அன்று
உன் முகம்
காணாத நேரமதில்
முரண்பட்டு
வெளியானது
முரண்டுக்குணம்!
அறியும் வயதிருந்தும்
அறிய முடியாத
சூழ்நிலை கைதியாய்
உணர்வுகள்.
தலைக்கேறிய
கோபம்
தணிய மறுத்த
தனிமையின் கொடுமையது!
குழந்தையாய்
சிரிக்கின்றாய் இன்று
கூனிக்குறுகி
தலை குனிகிறது
உணர்வுகளுடன்
முரட்டுக்குணமும்!
பாவம் போக்கிட
புலம்பி அலைகிறேன்
நெஞ்சில் சுமந்து
திரிகிறேன்.
நாமத்தை உச்சரிக்கிறேன்
இருந்தும்
மீண்டும் ஒரு
வன்முறையாய்
தடைகள் விதிக்கிறது
தலைமை!
ஐ.நா சென்று
முறையிட முடியாத
பாவியாய்
மீண்டும் ஒரு
கைதியாய்
போராடிக் கொண்டிருக்கிறேன்...
0 comments:
Post a Comment