Wednesday, July 4, 2012

Share

நினைவுகள்



இரவிலும் வருகிறாய்
பகலிலும் வருகிறாய்
அமாவாசையிலும் வருகிறாய்
பெளர்ணமியிலும் வருகிறாய்
குளிரிலும் வருகிறாய்
உடல் எரிக்கும் 
வெப்பத்திலும் வருகியாய்
சில நேரங்களில்
இன்பம் தருகிறாய்
பல நேரங்களில் 
கண்ணீரை தருகிறாய்
நீ யார் என கேட்டால்,
மெளனமாய் சிரிக்கிறாய்,
இம்சைகள் பல கொடுத்து
வஞ்சிக்கும் உன்னை 
கொலை செய்ய எண்ணுகிறேன்
ஆணவமாய் சிரிக்கிறாய்,
மரணமில்லாதவன்
நான் தான் உன் 
நினைவுகள் என்று.....

8 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
உயிரோடு கலந்துவிட்ட நினைவுகளின்
பலத்தை அல்லது அதன் அவஸ்தையை இதைவிட
அழகாய் சொல்வது கடினம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.

செய்தாலி said...

நினைவுகள்
அப்படித்தான் தோழி

சென்னை பித்தன் said...

நினைவுகள் படுத்தும் பாடு!
அருமை

கும்மாச்சி said...

ரசித்தேன், அருமையான கவிதை.

ஆத்மா said...

ரசிக்கக் கூடிய வரிகள்.......
அருமையாக இருக்கிறது தொடருங்கள்

சசிகலா said...

ரசித்த வரிகளை சொல்ல விடாமல்
பக்கத்தில் கொஞ்சி கொஞ்சி பேசும் கிளிகளை ரசித்தபடி இருந்து விட்டேன் தளம் அழகு.

சிவரதி said...

நிஜங்களால் வரும்
மகிழ்ச்சியை விட
நினைவுகளால் வரும்
மகிழ்ச்சியே அதிகம்.
நிஜங்கள் ஒர் நாள்
நிசப்தமாய் போகலாம்-ஆனால்
நினைவுகள் நித்தம்
நிழழாடும் ஓவியங்களாய்
நிலைத்திருக்கும் என்றும்