Thursday, July 21, 2011

Share

ஒற்றைவழி பாதை தேடி....

 காதல் செய்த மாயத்தினால்
கன்னியிவள் விட்ட பிழையிது
பெற்றவர்கள் கண்கலங்க
பெரியவர்கள் ஆசியின்றி
உற்றவனை கைபிடித்து
இல்லறத்துள் கால் பதித்தாள்

உறவுகள் தேவையில்லை
உடையவன் போதுமென
உதறிவிட்டாள் உறவுகளை
தனிமையிலே ஒரு ஜோடி
ஒற்றைவழி பாதை தேடி
ஒற்றுமையை தொலைத்தனரிங்கு..

தனிமைபட்ட வாழ்க்கையில்
தம்பிழையுணர்ந்திங்கு
தனித்தனியே புலம்பியென்ன பயன்
பிழைசெய்ய தூண்டுவது காதலா?
இல்லை அவர் அவர் மனமா?
இல்லையேல் பருவமறியா காதலா?
ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்தும்
ஆறுதலின்றி அலையிதிங்கே இரு ஜீவன்.!

காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந்திடலாம்
நடைமுறையில் சாத்தியமா?
இவ்விருவுள்ளம் புரியவில்லை
நடைமுறை வாழ்க்கையினை...!

வாழ எண்ணி வாசல் 
தாண்டி வந்தவர்கள்-இன்று
வாழ்வை எண்ணி 
கலங்குகின்றார்களே...
வாழ வழிகாட்ட யாருமின்றி
வாடி போன மனமுடனே
கதிகலங்கி நிற்கும் 
இவ் இரு உள்ளங்களை 
சாதியினை காரணம்  சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத்து
தள்ளியே வைத்தனர் உறவுகள்...!

பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!

29 comments:

சேட்டைக்காரன் said...

//பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!//

முத்தான முத்தாய்ப்பு!

பலே பிரபு said...

சாதியினை சொல்லி காதலை எதிர்ப்பது பெற்றோர் தவறுதானே.... இருப்பினும் காதல் திருமணம் செய்த மனங்களை வெளிப்படுத்தும் கவிதை அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சேட்டைக்காரன் வாருங்கள் சகோ நீண்ட இடைவெளிக்கு பின் நம் பக்கம் வந்துள்ளீர்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ...

சேட்டைக்காரன் said...

இதை வாசித்தால் மட்டும் போதும்; பதிவு செய்ய வேண்டாம்.

சொற்பிழைகளோ என்று ஐயமுறச்செய்வன:

1. உடைவன் போதுமென... (உடையவன்..?)

2. தனிமைபட்ட வாழுகையில் (தனிமைப்பட்டு வாழுகையில் / வாழ்கையில்)

இது தவிர எல்லாப் பத்தியிலுமே சந்திப்பிழைகள் உள்ளன. கவனித்துத் திருத்துவீர்களாக!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பலே பிரபுபெற்றோர் பிழைதான் பிரபு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு.

ஜீ... said...

அருமை...குறிப்பாக இறுதி வரிகள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...நன்றி ஜீ..

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!/////

இந்த உயிர்கள் தான் உலகம் முழுவதும் வீடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது....

சரியாக சொன்னீர்கள்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice.,
Thanks for sharing..

பிரணவன் said...

காதலென வந்துவிட்டால் எதை பற்றியும் நினைக்ககூடாது. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயற்கை, அது காதல் வாழ்கையானாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் சரி. . . காதல் முழுமையான புரிதலில் நிறைவு பெருகின்றது. . .விட்டுக்கொடுப்பதும் காதல் தான், வெட்டி சாய்ப்பதும் காதல் தான்.

Ramani said...

காதல் செய்யும் வசீகரத்தில் இளமையின் முறுக்கில்
உலகமும் உறவுகளும் தேவையில்லை என்றே தோன்றும்
திருவிழாவின் போது ஜே ஜெ என இருக்கும் மைதானம்
திருவிழா முடிந்த மறு நாள் வெறிச். சோடிக்கிடப்பதுபோல்
காதல் வேகம் குறையக் குறைய நீங்கள்
மிக அழகாக சொல்லி இருப்பதைப்போல
ஒரு வெறுமையும் ஏக்கமும் வரவே செய்யும்
ஆயினும் காலமும் ஒரு வாரிசின் வரவும்
அனைத்து வெறுமைகளையும் ஓரம் தள்ளி
மீண்டும் வஸந்த காலத்தை நிச்சயம் விதைத்தே போகும்
வெறுமையை மிக அழகாக படிப்பவரும் உணரும்படி
சொல்லியுள்ளதில் இந்தக் கவிதை சிறப்பு பெறுகிறது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

Mahan.Thamesh said...

