Wednesday, March 17, 2010

Share

தாயின் மகிமை

அன்பின் வடிவமாய் - நல்
அறிவினை ஊட்டி
பண்பாக வளர்த்து
பாசமதைத் தந்து
இன் சொற்கள் பேசி

 இல்லத்தை இன்பமாக்கும்
அன்னையவள் வாழ்க - எம்
அன்புத் தெய்வமாய்

தவறுகள் செய்தாலும்
தயவுடன் வினவி
தன்மையாய்க் கண்டித்து
தக்க புத்தி கூறிடும்
தாயைப் போலன்பு
தரணியில் கிடைக்குமா?


பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் பிறப்பிடமாய்
பாங்கான வழிகாட்டி - நல்
பாதையில் நாம் செல்ல
பல வழிகளிலும் எமக்கு
பலனேதும் பாராது
பணிவிடைகள் பல செய்து
பாரினில் சிறக்க வைக்கும்
பாசத்தெய்வமன்னையே

அம்மா என்றிட அன்பு உருகும்
அம்மா என்றிட ஆசை தவளும்
அம்மா என்றிட அகமே சிறக்கும்
அம்மா என்றிட மனமே மகிளும்

அம்மாவைக் கண்டவுடன் துன்பம் நீங்கும்
அம்மாவைக் கண்டவுடன் நோய்கள் அகலும்
அம்மாவைக் கண்டவுடன் வலியும் தீரும்
அம்மாவைக் கண்டவுடன் பசியும் பறக்கும்
அம்மாவை நினைத்தால் வாழ்வில்
எல்லாமே கிடைக்கும்
வாழ்க தாய்க்குலம்
வளர்க நம் சந்ததி.





திருமதி விகிர்தா ஜெகதாஸ்
படித்ததில் பிடித்தது

4 comments:

மதுரை சரவணன் said...

அம்மாவை மறந்துட்டாங்க ஜனங்க..! அய்யா ....நான் பெத்த அம்மாவை தான் சொல்லுறேன்...முதியோர் இல்லங்கள் சாட்சி. கவிதை அருமை. அம்மா வின் முகம் தெரிகிறது கவிதை வாசிக்கும் போது. (அரசியல் அல்ல...)

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு

DREAMER said...

நல்லாயிருக்கு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றிகள்