Wednesday, January 16, 2013

Share

புரியவில்லை..

பாசங்கள் பறிபோகின்றதா?
பாசங்கள் கூட வேசமானதா?
புரியவில்லை..

பாசத்தால் இங்கே
பாவப்பட்டவளாய்
பரிதவிக்கின்றேன்...
எங்கு உண்மை பாசம்
தேடி தேடி தோற்றேன் என்பதா?
தோற்கடிக்கப்பட்டேன் என்பதா?
புரியவி்ல்லை...

கண்கள் கூட கசிய மறுக்கின்றன
கல்லாகிய மனிதர்களால்..
வெந்நீரில் மேலே வாழ்வதாய்-மனம்
வேகின்றது உஷ்ணமாய்...

வெறுத்து ஒதுக்கிட நினைக்கின்றேன்
வேதனைகள்  முன் வந்த நிற்கின்றது
உரிமையே இல்லாத உறவுகள் எதற்கு
உள்ளம் கேட்குது என்னிடம்
பதில் என்னவென்று புரியவி்ல்லை...

கசிய மறுக்கும் மனங்கள் நடுவே
கல்லெறிபட்ட மான் ஆனேன்
பாசத்தால் அணைபோட்டு
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
பாசாங்கு செய்து மறைகின்றன
பாழாய் போன சுயநலத்தால்..
மனிதர்களையும் புரியவில்லை
நேரத்துக்கு நேரம் மாறும்
அவர்கள் மனங்களையும்
புரியத்தான் முடியவி்ல்லை.....

4 comments:

'பரிவை' சே.குமார் said...

//மனிதர்களையும் புரியவில்லை
நேரத்துக்கு நேரம் மாறும்
அவர்கள் மனங்களையும்
புரியத்தான் முடியவி்ல்லை.....//

அருமையான கவிதை...

வலிகளின் தொகுப்பே இங்கு வார்த்தைகளாய்..

MANO நாஞ்சில் மனோ said...

இன்றைய காலத்தில் பாசம்கூட வேஷமாகிவிட்டது ஆனால் யாரையும் புரியத்தான் காலதாமதம் ஆகிறது - அருமை...!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உண்மை தான் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே. குமார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்