Friday, December 17, 2010

Share

தனிமையில் நான்..

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டது மதிகெட்ட பேதை உனக்கு(02) இதற்கான பதில் கவிதை அவளால் எழுதப்பட்டது.... யாவும் கற்பனை)
 
உன்னருகில் இருக்கையில்-உன்னை
புரிந்திடா என் உள்ளம்
உன் வார்த்தை வரிகள் கண்டு
சிலிர்க்கிறது உள்மனம்-ஆனால்
உணர்வுகளை பரிமாற முடியா
பாவியாய் நான் இங்கு
தனிமையல் தவிப்பது
உறவுகளுக்கு புரியவில்லை....
உனக்கும் தெரியவில்லை....

உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்

தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம் 
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து  உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்

ஆதங்கத்தில் என் மனம் இங்கு
ஏதும் தெரியாம உன்மனம் அங்கு
பகிர்ந்துள்ளேன் உன்னிடம்
பதிலை தந்திடு........

46 comments:

Unknown said...

//ஆதங்கத்தில் என் மனம் இங்கு
ஏதும் தெரியாம உன்மனம் அங்கு
பகிர்ந்துள்ளேன் உன்னிடம்
பதிலை தந்திடு.......//
nice! :-)

Paul said...

//தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம்
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்//

நிறைய பேசுகின்றன இந்த வரிகள்..!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி ஜீ.........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [paul]
நன்றி நண்பரே....

Unknown said...

என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்//
பிரச்சனையே அன்னைதானே எல்லா இடத்திலும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இனியவன்

பல இடங்களில் இருக்கின்றது காரணம் பிள்ளைகள் மேல் அவர்கள் கொண்டுள்ள பாசம் தான் காரணம்...
நன்றி இனியவன்

ம.தி.சுதா said...

//////உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்////

காதலுக்கு கண்கள் இல்லை மானே..... இப்படியல்லவா சொல்கிறார்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

priyamudanprabu said...

nice
nijamave ellam karpanaithanaa?

arasan said...

அருமையான வரிகள் ...

தவிப்புகளின் வலி உங்கள் வரிகளில் ... நல்லா இருக்குங்க

எஸ்.கே said...

மீண்டும் எழுத்துக்கள் அருமையாக இருக்கின்றன. கவிதை நயம் மேலோங்கி கொண்டிருக்கின்றது!

logu.. said...

ippolam kavithaiyave kelvi pathil solla arambichutaingala?

engiyo poiteeenga.

பனித்துளி சங்கர் said...

கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனிமையின் வலி சுமந்து நிற்கிறது அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Unknown said...

//உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்//

இது எல்லா வீட்டிலயும் நடக்குறதுதானே

ஆமினா said...

ஒரு பெண்ணின் வேதனை படித்ததும் உணர முடியும் அளவுக்கு கொடுத்துள்ளீர்கள்!!!

சூப்பர்

FARHAN said...

கண்பார்த்து உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்

சூப்பர் கவிதை

Anonymous said...

தவிப்பின் வலி.. கவிதையாய்.
அருமை தோழி :)

Unknown said...

அருமையான கவிதை..

Anonymous said...

nice

aiasuhail.blogspot.com said...

//தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம்
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா??//


அருமையான கவிதை,
முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன். அழகான தள வடிவமைப்பு.
கொஜ்சம் பொறாமையாகவுள்ளது.

வாழ்த்துக்கள்.
http://aiasuhail.blogspot.com/

Chitra said...

தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம்
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்

...very well written.

சிவகுமாரன் said...

/உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்//
---காதலின் இன்றைய உண்மை நிலை

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை..

சென்னை பித்தன் said...

//உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்//
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்
ஊரகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்
பாரிலுள்ளொர் காதலென்னும் பயிரை மாய்க்க”
பாரதியின் இந்த வரிகள்தாம் நினவில் வந்தன,உங்கள் கவிதையைப் படிக்கும்போது.
சிறப்பான கவிதை.வாழ்த்துகள்.

Unknown said...

//உறவுகளுக்கு புரியவில்லை....
உனக்கும் தெரியவில்லை....//
//தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம்//

ரசித்த வரிகள்..

Unknown said...

கவிதை நல்லாயிருக்குங்க..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா
நன்றி சுதா.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு..
நிஜமாகவே யாவும் நிஜமல்ல

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன்
நன்றி அரசன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே
நன்றி சகோதரா...தொடர்ந்து வாருங்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu..
வித்தியாசமான முயற்ச்சிதான் logu..
நன்றி logu..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி நண்பரே..தொடர்ந்து வாருங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம்
நிதர்சன் உண்மை..
நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா
நன்றி ஆமினா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN
நன்றி FARHAN .....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Balaji saravana
நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha
நன்றி tharsha

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு
நன்றி நண்பரே.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ahamed Suhail
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra
மிக்க நன்றி சித்திராக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன்
"காதலின் இன்றைய உண்மை நிலை
உண்மைதான்
நன்றி சிவகுமாரன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய
நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சென்னை பித்தன்
வருகைக்கும் வாழத்துக்கும் பின்னூட்டத்திறற்கும் நன்றி நண்பரே....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி...
மிக்க நன்றி பாரத்... பாரதி.

ஹேமா said...

பிரஷா...சில நேரங்களில் உண்மையான அன்பு கௌரவத்தால் கொலை செய்யப்படுகிறது !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உண்மை தான் ஹேமா அக்கா... பலர் காதல் குழி தோண்டி புதைக்க படுவது கௌரவத்தால்..
நன்றி அக்கா

எவனோ ஒருவன் said...

//உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்//

உண்மையான வரிகள். கவிதை மிக அருமை.