமானது..
வார்த்தைகளை வசப்படுத்தி உணர்வின் சமவிகிதக் கலவையில் ரசனையாய் தந்திருக்கிறீர்கள்..
வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

இறுதி வரிகள் அருமை

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

எனது தளம் வருகை தந்து கருத்துக்களை கூறிச்சென்ற ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி...

தனித்தனியாக பதில் தரமுடியவில்லை குறைநினைக்கவேண்டாம் உறவுகளே...