Friday, October 21, 2011

Share

வாழ்க்கை பயணம்...



மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.

கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள் 
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...

தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...

சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து 
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும் 
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.....

17 comments:

Philosophy Prabhakaran said...

சூப்பரா இருக்கு மேடம்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி Prabhakaran

மாய உலகம் said...

தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.....//

மனதை வருடும் கவிதை கலக்கல்....

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நீட்.. பிளாக் பேக் டிராப், சிந்தாமணி லெட்டர்ஸ் அழகு காம்பினேஷன் !!

arasan said...

ஒவ்வொரு நாளும் புதிய சந்திப்பும் , பிரிவும் அடங்கியதே வாழ்வு என்பதை
அற்புதமாய் கூறிய தோழிக்கு வாழ்த்துக்கள்

பிரணவன் said...

வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...
உண்மையான வரிகள் mam. . .

ஓசூர் ராஜன் said...

அருமையான பகிர்வு!

A.M.Askar said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்,
எனது வலைப் பூவையையும் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
www.askardj.blogspot.com

F.NIHAZA said...

அழகான கவிதை..வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கலக்கல் வழக்கம் போல், வாழ்த்துக்கள்...!

ராஜா MVS said...

அருமையான கவிதை! தோழி..

Anonymous said...

Nice, nothing is permanent in this world..it depicts..good job thozhi..

சிந்தையின் சிதறல்கள் said...

மனதைத் தொட்ட வரிகள் அதிகமிருக்கிறது தோழி பாராட்டுகள்

Unknown said...

/*சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும்
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி..../


Real.... Accka

'பரிவை' சே.குமார் said...

மனதை வருடும் கவிதை.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...