Friday, June 3, 2011

Share

பெண்ணின் அவலம்...


பெண்ணின் பெருமை பேசும்
இவ்வுலகின் வாழ்வுதனில்
பெண்ணின் வேதனைகள் தான் எத்தனையோ!
இளமைப் பருவ காதலுடன்
இனிமையாய் காலத்தை கழிக்கும்
கன்னியரின் கல்யாண கனவு
மணவறையுடனே மரித்திடும்
மாயம் தான் என்னவோ...

ஆண்கள் என்னும் ஆதிக்க வலையில்
பெண்ணுக்கு விலை பேசும்
பேதகர்களின் ஆசையினால்
முதிர்கன்னிகளின் வேதனைகள் எத்தனையோ?

வீதிகளின் நடக்கையில்
காமுகரி்களில் கண்ணில் பட்டு
காலமெல்லாம் கண்ணீருடன் 
காலத்தை கழிக்கும் 
பெண்கள் தான் எத்தனையோ?

சுடும் சூரியனாய் சுட்டெரிக்கும்
ஆடவன் வார்த்தைகளால்-மனம்
கல்லான பெண்கள் எத்தனையோ
கல்லறை தேடிய பெண்கள் எத்தனையோ

முகம் தெரிய புது உறவை
மணவாழ்க்கை என தேர்ந்தேடுத்து
சந்தேகம் என்னும் தீயில்
தினமும் தீக்குளித்து
பிறந்த வீட்டுமை பெருமை காக்க
தம் உணர்வுகளை தீயாக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?

இவர்கள் தான் 
பாரதி கண்ட 
புதுமைப் பெண்களா?

27 comments:

கவி அழகன் said...

பெண்களின் அவலன்ல்கள் தான் எத்தனை

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

//முகம் தெரிய புது உறவை
மணவாழ்க்கை என தேர்ந்தேடுத்து
சந்தேகம் என்னும் தீயில்
தினமும் தீக்குளித்து
பிறந்த வீட்டுமை பெருமை காக்க
தம் உணர்வுகளை தீயாக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?//

மிக ரசித்த வரிகள்...

Unknown said...

உண்மைதான்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த கவிதை ரசிக்கமுடியவில்லே...

படிக்கும் போரே வேதனை நெஞ்சம் அடைப்படுகிறது...

இதன் தாக்கம் இதன் பாதிப்பு நானும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...

அழகு வசதி படிப்பு இந்த மூன்றும் ஒன்றாக வாய்க்கும் பெண்களுக்கு மட்டுமே இவ்வுலகம் வாழ்க்கையை தருகிறது.. அதி ஒன்று குறைந்தாலும் அவ்வளவுதான....

மனசு வலிக்கிறது...

Ram said...

இப்படிலாம் கேள்வி கேட்டா நான் ஏதாச்சும் சொல்லுவேன்.. அப்பரம் ஒவ்வொரு சங்கத்தில இருந்தும் போன் போட்டு மிரட்டுவாங்க.. இதெல்லாம் எனக்கு தேவையா.? இருந்தாலும் ஓகே..

Unknown said...

வீதிகளின் நடக்கையில்
காமுகரி்களில் கண்ணில் பட்டு
காலமெல்லாம் கண்ணீருடன்
காலத்தை கழிக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?

Nice words. this is real in lot of girls life

arasan said...

சமூக அவலங்களை தாங்கிய வரிகள் தோழி ...
திருந்த முயலட்டும் ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல கவிதை

VISWAM said...

நல்ல கவிதைதான். ஆனால் தற்காலத்தில் இந்நிலை மாறத்தொடங்கியுள்ளதே. எல்லாத் துறைகளிலும் கலக்கி கல்யாணமார்க்கெட்டில் ஆண்களை அலையவைக்கிற நிலைதான் உள்ளது.

Unknown said...

ஆழமான விஷயங்களை உணர்த்தும் கவிதை சகோ!

Mahan.Thamesh said...

ஒரு பெண்ணின் வாழ்கையில் அவள் படும் வேதனைகளை கவியாக கோர்த்துள்ளிர்கள். நன்றாக உள்ளது கவி

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நல்ல கவிதை உள்ளத்து உணர்வுகளை மிக அருமையாக எடுத்துறைத்திர்கள் நன்று வாழ்க வளமுடன்.இது என்மனதில் உள்ளது,சிலபென்களே பெண்களுக்கு எதிரியாய் இருப்பதை காணமுடிகிறது.

குறையொன்றுமில்லை. said...

n நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

நல்ல அருமையான கவிதை தோழி.
ஆனால் தற்போது பெண்களின் நிலைமையில் நிறைய முன்னேற்றமும் வரவேற்கத்தக்க மாற்றங்களும் அதிகம். எவ்வளவோ மனதளவிலும் சரி பொருளாதாரத்திலும் சரி சுயமாய் முன்னேறியிருக்கிறார்கள் பெண்கள்.

கவிதை பூக்கள் பாலா said...

''இவர்கள் தான்
பாரதி கண்ட
புதுமைப் பெண்களா?''

அதே போல் இன்று பெண் சுதந்திரம் என்ற போர்வையில் சிலர் நடந்து கொள்ளும் பெண்களையும் பாரதி சொல்லவில்லை .
மாற்றங்கள் வருகிறது தோழியே கவலை வேண்டாம் கொஞ்சம் லேட் கவிதை கொஞ்ச நாள் முன்னாடி ஓகே ........ ஆனால் கவிதை வரிகளை பாராட்டியே ஆகவேண்டும்

kowsy said...

உண்மைதான். ஆயினும் ஆண்களும் தமக்காக அடுக்கடுக்காய் பல கதைகள் கூறுகின்றார்களே. பெண்கள் படுத்தும் பாடு பற்றி. ஐரோப்பிய நாடுகளில் பல கண்ணீர் கதைகள் இருக்கின்றன.

கிராமத்து காக்கை said...

இந்த அவல நிலைகள் இப்போது மாறியுள்ளது
ஆண்களுக்காவும் ஒரு கவிதை எழுதுங்கள் தோழி

ரிஷபன் said...

ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த தம்பதி.. லேட்டாய் வந்ததால் மனைவியை தெருவிலேயே நிறுத்தி வைத்த விவரம் கேட்டு அதிர்ந்து போனேன்..பெண்ணின் அவலம் இன்னமும் தொடர்கதைதான்..சில இடங்களில்

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை எத்தனை அவலங்கள்.!
பெணளின் வாழ்வை படமாகக் காட்டிவிட்டீர்கள்/.

சிந்தையின் சிதறல்கள் said...

பெண்ணின் அவலம் பாடிய வரிகள் அழகு வாழ்த்துகள்
பிரார்த்தனைகள் அத்தனையும் அகன்றிட

Geetha6 said...

நன்றாக உள்ளது

Admin said...

எத்தனை எத்தனை அவலங்கள் எத்தனை எத்தனை வழிகளில்.... பெண்ணாகப் பிறந்ததனால்

சுஜா கவிதைகள் said...

பெண்களின் அவலத்தில் கால்பங்கு தான் இது ....இன்னும் சொல்லாத அவலங்கள் பல உள்ளது தோழி ............

ஹேமா said...

பெண்ணின் உணர்வோடு உணர்ந்து எழுதப்பட்ட கவிதை வரிகள்.அருமையா வந்திருக்கு !

சரியில்ல....... said...

உங்கள் கவிதை கருத்துக்களுடன் உடன்பாடு இல்லையென்றாலும்... கவிதை ஆளுமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது... வாழ்த்துக்கள் தோழி...