Tuesday, April 12, 2011

Share

அண்ணனுக்கு ஓர் வாழ்த்து.....

பல வண்ண பூக்கள்
அலங்கரிக்கும் சொந்தமதில்
உள்ளப் பாசமலராய்
வாசம் வீசியே
என்னோடு இணைந்தவரே

புவியிதனில் உம் வரவுக்காய்
புலர்ந்திருந்த பொழுதுபோல
பூவினம் மொட்டவிழ்க்க
புல்லினம் சிறகடிக்க
புலகாங்கிதம் அடைந்தனவே
சூழ்ந்திருந்த சொந்தமெல்லம்...

புதுவசந்தம் வீசிடவே
புறப்படும் முயற்ச்சி எல்லாம்
பூந்தென்றலுடன் இணைந்தே
புன்னகையை கொடுத்திடவே
இன்பமே உறவாக பொழுதெல்லாம்-உம்
இல்லமதில் இதம் வீச.....

அகிலமதை அலங்கரிக்க என்
அண்ணணாய் உருவெடுத்து
அவதாரித்த இன் நன்னாளில்
அனைத்து நலனும் பெற்றே
அகம் மகிழ்ந்தே என்னாளும் வாழ்ந்திடவே
ஆண்டவன் துணைநாடி- நானும்
அன்புடனே வாழ்த்துகிறேன்.

(தனது அண்ணனுக்காக வாழ்த்தும் ஹம்சன்)

13 comments:

தம்பி கூர்மதியன் said...

அட என் சார்பிலும் ஒரு வாழ்த்தை போட்டுடுங்க..

Chitra said...

அகிலமதை அலங்கரிக்க என்
அண்ணணாய் உருவெடுத்து
அவதாரித்த இன் நன்னாளில்
அனைத்து நலனும் பெற்றே
அகம் மகிழ்ந்தே என்னாளும் வாழ்ந்திடவே
ஆண்டவன் துணைநாடி- நானும்
அன்புடனே வாழ்த்துகிறேன்.


....How sweet!

Convey our birthday wishes to your wonderful brother! :-)

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

தமிழ்தோட்டம் said...

நமது தமிழ்த்தோட்டத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்..

அருமையா இருக்கு வாழ்த்து கவிதை பிரஷா. பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல அசத்தல்....

சிவரதி said...

அகிலமதை அலங்கரிக்க-எம்
அண்ணணாய் உருவெடுத்து
அவதாரித்த இன் நன்னாளில்
அனைத்து நலனும் பெற்றே
அகம் மகிழ்ந்தே என்னாளும் வாழ்ந்திடவே
ஆண்டவன் துணைநாடி- நானும்
அன்புடனே வாழ்த்துகிறேன்
பல்லாண்டு வாழ்க வாழ்க...

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

யாதவன் said...

அண்ணாச்சி வாழ்த்துக்கள்

Lakshmi said...

உடன்பிறப்புக்கு அருமையான கவிதை.

ராஜி said...

Wish You Happy many more haapy returns of the day

ஆனந்தி.. said...

தங்கச்சி..என் சகோதரனுக்கு இந்த சகோதரியின் வாழ்த்துக்களை சொல்லிடு ..இனிப்பு ஒழுங்கா அனுப்பி வைக்க சொல்லிடு...

நிரூபன் said...

உங்கள் அண்ணனை, உங்களோடும் ஏனைய வலையுலக நண்பர்களோடும் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

வருகை தந்து அண்ணனை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள்.