சாதியினை காரணம் சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத்து
தள்ளியே வைத்தனர் உறவுகள்...!

எப்போதான் திருத்துவானுங்க ..
கவிதை அருமை சகோ

ஆமினா said...

காதலிச்சவங்கள ஒதுக்கி வைக்கிறவங்களுக்கு சிறை தண்டனைன்னு அறிவிச்சுட்டா பிரச்சனையே இல்ல :)

நல்ல வரிகள்
சில வார்த்தைகள் தான் சட்டுன்னு புரியல(நமக்கு ஞானம் பத்தாதுங்கோ!!!)

கவி அழகன் said...

கவிதை அருமை

இரவு வானம் said...

சூப்பருங்க

MANO நாஞ்சில் மனோ said...

கதிகலங்கி நிற்கும்
இவ் இரு உள்ளங்களை
சாதியினை காரணம் சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத்து
தள்ளியே வைத்தனர் உறவுகள்...!//

மிகவும் வேதனையா இருக்கு....

மாய உலகம் said...

//பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை...//

காதல் செய்வது பிழை என்று யாருங்க சொன்னது....

ஆனாலும் காதலில் இணைந்து கனவுலகில் ஜெயித்து... நிஜ வாழ்வில் தோற்று ..... காதலை மதிக்காத மானங்கெட்ட உறவுகளிடம் கையேந்தும் சூழ்நிலையை தந்த விதியை அல்லவா குறை சொல்ல வேண்டும் .....

காதல் கல்யாணத்திற்க்கு பிறகு உள்ள சிக்கலை அற்புதமாய் கவிதை வடிவில் அசத்திவிட்டீர்கள்.....அற்புதம்

Mahan.Thamesh said...

கவிதை அருமை

ஹேமா said...

கதை போல கவிதையாய்ச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.எங்கள் பெரியவர்கள் மாறவே மாட்டார்கள்.அவர்கள் சாதி சமயம் கட்டுப்பாடு என்று வாழப் பழகிக்கொண்டார்கள்.பலியாகிறது இப்படியான சில இளம் வாழ்வுகள் !

Murugeswari Rajavel said...

அருமையான கவிதை ப்ரஷா.

நிலாமதி said...

வாழ்க்கையே ஒரு சவால் அதிலும் காதல் வாழ்க்கை மிகப்பெரிய சவால்.
வாழ்ந்து காட்டுவோம்,என வைராக்கியத்துடன் வாழ வழி காட்டுங்கள். கவிதையில் வந்த கதை மிக அருமை.

சிவகுமாரன் said...

\\\மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!//

-அருமை. வாழ்த்துக்கள்.

Rathnavel said...

காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந்திடலாம்
நடைமுறையில் சாத்தியமா?
இவ்விருவுள்ளம் புரியவில்லை
நடைமுறை வாழ்க்கையினை...!


நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
யதார்த்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியில்ல....... said...

அருமையாக உள்ளது... கவிதையை முடித்திருக்கும் அழகு...) வாழ்த்துக்கள்...

Kousalya said...

என்ன செய்தால் மாறும் இது போன்றவர்களின் நெஞ்சம் ?!

உணர்வுகளை அருமையாக கவிதை வெளிபடுத்தி இருக்கிறது தோழி.

Anonymous said...

///காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந்திடலாம்
நடைமுறையில் சாத்தியமா?
இவ்விருவுள்ளம் புரியவில்லை
நடைமுறை வாழ்க்கையினை...!
// கவிதையிலே பல கருத்துக்களை கூறியுள்ளீர்கள் ..

M.R said...

//பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!//

மன்னிப்பு வழங்காதது மட்டுமல்ல ,அவர்களின் குரூர திருப்திக்காக அதை அடிக்கடி சொல்லிக்காட்டி சம்பந்த பட்டவர்களை வேதனைப் படுத்தி ஆனந்தபடுவார்கள்

சே.குமார் said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

vidivelli said...

உறவுகள் தேவையில்லை
உடையவன் போதுமென
உதறிவிட்டாள் உறவுகளை
தனிமையிலே ஒரு ஜோடி
ஒற்றைவழி பாதை தேடி
ஒற்றுமையை தொலைத்தனரிங்கு../

காதலிக்கும் போது தெரியாது பின்னர்தான் எல்லாம் புரியும்...

சமூகம் மாறும்வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ...
நல்ல கவிதை,,
வாழ்த்துக்கள்..