Thursday, December 9, 2010

Share

மீண்டும் கிடைத்திடுமா???

  இயற்கை காற்று  அள்ளி வீசம்
இதமாய்  வீசும் காற்றுடன் முல்லை வாசம்
இயற்கையாய் வளர்ந்திட்ட வேப்பமரம் 
சோலை நடுவே எம் வீடு  
சோதனையிலும் சந்தோஷங்கள்
ஆலமரமாய் சொந்தங்கள்  
ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்.....

பட்டினி இருந்திருப்போம் - அப்போதும்
பசி மறந்திருப்போம்
வறுமையிலும் சந்தோஷம் 
வாடிடாத அன்னை முகம்.......

எல்லயைில்லா வானமதில்
எண்ணமுடியா நட்சத்திரங்கள்
நடுவிலே வலம் வரும்
 முழு மதியை ரசத்திருப்போம்
முற்றத்தில் ஒன்று கூடி ....

எம் மண்ணின் இனிய வாழ்வு
கிடைத்திடுமா மீண்டும் ...
சோலைவனமாய் இருந்த இடம்-இன்று
பாலைவனமாய் ஆனதே..

ஆசையாய் வளர்த்திட்ட சோலை இல்லை
இயற்கையாய வளர்ந்திட்ட ஏதுமில்லை
தனித்தனியே  சிதறுண்டது உறவுகள்
தனிமையில் கதறுகிறாள் அன்னையவள்...

"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"

22 comments:

pichaikaaran said...

சற்று வித்தியாசமான கவிதை

test said...

Super! :-))

test said...

புதுசா இருக்கே! :-)

ஆமினா said...

ஆழமான வரிகள்

Chitra said...

ஆசையாய் வளர்த்திட்ட சோலை இல்லை
இயற்கையாய வளர்ந்திட்ட ஏதுமில்லை
தனித்தனியே சிதறுண்டது உறவுகள்
தனிமையில் கதறுகிறாள் அன்னையவள்...

"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"

......மனதை தொட்ட வரிகள்!

ராஜவம்சம் said...

உணர்வுகளோடும் உறவுகளோடும் கட்டிப்போடுகிறது.

logu.. said...

"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"

kalangadikum varigal..

ம.தி.சுதா said...

/////பட்டினி இருந்திருப்போம் - அப்போதும்
பசி மறந்திருப்போம்
வறுமையிலும் சந்தோஷம்
வாடிடாத அன்னை முகம்.....////

அருமையாக உள்ளது அக்கா... அம்மா என்ற ஒரு சொல்லே போதும் கவிதையை அழகாக்க...

http://mathisutha.blogspot.com/2010/06/blog-post.html

Philosophy Prabhakaran said...

// ஆழமான வரிகள் //

என்ன ஒரு பத்து அடி இருக்குமா...

Paul said...

நிறைய நினைவுகளுக்கு என்னை பின்னோக்கி இழுத்து செல்கின்றது இந்த கவிதை.. அருமை!!

மா.குருபரன் said...

அருமையாக உள்ளது. வாழ்தத்துகள் தோழி

ஆனந்தி.. said...

ரொம்ப நல்லா இருக்கு தங்கச்சி...

ஹேமா said...

மனதைப் பாரமாக்கி அழுத்தும் வரிகள்.
விதியா வேளையா பிரஷா !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பார்வையாளன் நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... மிக்க நன்றி ஜீ.. முயற்சி தான்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitraமிக்க நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம்மிக்க நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா மிக்க நன்றி சுதா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@philosophy prabhakaran நன்றி பிரபா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா எல்லாம் விதி அக்கா..நன்றி அக்கா