ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....
இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....
உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...
ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....
இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....
உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...
ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்...
68 comments:
//ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்..//
அஞ்சலி செலுத்திடுவோம்!
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி.
கவிதை அருமையா இருக்கு....
சில காயங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் வடுக்களாக மாறாமல் காயங்களாகவே இருக்கின்றன.
enathu kannerthuligalum inge pathivu seigiren..
ஆறாத வடுக்களாய் நம் மனதில் ஆழிப்பேரலையின் அடங்காதா ஆசையில் பிரிவின்றி பிரிந்த உள்ளங்கள் என்றும் நீங்காமல் நம் நெஞ்சில் வாழும் அவர்களின் நினைவுகள் என்றும் எங்கும் நிறைந்திருக்கும்
மிகவும் அருமை..
அஞ்சலி செலுத்திடுவோம்..
:) அருமை..
இயற்கையின் சீற்றத்தையும் அதனால் வரும் பாதிப்பையும் நன்கு எழுதியிருக்கிறீர்கள்
சோகத்தை வார்த்தைகளில் வடித்திருக்கும் விதமும் அதன் வலி பரவி கிடப்பதும் கவிதையி வெற்றி.......எமது அஞ்சலிகளும்!
ஆறாண்டுகள் ஆனாலும் ஆறுதல் சொன்னாலும்
இன்னும் கண்களில் கண்ணீர் துளிகள்
எங்களால் முடிந்த
மடிந்தவர்களுக்கான அஞ்சலிகள்
யாருமே மறந்திட முடியாப் பெருந்துயரம் ஆழிப்பேரலை! நல்ல கவி வரிகளில், பொருத்தமான நினைவூட்டல்! நன்றி. தொடர்க!
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி...
ப்ரஷா,
அஞ்சலியைக் கூட அழகுணர்வோடு செய்யும் அற்புதக் கவிதாயினி!
உணர்வின் வெளிப்பாடான ஒரு கவிதை. அச்சோகததை எம்மால் எப்படி மறக்க முடியும்....
26.12 :(
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
நன்றோ.. உன்செயல் ............
சபிக்கும்மடி உன்செயலை,
என் தலைமுறைகள் உள்ளவரை ...........
- துக்கத்தின் துடிப்பிலே பாலா
சுனாமி: ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத காயம்.
மறந்திட மறுக்கின்ற அழிவு இது
ஒவ்வொரு வருடமும் நினைக்க முடிகிறது அதன் சீற்றத்தை
உங்கள் வரிகளில் படம் பிடித்தீர்கள்
வாழ்த்துகள் அனுதாபங்கள்
திரும்பிப் பார்கிறேன் சைட் பார் கவிதையும் படமும் அருமை. கிளி கவிதை +படமும் தான்.
பின்னூட்டம் தனியே ஓப்பன் ஆகும் படி செய்யலாமே. பல முறை வந்தும் பின்னூட்டம் இடாமலே தான் சென்றேன். இந்த கமெண்ட் பாக்ஸ் எரர் மெசேஜ் தந்து கொண்டே இருந்தது
அன்று நாகை மற்றும் நாகூரில் நேரடியாக அந்த கொடுமையை பார்த்த பாவி நான்.
நன்றி.!! காதலிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததற்கு.. சரியான நாளில் சரியான பதிவு.. முதலில் ஒவ்வொரு பத்தியின் வரிகளும் அப்பத்தியின் ஆரம்ப எழுத்திலே இருக்க நினைத்து எழுத தொடங்கியிருக்கிறீர்கள்.. பின்பு எம்மை போன்றே அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு ஆதங்கத்தில் முழுதுமாய் இறங்கிவிட்டீர்கள்..எல்லோருக்குள்ளும் இருக்கும் அதே ஆதங்கம்.. சிறப்பான வெளிபாடு..
@Rajeevan: என்ன நிலைமை இது தோழா.??? இதை நினைவூட்டவேண்டுமா.?? இதை எப்படி மறந்தீர்கள்.???
//ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....//
ஆண்டுகள் பலவாயினும்,ஆறாத ரணம்தான்.
அஞ்சலி செலுத்துவோம்.
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்...
