Thursday, June 9, 2011

Share

திசைமாறும் உலகில்.!

 தனிமையில் பேசிட 
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய் 
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!

அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!

மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!

அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!

அவன் ஏக்கமாய்  நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!

மனதோடு போராடி  மரணித்த மனதுடன்  போகின்றேன் 
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு  மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று 
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!

தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல் 
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!


மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து 
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!

41 comments:

Kousalya said...

உணர்வுகளின் போராட்டம்...! அருமையாக இருக்கு தோழி...

ஜீ... said...

Nice!

நிரூபன் said...

திசை மாறும் உலகில், காதலும் விதி விலக்கல்ல எனும் நிலையினை உணர்வுகளின் வெளிப்பாடாய் உரைத்து நிற்கிறது கவிதை.

விக்கி உலகம் said...

என்னமா சொல்லி இருக்கீங்க சகோ!.... நல்லா இருக்கு!

Lakshmi said...

உணர்வுகளின் போராட்டம்
அழகா சொல்லி இருக்கீங்க.

இராஜராஜேஸ்வரி said...

மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!//

திசை மாறியது. மனம் கனத்தது.

Anonymous said...

எதிர்பார்த்த "காதலி"ல் ஏமாற்றம்....

கவிதை நல்லா இருக்கு ...

Mahan.Thamesh said...

மனதோடு போராடி மரணித்த மனதுடன் போகின்றேன்
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!
திசைமாறும் உலகில் மாறிய காதல் அருமை சகோதரி

கடம்பவன குயில் said...

கவிதை இனிமை. சொல்லாமலே முடிந்த காதல் சோகமானது. உணர்வுகளை மிகமிக வேதனையோடு கவிதைப்படுத்தியிருந்தது மிக அருமை.

இரவு வானம் said...

Super...

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

இன்பம் துன்பம் said...

என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் (மரண வலியிலும் உன்னை மறவா வலி பெரிதட )என்னொரு அற்புதமான வரிகள்.மிகவும் நன்று.வாழ்க வளமுடன் மென் மேலும் எழுத்துலகில் சிறந்து வளர வாழ்த்துக்கள்

யாதவன் said...

nice

Lingeswaran said...

கலக்கீட்டிங்க.....வலைப்பூ டிசைன் நல்லா இருக்கு.
நல்லா இருக்கீங்களா?

VELU.G said...

அருமையான வரிகள்

அழகான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Your writing style is super

செய்தாலி said...

காதல் கவியே
என்ன ஒரு கவிதை அதன் வார்த்தை கோர்வைகள் அழகு அற்புதம்
வரிகள் சுமந்து நிற்கும் உள்ளடக்கம் காவியம்

sangeesh said...

kavithaikalin varikalil puthumai arputhamana kavithai nanri kathalukku mariyathai serthulirkal

sangeesh said...

kathalin vaarthaikalukku puthu vativam arputham

bala said...

''மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.''
superb lines

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Kousalya வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌசல்யா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@ஜீ... Thanx jee

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@நிரூபன் நன்றி நிருபன்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@விக்கி உலகம் நன்றி விக்கி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்்மா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@கந்தசாமி. நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Mahan.Thamesh நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@கடம்பவன குயில் மிக்க நன்றி கடம்பவன குயில்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@இரவு வானம் thanx

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Rathnavel நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@இன்பம் துன்பம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@யாதவன் thanx yathavan

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Lingeswaran நன்றி நான் நலமே் லிங்கம்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@VELU.Gநன்றி வேலு

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@"என் ராஜபாட்டை"- ராஜா Thanx a lot

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@செய்தாலி நன்றி செய்தாலி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@sangeesh நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@bala மிக்க நன்றி பாலா

மாய உலகம் said...

//மனதோடு போராடி மரணித்த மனதுடன் போகின்றேன் //

மீண்டும் வருவேன்