Saturday, June 11, 2011

Share

இ(எ)ன்றும் காதலர்களாய்.....

பாசம் என்னும் வலையில் சிக்கி
பரி தவிக்கின்றேன் பாரினில்..
பாவங்கள் போக்கிட
பாரிகாரம் தேடுகின்றேன்...

விதி தேவன் வரைந்திட்ட
பாதை வழியினிலே
நான் கடந்திட்ட
கடின பாதைகளும் எத்தனையோ....
அன்றும் அப்படித்தான்
மனம் சோர்ந்து தவித்திருக்கையில்
கடவுளின் கிருபையால்
மண்ணுலகில் அவதாரித்த
மானுட தெய்வமாக
அன்று அவள் எனக்கு
வரமாய் கிடைத்தாள்..

அன்பு என்னும் ஒன்றுக்கு
அநாதையாய் அலைந்து
ரணமாய் போய் இருந்த
என் இதய கூட்டுக்கு
அமைதி தரும் இனியவளாய்
என்னருகில் அவள் அன்று..

பசித்தவனுக்கு பாயசம்
கிடைத்தாற் போல்
என்னுள்ளும் பல
மாற்றங்களை ஏற்படுத்திய
மகத்தான உறவான அவள்
நல்ல அம்மாவாக....
நல்ல தோழியாக..
நல்ல காதலியாக...
நல்ல மனைவியாக...

சந்தோசம் என்னும் வானில்
சிறகடித்து திரிந்த பறவைகளாய் - நாம்
காலத்தின் கோலத்தால்
பிரிவு என்னும் அரக்கானால்
திசை மாறி பறந்து
நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்
இன்றும் காதலர்களாய்.....

55 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு தோழி ... கவிதையும் யதார்த்தமாய் அசத்தல்..
இனி தொடர்ந்து வருவேன் நன்றி...

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கருன்..

மைந்தன் சிவா said...

அதே அதே..டெம்ளேட் கலக்கல்...
நான் இணைந்தேன் உங்கள் தளத்தில் ஹிஹி டெம்ளேட் மாத்தியதால் அல்ல..
ம்ம் கவிதை ரசனை வழமை போலே!

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@மைந்தன் சிவாசொல்லாமல் சொல்லுகிறீர்கள் டெம்ளட் மாத்தியதால் இணைந்தேன் என...:) தளத்தில் இணைந்ததற்கும் வருகைக்கும் நன்றி மைந்தன் தொடர்ந்து வாருங்கள்

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஅன்பு என்னும் ஒன்று
அநாதையாய் அலைந்து
ரணமாய் போய் இருந்த
என் இதய கூட்டுக்கு
அமைதி தரும் இனியவளாய்
என்னருகில் அவள் அன்று..ஃஃஃஃ

அக்கா...அருமைஅருமை...

ஆனால் எதுவும் நிலையற்றது அக்கா... கடவுள் செய்த ஒரு ஓர வஞ்சனை மற்றவர் மனம் படிக்கும் திறன் அழிக்காதது...

♔ம.தி.சுதா♔ said...

ஏன் தமிழ் மணம் வாக்குப் பட்டை இணைக்கவில்லை...

இராஜராஜேஸ்வரி said...

பசித்தவனுக்கு பாயசம்
கிடைத்தாற் போல்
என்னுள்ளும் பல
மாற்றங்களை ஏற்படுத்திய
மகத்தான உறவான அவள்//
Nice..

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@♔ம.தி.சுதா♔ உண்மை தான் தம்பி மற்றவர் மனதை படிக்கும் திறன் அழக்கப்பட்டிருந்தால் மனிதர்கள் மத்தியில் என்ன நடந்திருக்கும் ??? ஓற்றுமை அதிகரித்திருக்குமா அல்லது பிரிவுகள் அதிகரித்திருக்குமா?

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@♔ம.தி.சுதா♔ தமிழ்மணப வாக்குப்பட்டை இணைக்க வேண்டும்.. இணைக்கின்றேன்.

koodal bala said...

அருமையான கவிதை ...திறமையான எழுத்து ....

Rathnavel said...

நல்ல கவிதை.
படிக்க வேதனையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

நேசமுடன் ஹாசிம் said...

அழகான டெம்லட்
நிதர்சனமான வரிகளில் கவிதை வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்
இன்றும் காதலர்களாய்.....//

Very very touching lines.
ஆம். காதல் நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. நினைத்தாலே
என்றும், இன்றும் இன்பக்கனவுகளை தரக்கூடியவை.

நல்ல கவிதை பாராட்டுக்கள்.

யாதவன் said...

விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகுதே

ArunthA said...