நீங்கள் இதுபோலவும் எழுதுவீர்கள் என்று உணர வைத்த கவிதை... சுனாமி படம் கிராபிக்ஸ் என்றாலும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது...
உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் பிரஷா..!!
ஆழிபேரலை நினைவாய் உதித்த உங்களது உணர்வு மிக்க கவிதை நன்றாக இருக்கிறது ...
படிமம்,முரண், எள்ளல்,ஹைகூ போன்ற புதுக்கவிதை உத்திகளை முயற்சி செய்யுங்கள் !
//நன்றி.!! காதலிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததற்கு.. சரியான நாளில் சரியான பதிவு.. முதலில் ஒவ்வொரு பத்தியின் வரிகளும் அப்பத்தியின் ஆரம்ப எழுத்திலே இருக்க நினைத்து எழுத தொடங்கியிருக்கிறீர்கள்.. பின்பு எம்மை போன்றே அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு ஆதங்கத்தில் முழுதுமாய் இறங்கிவிட்டீர்கள்..எல்லோருக்குள்ளும் இருக்கும் அதே ஆதங்கம்.. சிறப்பான வெளிபாடு..//
repeatttu my dear thangachchi!!
எனது ஆழ்ந்த அஞ்சலி அன்று மரித்து போனவர்களுக்கு...
என்னுடைய மனமார்ந்த அஞ்சலி
இன்றைய நாளில் மட்டுமல்ல என்று எப்போ நினைத்தாலும் மனதைக் கலக்கிக் கலங்க வைக்கும் நிகழ்வு அது.மறக்கமுடியுமா.ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள் !
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.
உங்கள் ப்ளாக்கும் படைப்புக்களும் அருமை,அழகு.
@ஜீ...நன்றி ஜீ
@சே.குமார்நன்றி குமார்
@logu..நன்றி லோகு
@dineshkumar நன்றி நண்பரே
@பதிவுலகில் பாபு நன்றி பாபு..
@கல்பனா நன்றி கல்பனா
@Meena நன்றி மீனா
@dheva நன்றி சகோதரா
@FARHAN நன்றி FARHAN..
@Rajeevan நன்றி Rajeevan
@MANO நாஞ்சில் மனோ நன்றி நண்பரே..
@வெறும்பய நன்றி சகோதரா
@Murugeswari Rajavel மிக்க நன்றி நண்பரே..
@ANKITHA VARMA மிக்க நன்றி சகோ...
@karthikkumarநன்றி கார்த்திக:குமார்
@bala
நன்றி நண்பரே..
@சர்பத்நன்றி நண்பரே
@நேசமுடன் ஹாசிம் நன்றி நண்பரே..
@எம் அப்துல் காதர் விருதினை பெற்றுக்கொண்டேன்..விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..
@ரிஷபன்Meena மிக்க நன்றி ...
தற்பொழுது பின்னூட்டம் இட கூடியதாக உள்ளதா?
@ராஜவம்சம் கொடுமையான நாளல்லவா... வருகைக்கு நன்றி
@ராஜவம்சம் கொடுமையான நாளல்லவா... வருகைக்கு நன்றி
@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி நண்பரே..
@சென்னை பித்தன் நன்றி சென்னை பித்தன்
@ArunprashA நன்றி அருந்தா
@philosophy prabhakaran நன்றி பிரபா
@பால் [Paul] நன்றி பால்
@க.சுரேந்திரகுமார் முயற்சிக்கின்றேன் நண்பரே..உங்கள் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி நண்பரே..
@ஆனந்தி.. நன்றி அருமையக்கா
@sakthi நன்றி சக்தி
@இரவு வானம் நன்றி நண்பரே..
@ஹேமா நன்றி ஹேமா அக்கா
@asiya omar மிக்க நன்றி சகோ..
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமில்லை..ஆழிப் பேரலை கவிதை அழகாயிருக்கிறது வாழ்த்துக்கள்.............
@A.M.Askarநன்றி நண்பரே...
@ஆமினாநிச்சயமாக தொடர்பதிவு பகிர்கின்றேன்
nalla kavithai.
ninaivukal vali nirainthavaikal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/
Post a Comment