Sunday, April 24, 2011

Share

அநாதை..


அவதரித்த அரை நொடியில்
அன்னை அருகே அருகாமலே
அரவணைக்க யாருமின்றி
அறியாமலே அழுகின்றேன்
அகிலமதில் எனை வி்ட்டு
தந்தை தன் வழி பற்றியே
தாய் இவளும் - தன் 
பயணத்தினை தொடர்ந்ததினால்

பசியறிந்து பால் ஊட்ட
பக்கதுணை யாருமின்றி
பாட்டிவழி சொந்தமின்றி
பதறியே துடிக்கின்றேன்

சொந்தபந்தம் ஏதுமின்றி
சொல்லியழ வழியுமின்றி
துன்பத்தில் எனை புதைந்து - விட
துளிநீர் கூட மிஞ்சாது
பஞ்சத்தில் வாடும் எனக்கு
பட்டமும் வழங்கி
கெளரவிக்கிறது சமூகம்
அநாதை என்றே என்னை..

27 comments:

கவி அழகன் said...

ஒவ்வொரு வரிகளும் நெஞ்சை தொடுக்கின்றன

கவி அழகன் said...

பல பிள்ளைகளின் நிலை இதுதான் தாய் தந்தையர் மறைவு வேறு திருமணம் கள்ள தொடர்பு இவ்வாறன காரணங்களால் தாம் பெற்ற பிள்ளைகளையே மறக்கிறார்கள்

Avargal Unmaigal said...

மனதை தொட்டகவிதை....நன்றாக இருக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கவிதை

isaianban said...

நெஞ்சத்தை கசக்கி பிழியும் வரிகள்... அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

Suthershan said...

very touching !!!

கடம்பவன குயில் said...

என்னுடைய கருத்தை கீழே கொடுத்துள்ள லிங்க் வழியாகவே கொடுத்துள்ளேன். அமைதியான சூழலில் கேட்டுட்டு உங்க கருத்தை நீங்க சொல்லுங்க தோழியே.
http://www.youtube.com/watch?v=ppbs7d31014

குறையொன்றுமில்லை. said...

மனதைக்கலங்க வைத்த கவிதை.
கொஞ்ச நேரம் அதன் பாதிப்பிலிருந்து மீளவே முடியலெ.

கடம்பவன குயில் said...

கண்கள் இல்லா மனிதருக்கு
கால்கள் என நாம் நடந்தால்
நம் பூமியில் அநாதையார்? அநாதையார்?

நந்தலாலா படப்பாடல்.

இறைவன் இருக்கும்வரை அநாதை என்று எவரும் இல்லை. நாதியற்ற
பூவும்இல்லை. நற்று வைத்ததால் வந்தது.

தங்கள் கவிதை நந்தலாலா படப்பாடல் போல் மனசைக் கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்துவிட்டது. அருமையான கவிதை தங்களைப் போலவே.

Nathan.... said...

Negative all the way... some orphans turn great.

கார்த்திக் said...

good one

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வருத்தமாக இருக்கிறது.

கார்த்திக் said...

உங்களின் தலைப்பின் அர்த்தம் யாருக்குமே புரியக்கூடாது என்பது என் எண்ணம் என்பதால்
அந்த எழுத்துக்களை தவிர உங்கள் கவிதையின் கரு நல்லாயிருக்கு

Unknown said...

கவிதை நன்றாக இருக்கிறது சகோ!

Radha N said...

நல்ல கவிதை

Ram said...

அருமை பிரஷா.. எதிர்பார்க்கவில்லை.. சூப்பராக இருந்தது.. கவிதை நடை, அது இதுன்னு எதையும் பாக்கல.. ஆனா வரிகள் செம..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் சமுகத்தின் மீதான அக்கறை கவிதையில் பிரிதிபலிக்கிறது...

கண்டிப்பாக அநாதைகள் இல்லாத தேசம் செய்வோம்....

சிசு said...

அநாதை - உச்சரிக்கும்போதே வலிக்கும் சொல்.

கவிவரிகள் அத்தனையும் உப்புநீர் தாங்கி கனமாகவே உணர வைக்கின்றன.

இராஜராஜேஸ்வரி said...

மனம் கலங்கவைத்த கவிதை.

வளவன் said...

நீ எழுதிவிட்டாய் சகா
எழுத மறுக்கும் சமுகம்
எங்கே
தேடுகிறேன் தென்படவில்லை
வளவன்

Unknown said...

நல்ல கவிதை!

கவிதை பூக்கள் பாலா said...

என்னமோ வலி , செய்யாத குற்றத்திற்கு கிடைக்கும் தண்டனை அனாதை, வாழ்த்துக்கள் தோழியே தொடரட்டும் சமூக சாட்டைகள்.....

Learn said...

ஒவ்வொரு வரிகளும் நெஞ்சை தொடுக்கின்றன

ஜெறின் said...

அழகான வரிகள்......
நெஞ்சை தொடும் வரிகள்...
மொத்தத்தில் அருமை....

நிலாமதி said...

நெஞ்சம் வலிக்கிறது . தாய் தந்தையரின் பொறுப்பற்ற தன்மை நம் உலகில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

tamilbirdszz said...

very very nice poem friend

ம.தி.சுதா said...

அக்கா தங்களின் ஆழ்மனதை என்னால் உணர முடிகிறது..