Thursday, October 27, 2011

Share

மெளனம்



உன் சுட்டுவிரல் 
காட்டும் திசை நோக்கி
பாய்ந்தோடும் என் மனசு - இன்று
கற்களிலும் முட்களில்
சிக்கி தவிக்கும் நிலையினை
நீ அறியாயோ...

நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும் 
என் நிலை அறியாயோ...

என் வாழ்வின் வெற்றிகள்
உன் உத்தரவின்றி
என்னை முத்தமிட்டதில்லையே..
 இன்று
சாபங்களே வரமாய்
தோல்விகளே நிரந்தமாய்
வலியே வாழ்வாய்
துடி துடிக்கும்
அபலையின் அழு குரல்
உன்னை தீண்டவில்லையா?

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...

14 comments:

vetha (kovaikkavi) said...

''...என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...''

வசந்தங்கள் வீசட்டும். மிக சோகக் கவிதை. சியர் அப். நல் வாழ்த்தகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை.../

மௌனமே பாஷையா?/

ஓசூர் ராஜன் said...

நல்ல கழிவிரக்கம் உள்ள கவிதை! என்னோட பிளாக்கையும் கொஞ்சம் எட்டிப் பார்க்குறது தானே?

Ranioye said...

mouna mozhi vazhikalin velipadu... arumai tholi

Anonymous said...

இதழ் விரிப்புக்கும் கால மாற்றத்துக்கும் அத்தனை இணைப்பா...?

Avargal Unmaigal said...

கவிதை அருமை. நிஜ வாழ்வில் ....காதல்....கல்யாணம். சில வருடங்கள் கழிந்த பின் காதலை யாசித்துதான் பெற வேண்டியிருக்கிறது.

Thamizh said...

இயல்பான கவிதை.
மவுனத்தின் வலி கொடுமை தான் தோழ்ரே...

Unknown said...

எல்லாரும் சோகமாவே எழுதுறாங்கப்பா..!!!

ஹ்ம் சோக கவிதை நன்று.

குறையொன்றுமில்லை. said...

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...



நான் ரசித்தவரிகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

பிரணவன் said...

மனதைக் கலைத்தவன், இன்று மௌனம் கலைக்க மறுப்பதேன். . .

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

Unknown said...

///நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும்///

இமயம் ஏறிய அவலம் - இங்கே
இதயம் பற்றி எரியும்!...

கவிதை நன்று ...

சகோதிரி சாகம்பரி ஆற்றுபடுத்தியதால் இவ்விடம் வந்தேன்... நன்றி!

G.M Balasubramaniam said...

முன்பே ஒரு முறை உங்கள் பதிவுகள் சில படித்துவிட்டு சோக மன நிலையை விட்டு விடும்படி பின்னூட்டம் எழுதிய நினைவு. இந்தப் பதிவினை படித்தபோதும் அதையே சொல்லத் தோன்றுகிறது. CHEER UP THOZI.