Tuesday, July 26, 2011

Share

துரோகியாய்.....


அன்பே!!
இனிமையான உணர்வுகளினால்
பின்ணி பிணைந்த நம் உறவு
இன்று சுருதி இழந்து
முட்களால் நிறைந்த
ரோஐாவனமாய் போனதடி
நம் காதல்.

நீ 
இன்று மெளனத்தினால்
காதல் மொழி பேசுகையில்
சோர்வடைந்து போகுதடி 
என் இதயம்...

நிமிடங்கள் 
மணித்தியாலங்களாக மாற
அளவின்றி காலங்களும் கரைய
பேசிப் பேசியே - நாம்
வளர்த்த காதல் செடி இன்று
முகாரி ராகம பாடும்
முறையில் தான்
நியாயம்முண்டோ?

உன் 
கண்கள் சிந்தும்
ஒரு துளி நீர் கண்டு
என் இதயம்
உதிரம் வடிக்கும்
உண்மை நிலை - 
அறியாயோ?

வானுக்கு ஒர் நிலா போல்
என் வாழ்வில்
வசந்தங்கள் வீசும்
பெளர்ணமி நிலா நீயடி
நிலாவான நீ எனக்கு
நிலை குலைந்து போகையில்
நிம்மதி இழக்கின்றேன்
அத் தருணத்திலே....

என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று 
துரோகியாய்.....

27 comments:

நிலாமதி said...

ரொம்பவும் சோகமாய் இருக்கிறது . உலகில் சகிக்க முடியாத சோகம் துரோகம். .

நிரூபன் said...

காதலில் துரோகியானவனின் மன உணர்வினைக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

சிவரதி said...

காதல் சாம்பிராஐயத்தில்-நீ
சம்பாதித்த பெயர் துரோகி-ஆனால்
சமுகத்தில் நீ அவளைச்
சந்தித்த முதல்
கடக்கும் கணம் ஒவ்வொன்றும்
அவள் நினைவிலே நீச்சலடிக்க
நெஞ்சம் வலிப்பதனை
படமும் கவியும்
பார்த்தவுடன் புகட்டுறதே

ஆமினா said...

அருமையான கவிதை !!!

S Maharajan said...

//நீ
இன்று மெளத்தினால்
காதல் மொழி பேசுகையில்
சேர்விழந்து போகுதடி
என் இதயம்...//

ரசித்த வரிகள்

ஜீ... said...

Nice!

Lakshmi said...

நல்ல கவிதை. சோகரசம் தூக்கலாக இருக்கு

பலே பிரபு said...

Nice

MANO நாஞ்சில் மனோ said...

அடடா சிலிர்க்க வைக்கும், அதே வேளையில் மனம் கணக்கவும் செய்கிறது கவிதை....

நெல்லி. மூர்த்தி said...

"என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி"

இதயத்தை தொட்ட வரிகள் மட்டுமல்ல சுட்ட வரிகளும் கூட...

ரியாஸ் அஹமது said...

good poem sis

VELU.G said...

உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை

Anonymous said...

நல்லாய் இருக்கு சகோதரி..

சே.குமார் said...

அருமையான கவிதை.

கவி அழகன் said...

அருமையான கவிதை !

பிரணவன் said...

தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று
துரோகியாய்.....
உன்மையான வரிகள். . .அருமை

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மீண்டும் அசத்தலான கவிதை தோழி..

சந்திரகௌரி said...

நாம் பிரிந்து பிறர் வாழ என்றால் பிறருக்காய் காதலைத் தியாகம் செய்ததாகக் கருதுகின்றீhகளா? தியாகத்திலும் சுகம் கண்டாலே அதனைச் செய்யவேண்டும். நல்ல கவிதை

கலாநேசன் said...

நல்கவிதை. புகைப்படம் மிகப் பொருத்தம்...

சௌந்தர் said...

சோக கவிதையா இருந்தாலும் நல்லா இருக்கு..!!!

என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று
துரோகியாய்.....///

பிடித்த வரிகள்..!!

Avargal Unmaigal said...

நான் உங்கள் பெயரை எனது பதிவில் ( http://avargal-unmaigal.blogspot.com/2011/07/blog-post_28.html ) பயன்படுத்தியுள்ளேன். நகைச்சுவைக்காக மட்டும் பயன்படுத்தியுள்ளேன் ஆனால் அதை நான் தவறாக பயன்படுத்தி இருப்பதாக நீங்கள் கருதினால் அதை எனக்கு தெரியப்படுத்தவும். அதை நான் நீக்கிவிடுகிறேன்

அன்புடன்,
Madurai Tamil Guy (மதுரை தமிழ்காரன்)
http://avargal-unmaigal.blogspot.com

ஹேமா said...

படமே கவிதை சொல்லுது பிரஷா.உங்க மனநிலையைச் சொல்லுது !

மாய உலகம் said...

//நீ
இன்று மெளனத்தினால்
காதல் மொழி பேசுகையில்
சோர்வடைந்து போகுதடி
என் இதயம்...//

nice

மாய உலகம் said...

//என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று
துரோகியாய்.....//

வரிகள் காதல் வலிகள்... அற்புதமான காதல் feeling கவிதை... நல்லாருக்குங்க வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

உங்க டெம்ப்ளேட் அழகாருக்குங்க

the critics said...

காதலில் இது நடைபெருவது உண்டு......
நாம் பிரிந்து
பிறர் வாழ.......
நான் இன்று
துரோகியாய்........... அருமையான உருக்கமான வரிகள் ........... ரசித்தேன் கண்ணீர் துளீகளூடன்.........

thalir said...

மனதை கனக்கவைக்கும் வ்ரிகள்! கவிதை அருமை!