காலத்தின் கோலத்தால்
பிரிவு என்னும் அரக்கானால்
திசை மாறி பறந்து
நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்

Nice word prasha acca. blog template is very nice and cool

kalamaruduran said...

நல்லா இருக்கு!!!

kalamaruduran said...

நல்ல மழை !!!

இன்பம் துன்பம் said...

நல்ல கவிதை பாரட்டுக்கள்

Ramani said...

பிரிவின் கொடுமையை படிப்பவரும்
உணரும்படியான கவித்துவமிக்க வரிகள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் said...

அருமையான கவிதை.

திசை மாறினாலும் மனம் மாறாத புதுமைக் காதல் வாழ்க!

bala said...

அருமையான கவிதை,
ஆனாலும் உங்கள் கவிதைகள் சோகம் சுமந்து வரும் காரணம்தான் என்னவோ ! படிக்கும் போது கொஞ்சம் வலியும் இருக்கு

சிவரதி said...

பாசிக்குபாற்கஞ்சியாய்
பாசமது இருந்திருந்தால்
பாரினிலே நிலைந்திருக்கும்
பாயசமாயிருந்து பாசமது
பாற்கஞ்சி அனாதனால்
பாவப்பட்டவளாய்-அவள்
அகத்தினிலே மலர்ந்திட்ட
அழ்ந்த அன்பைப்பூட்டி
அமைதி வழி விழிநீரை
அறுதலுக்கய் அழைப்பதனை
அவளையன்றி யாறரிவார்????

சி.பி.செந்தில்குமார் said...

பிரஷாக்கு லவ் ஓக்கே அகிடுச்சு போல.. க்ரீன் சிக்னல், ஜோடிப்புறா சாட்சி ஹா ஹா

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

சந்ரு said...

நல்ல வரிகள்

vidivelli said...

நல்லாயிருக்குங்க


!!நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது!!

S Maharajan said...

அருமையான கவிதை.
இனி தொடர்ந்து வருவேன்
நன்றி தோழி ...

சௌந்தர் said...

அழகிய வரிகளில் கவிதை சூப்பர்

டெம்ப்ளேட் அதை விட சூப்பர்..!!!

சே.குமார் said...

அருமை... அருமை...

Murugeswari Rajavel said...

ப்ரஷா,
அடர் இருட்டிலிருந்து,அழகிய வெள்ளைக்கு!நன்றாயிருக்கிறது.

ஹேமா said...

அழுத்தமான காதல் சொல்கிறது வரிகள் !

சந்ரு said...

//
சந்தோசம் என்னும் வானில்
சிறகடித்து திரிந்த பறவைகளாய் - நாம்
காலத்தின் கோலத்தால்
பிரிவு என்னும் அரக்கானால்
திசை மாறி பறந்து
நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்
இன்றும் காதலர்களாய்.....///

பிடித்த வரிகள்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@koodal balaநன்றி பாலா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Rathnavel வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@நேசமுடன் ஹாசிம்நன்றி நண்பரே...

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@வை.கோபாலகிருஷ்ணன்வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@யாதவன் விதியை வெல்ல முடியாது தானே யாதவன். வருகைக்கு நன்றி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@ArunthAநன்றி அருந்தா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@kalamaruduranநன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@இன்பம் துன்பம் உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Ramaniநன்றி ரமணி ஜயா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@கடம்பவன குயில் நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@balaகாரணம் எனக்கும் புரியவில்லை சகோ...))வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சிவரதி வருகைக்கும் கவியில் கருத்துரைத்த கவிக்குயிலுக்கு நன்றிகள்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சி.பி.செந்தில்குமார் எனக்கு லவ் ஒகே ஆகி 10 வருடங்கள் முடிந்து விட்டன. செந்தில் சேர்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@உலக சினிமா ரசிகன்வருகின்றேன் சகோ. உங்கள் வருகைக்கு நன்றி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சந்ருநன்றி சந்துரு

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@vidivelli உங்கள் வருகைக்கு நன்றி சகோ.. தங்கள் பக்கமும் வருகின்றேன்.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@S Maharajanஉங்கள் வருகைக்கு நன்றி மகாராஜன்...கருத்துக்கும் நன்றி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சௌந்தர் நன்றி சௌந்தர்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சே.குமார்குமார் வருகைக்கு நன்றி..

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@Murugeswari Rajavel சிறிய மாற்றம் தான் சகோ.. வருகைக்கு நன்றி சகோ

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@ஹேமா நன்றி ஹேமா அக்கா

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

@சந்ருநன்றி சந்ரு

மாய உலகம் said...

//அன்பு என்னும் ஒன்றுக்கு
அநாதையாய் அலைந்து
ரணமாய் போய் இருந்த
என் இதய கூட்டுக்கு...//

வரிகள் - வலிகள்