Monday, October 3, 2011

Share

தவிப்பு..


என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று
என் வாழ்வில் நிரந்தரமாய் ஆனது

நான்கு சுவர்களுக்கு
நாட்களும் அதுவாய் கழிக்கின்றது..
பூத்துக் குலுங்கிய பூங்கா வனம்
இன்று புழுதி பல படிந்து
குருதியில் தோய்ந்த
போர் நிலமாய் என் வாழ்க்கை....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்
காதல் எனும் வடம் பிடித்து
காணாமல் போனவர்கள் பல பேர்
இதில் கடைசியில் நானும்
இணைந்து கொள்ளும் கொடுமை இதுவோ

ஆடிப் பாடி திரிந்த இடமெல்லாம
ஆள் அரவமற்று
அமைதியாய் இருப்பதாய் ஓர் பிரமை.
கை கோர்ந்து நடந்து திரிந்த
கடற்கரையோர கடலலைகள்
எள்ளி நகையாடுகின்தே
என் நிலை கண்டு...


நிலவினை ரசிக்கையில்
உயிரான அவன் நினைவுகள்
எரிமலையாகி என்னுள்
அணு அணுவாய் உயிர் பறிக்கும்
கொடுந் துயர் இதுவோ...

நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..

17 comments:

கலையன்பன் said...

Arumai...

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல தேன் கவிதையின் ஏக்கம் புரிகிறது!!!!

Prem S said...

//நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..//அருமை அன்பரே !

கவி அழகன் said...

நான்கு சுவர்களுக்கு
நாட்களும் அதுவாய் கழிக்கின்றது..
பூத்துக் குலுங்கிய பூங்கா வனம்
இன்று புழுதி பல படிந்து
குருதியில் தோய்ந்த
போர் நிலமாய் என் வாழ்க்கை....

என் வாழ்க்கையும்

கவி அழகன் said...

http://kavikilavan.blogspot.com/2010/09/blog-post_27.html
என் தலையணை ரகசியம்

1

என் காதல் கசங்கியது போல்
தலையணையும் கசங்கியுள்ளது
காலையில்

* * * * * * *
2

உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்

கவி அழகன் said...

http://kavikilavan.blogspot.com/2010/09/blog-post_29.html

தூக்கம் வந்து தூங்கவில்லை
தூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்
* * *
குளிர்வதால் போர்க்கவில்லை
சோகத்தை மறைக்க போர்க்கிறேன்
* * *
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்
* * *
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை
உனை தாங்கும் நெஞ்சம் இதமாக தூங்க .....

பிரணவன் said...

காதலின் பிரிவு யாரோ ஒருவருடன் தான் எனினும், எவருமே நமக்கு இல்லாதா மாதிரியான உணர்வு ஏற்படும். . .அழகான கவிதை. . .

'பரிவை' சே.குமார் said...

//நிலவினை ரசிக்கையில்
உயிரான அவன் நினைவுகள்
எரிமலையாகி என்னுள்
அணு அணுவாய் உயிர் பறிக்கும்
கொடுந் துயர் இதுவோ...


நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..//


கவிதையின் ஏக்கம் புரிகிறது.

Suresh Subramanian said...

Nice to read....

http://suresh-tamilkavithai.blogspot.com

செய்தாலி said...

//நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்.//


வரிகளில் தவிப்பின் உச்சம்

F.NIHAZA said...

நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..

பெண்மையின் ஏக்கங்கள் புரியுது...புரியுது....

Unknown said...

VERY NICE!

மாய உலகம் said...

கடற்கரையோர கடலலைகள்
எள்ளி நகையாடுகின்தே
என் நிலை கண்டு...//


தோல்வி உண்மையில் நம்மை ஏளனம் செய்வது போல் தான் இருக்கும்..

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

பெண்மையின் தவிப்பை தெளிவாய் உணர்த்தும் கவிதை. தொடர்ந்து எழுதுங்கள் .வானம் வசப்படும் .நட்பாக குரு.பழ.மாதேசு. www.kavithaimathesu.blogspot.com குருவரெட்டியூர்

இராஜராஜேஸ்வரி said...

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்/

nice..

ஓசூர் ராஜன் said...

கவிதைகளை நேசிப்பவர்கள் மெல்லிய மனம் உள்ளவர்கள் என்பது எனது நம்பிக்கை! மெல்லிய கவிதைகள் கனமான சிந்தனைகளை ஏற்படுத்துவது உண்மையாகும். அதிலும் துன்பத்தை கருவாகக் கொண்ட கவிதைகள் இன்பத்துள் இன்பத்தை ஏற்படுத்துவது இயற்கையான முரண்பாடாகும்! நீங்கள் ஒரு அழகிய முரண்பாடாகவும், கவிதையாகவும் உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

ஓசூர் ராஜன் said...

கவிதைகளை நேசிப்பவர்கள் மெல்லிய மனம் உள்ளவர்கள் என்பது எனது நம்பிக்கை! மெல்லிய கவிதைகள் கனமான சிந்தனைகளை ஏற்படுத்துவது உண்மையாகும். அதிலும் துன்பத்தை கருவாகக் கொண்ட கவிதைகள் இன்பத்துள் இன்பத்தை ஏற்படுத்துவது இயற்கையான முரண்பாடாகும்! நீங்கள் ஒரு அழகிய முரண்பாடாகவும், கவிதையாகவும் உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!