Thursday, April 21, 2011

Share

பாவப்பட்டவளாய்....


விதி தேவன் வரைந்திட்டான்
விடியலில்லா இரவுகளாய் - என் மனம்
இருட்டில் இருக்க சபித்திட்டான்...
இறைவனிடம் வரம் கேட்டேன்
என்ன பாவம் நான் செய்தேனென்று
பதில் ஏதும் இன்றி
பாவங்களை சுமந்த
வாழ்க்கை வாழ பிறந்தவளாய்
வாழ்கின்றேன் பாரினிலே..
பரிகாரம் செய்து பாவம் போக்கி
  வாழ முயற்சிக்கிறேன் நானும்
ஆயிரம் போராட்டங்கள் மனதினுள்
தோல்வி மட்டும் எனை சூழ

சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்
உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..

14 comments:

பாட்டு ரசிகன் said...

ம்... சூப்பர்..

MANO நாஞ்சில் மனோ said...

என்னாச்சு சோக கவி பாடிட்டீங்க....

Unknown said...

நிறைய பெண்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் மேடம், நிறைய எழுத்து பிழை உள்ளது போல கவனியுங்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

heart touching one! good poem Pirasha!

Chitra said...

சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்
உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..


....very sad note.... :-(

நிரூபன் said...

மெல்லவும், முடியாத விழுங்கவும் முடியாத ஒரு சூழ் நிலை போல, தத்தளிக்கும் பெண்களின் யதார்த்த வாழ்க்கையினைக் கவிதையில் புனைந்திருக்கிறீர்கள்.
கவிதை... சோகங்களைச் சொல்லி நிற்கிறது, ஆனாலும் இந்த தடைகளையெலாம் தகர்த்தெறிந்து, தோல்விகளையெல்லாம் வெற்றியின் படிக்கட்டுக்களாக மாற்ற வேண்டும், அப்போது தான் வாழ்க்கையே ஒரு சவாலாக அமைந்து கொள்ளும் சகோ.

கவி அழகன் said...

பரிகாரம் செய்து பாவம் போக்கி
வாழ முயற்சிக்கிறேன் நானும்

ஒரு மனிதனுக்கு கவலை சோகம் வரும்போது தான் முட நம்பிக்கை இலகுவில் உட்புகுகிறது தன்னம்பிக்கை வேண்டும் தோழி

கவி அழகன் said...

சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்

இந்தவரி நம்பிக்கையின் எதிர் ஒலி

கவி அழகன் said...

உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..

இரட்டை வேடம் ஏன் ஒன்றில் சோகமா இருக்கணும் இல்லை என்றால் சந்தோசமா இருக்கனும்

Black or white no colour in between

Unknown said...

என்னாச்சு ஏன் சோகம்? :-)

ஹேமா said...

பிரஷா...ஏன் இத்தனை சோர்வு !

வேங்கை said...

சோகம் கூட சுகமோ ..? கவிதை அருமை ...

Murugeswari Rajavel said...

சோகக் கவிதை!
அதிருக்கட்டும்,profile குழந்தை அழகு!

Nagasubramanian said...

so sad :(