Tuesday, March 9, 2010

Share

காதல் வலி தந்தவனே..

காதலித்தாய் என்னை
கண்ணீருடன் கற்பனையும் தந்தாய்
காவலனாய் உன்னை எண்ணி-என்
காலங்கள் நகருதன்பே..

காதல் காயங்கள் நீ தந்தாய் 
காரணங்கள் புரியவில்லை எனக்கு
காலங்கள் நகரும் காரணங்கள் புரிந்திடும் என
காத்திருந்தேன் தனிமையிலே

காலம் காரணத்தை கூறவில்லை
காலன் உன்னை அழைத்தபின்
காரணத்தை தெரிந்து கொண்டேன்
காலமுழுதும் உன் கல்லறையில்-நம் காதல்
காவியம் வரையட்டும்

0 comments: