Monday, June 27, 2011

Share

பாசம்...


பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..

பாசம் இதன் எல்லைக்குள்
பலம் சேர்ந்து போட்டியிட
பல ஜென்மம் எடுத்தாலும்
பலியாகி போகிறது - அது
பாசத்திற்குள்ளே இங்கும்

பசியிது மறந்து
பகல் இரவெல்லாம்
பகையிது வளர்திடுமோ என
பாவையிவள் பட்ட துயர்
பகிடிக்கு கூட இந்த
பாரினில் யாருக்கும் வேண்டாம்

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்.

26 comments:

Unknown said...

//பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..//
Very nice!

Prabu Krishna said...

நந்தலாலா படத்தின் "ஒன்னுகொண்ணு துணையிருக்கும் உலகத்துல அன்பு மட்டும்தான் அநாதையா" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நல்ல கவிதை தோழி.

தினேஷ்குமார் said...

பாசத்தினால் பல வேடதாரிகளையும் அறிந்துக்கொள்ள முடியும் ....

பிரணவன் said...

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்.
அருமையான வரிகள் வாழ்த்துக்கள். . .

சக்தி கல்வி மையம் said...

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்.// அசத்தலான வார்த்தைகளின் தொகுப்பு..

MANO நாஞ்சில் மனோ said...

பாசம் பந்தபாசம்.......

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பாசக்கார கவிதை.....!!!

Anonymous said...

NICE SAYING ABOUT PAASUM

கவி அழகன் said...

பாசத்துக்குள் பாசம் பலியாகி போகிறது அஹா பலே என்ன ஒரு உருக்கமான வரி

கவி அழகன் said...

ஆம் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பாசம் வைத்து பழகுதல் வாழ்கையில் சந்தோசத்தை கொடுக்கும்
பாசம் வைத்து மோசம் செய்பவர்களிலும் பாசம் வைக்க பழக வேண்டும்

கிராமத்து காக்கை said...

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
ரசிக்க தகுந்த வரிகள்

தொடரட்டும் பாசம்

settaikkaran said...

பாசம் அதிகமானாலும் கோபம், பொறாமை வரும். ஆனால், பெரும்பாலும் அதன் இயல்பு பெருமிதப்படத்தக்கது தான். நன்று!

S Maharajan said...

//பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே......
பரிசாம் அழியாத பாசம்.//

ரசிக்க வரிகள் நன்று........

Unknown said...

பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..

Very nice & true word

பனித்துளி சங்கர் said...

அதிக பாசத்திர்க்காகத்தான் இந்த கோபமோ !? மொத்தத்தில் கவிதை அருமை

Jana said...

பசியிது மறந்து
பகல் இரவெல்லாம்
பகையிது வளர்திடுமோ என
பாவையிவள் பட்ட துயர்
பகிடிக்கு கூட இந்த
பாரினில் யாருக்கும் வேண்டாம்..

mmmmmm...

குணசேகரன்... said...

//பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

//பல ஜென்ம்//
கவனிக்கவும் தோழி.

கவிதை பூக்கள் பாலா said...

பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..


sssssss evvalavu unmai sumanthirukku intha varikalil nice

Yaathoramani.blogspot.com said...

பாசப் படைப்பும் அதற்கென
தேர்ந்தெடுத்துள்ள
படமும் மிக மிக அருமை
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.

VELU.G said...

அருமையான கவிதை

Learn said...

கலக்கல் கவிதை, உணர்வுகள் நிறைந்த வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

kowsy said...

பாசத்திற்கு எல்லோரும் பலிதான். அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்

கீதமஞ்சரி said...

பாசவெளிப்பாடு அழகிய கவிதையாய்... மிக அருமை.

நெல்லி. மூர்த்தி said...

"பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்."

மேற்கூரிய வரிகளாகட்டும், பதிவிற்கு இட்ட ஓவியமாகட்டும் மிகவும் அருமை!

மாய உலகம் said...

புனித
பரிசாம் அழியாத பாசம்.

அருமையான வரிகள்